(Reading time: 11 - 22 minutes)

முருகேசா டவுனுக்காப் போற, செத்த என்னையும் கூட்டிட்டு போய்யா’ என்று ஓடி வந்தான் மாயன் அந்த ஊர்த்தலைவரின் வீட்டில் வேலைச்செய்பவன்.

‘என்ன மாயா இம்புட்டு வேகம் வர, மெல்ல வந்தாதான் என்ன?’ என கேட்டான் முருகேசன்.

‘அட நீ ஏன்ய்யா, ராசாத்திய வேலைய விட்டு நிப்பாட்டுனதுல இருந்து எனக்கு நிக்கவே நேரமில்லை, எல்லா வேலையும் நாந்தானே பாக்கவேண்டிருக்கு’, மூச்சிரைக்க மிதிவண்டியில் ஏறிக்கொண்டே கூறினான் மாயன்.

ராசாத்திய ஏன் வேலைய விட்டு நிறுத்திட்டாரு பெரியய்யா?,

‘மூணு வாரத்துக்கு முந்தி அவ புருசன்தான் காமாலை வந்து செத்துடான