(Reading time: 10 - 20 minutes)

'' ங்க துளி தண்ணி இல்லை அதனால நான் அஸ்வந்தை அங்க இப்போ அனுப்புறேன் நீங்க எதையும் யோசிக்காம கிளம்பி இங்க வந்துடுங்க ,குறைஞ்ச பட்சம் மண்டபத்துக்கு போக முடியலேன்னா வீட்டுலே கல்யாணத்தை வச்சுக்கலாம் இல்லயா '' என்றார் 

''உங்களுக்கு ஏன் சிரமம்'' என்றேன்

 '',இதில் என்ன சிரமம் ஒரு சின்ன உதவி ,கல்யாணம் நடக்கிறது என் புள்ளைக்கு ,அது நல்லா நடக்கனும் என்பது என் விருப்பமும் தானே '' என்று முடித்தார் .

அதன் பின் முக்கிய சாமான்களுடன் அவர்கள் வீட்டுக்கு சென்றதும் , ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை போனில் கடலை போடுபவர்கள் ஒருவர் பக்கம் ஒருவர் திரும்பாமல் ஓடிஓடி எங்களை கவனித்து கொண்டதும் , மறு நாள் எந்த தடங்களும் இல்லாமல் மண்டபம் சென்று கல்யாணம் முடித்த போதும் , பரவாயில்லை எல்லோரும் பெரியம்மா போல் இல்லை என்ற நிம்மதி தான் பரவியது நெஞ்சில் ,மகள் வாழ்க்கை நிறைவாக இருக்கும் என்பதுவும் தான் .

பக்கத்தில் இன்னும் லேசான டென்ஷனுடன் அமர்ந்திருக்கும் மனைவியிடம் குனிந்து

 '' நா தானே டென்ஷன் படனும் எப்படியும் இந்த கல்யாணம் நின்னுடும் தப்பிச்சேன்னு நினைச்சேன் கடைசில இப்படி ஆயிட்டுதே'' என்று கூறி அவள் சற்றே இளகி அவனை பார்த்து முறைக்க அதை கண்டுகொள்ளாமல் சிரித்தான் அஸ்வந் .

 தூங்கி கொண்டிருந்த மாதவனுக்கு சட்டென்று முழிப்பு வந்தது , எழுந்து விளக்கை போட்டால் முழங்கால் அளவு தண்ணி நின்று இருந்தது ,

'' ரேவதி எழுந்திரு தண்ணி வந்துவிட்டது வீட்ல'' என்றார் ,

இருவருமாக சேர்ந்து வெளிய சென்று பார்க்கலாம் என்று கதவை திறந்தால் மேலும் தண்ணி வீட்டுக்குள் நுழைந்தது , அதன் சீற்றத்தை தாண்டி வெளியே போக முடியாது இந்த ராத்திரியில் என்று புரிந்தது ,கஷ்டப் பட்டு கதவை மூடிய பின் தான் என்ன செய்வது என்ற பயம் எழுந்தது ,மெல்ல டைனிங் டேபிள் மீது இரண்டு சேரை எடுத்து போட்டார் ,அதன் மேல் தானும் ஏறி மனைவியையும் ஏற்றி அமர்ந்தார் , ஆனால் விதி வலியது ,மெல்ல ஏறிய தண்ணியில் பேத்தியை நினைத்தபடியே ஜல சமாதி ஆனார்கள் , அந்த மாடிப்படி மட்டும் உள்ளே இருந்திருந்தால்........

 ரிசையாய் வருபவர்களுக்கு சாம்பார் சாதத்தை ஒரு கரண்டி என்று வைத்து கொண்டே வந்தான் பாலாஜி ,

தன் முன் நீண்ட தட்டை சுமந்து நின்றது ஒரு சிறுமி ,

 ஒரு கரண்டி வைத்தபின்னும் அந்த இடத்தை விட்டு அகலாமல் நின்றாள் ,

''இன்னொரு கரண்டி வேணும் அம்மாக்கு'' 

''உன்னோட வரலையா அம்மா ''

''இல்ல தம்பி பாப்பாக்கு ஜுரம் அம்மா அவன வச்சுக்கிட்டு இருக்கு'' , 

சட்டென்று அந்த தட்டை வாங்கி மேலும் நாலு பேப்பர் தட்டை ஒன்றாக சேர்த்து அதன் மேல் தாராளமாய் சாதத்தை போட்ட பின்னும் மனசு ஆறவில்லை 

தெய்வமே இது என்ன கொடுமை , சாப்பாட்டிற்கு கை ஏந்துவது ஒரு கொடுமை என்றால் இது போல பிஞ்சு வயதில் தாய்க்கு கொண்டு செல்லும் நிலைமை அவன் நெஞ்சை அறுத்தது ,பக்கத்தில் நின்றவரிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு அந்த சிறுமியை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு அவள் அம்மா இருந்த குடுசையை அடைந்து உணவை குடுத்து அவர்களுக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்ற நிலையை கண்டு அறிந்தவுடன் தான் நிம்மதி ஆச்சு ,

"ஆக்கி இறக்க தோது இல்ல" என்றாள் சிறுமியின் அம்மா ஐோதி

அம்மா நீங்க வர வேண்டாம் , பாப்பாவையும் அனுப்ப வேண்டாம் , இங்கே சாப்பாடு கொண்டு வந்து குடுக்க நான் ஏற்பாடு பண்றேன் என்ற பின் திரும்பி வந்து விட்ட இடத்தில் வேலையை தொடர்ந்தான் .

 னக்கு ரொம்ப அவகாசம் இல்லை என்பதை கீதா உணர்ந்தாள் ,

 உடனே கணவருக்கு போன் பண்ணி ''வீட்டுக்கு வந்துடுங்க இங்க தண்ணி வேகமா ஏறுது '' என்றாள் .

''இருவது நிமிஷத்தில் வரேன்'' என்று அவர் கூறிய பிறகு , 

குழந்தைக்கு முக்கிய சாப்பாடு துணி வகையறாவை மாடியில் கொண்டு சேர்த்தாள் , அத்துடன் ஒரு இண்டக்சன் அடுப்பு எடுத்து சென்றாள் ஓரளவிற்கு சாமானை ஏறக்கட்டி விட்டு குழந்தையுடன் மாடி சென்றால் கிழே தண்ணி வெகுவாக ஏறியது .சட்டென்று கரண்ட் கட் ஆனது , ஐயோ எப்படி சமைப்பது குழந்தைக்கு , மெல்ல சிணுக்கும் குழந்தையுடன் பால்கனி வந்தால் , கிழே மூன்று இளைஞர்கள் போக கண்டாள் , எப்படியோ சைகை செய்து அவர்களை உள்ளே அழைத்து சிலிண்டரையும் அடுப்பையும் மாடியில் கொண்டு வந்து சேர்த்தாள் , அதன் பின் கழிந்த திக் திக் ஒரு மணி நேரம் , நினைவை விட்டு நீங்காதது , எப்படியோ வந்து சேர்ந்த கணவருடன் மொட்டை மாடிக்கு செல்ல , எதிர் வீட்டில் இருக்கும் நோர்த் இந்தியன் குடும்பம் எல்லாம் சரியாக இருக்கிறதா , குழந்தைக்கு சாப்பாடு வேணுமா என்று கேட்டது , அவர்களோடு அதிகம் பழகியது கூட கிடையாது , இருந்தும் அவர்கள் காட்டிய நேசம் நெஞ்சை நிறைத்தது , சாமான் இருக்கு என்ற சைகையில் காட்டி பின் வந்த போட்டில் அவர்களுடன் சேர்ந்து சென்ற போது , இதெல்லாம் கடந்த பின் ஒரு நாள் அவர்களை அழைத்து சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று நினைத்து கொண்டாள் .

 சீகரமான சென்னையை மழை புரட்டி போட்ட போது நடந்த நிகழ்வுகளில் ஒரு சில தான் இவை .

மழை பெய்து மனிதம் விளைந்தது ,இணைந்த கைகளின் உதவியால் மறுபடியும் சென்னை எழுந்து விட்டது .

This is entry #05 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.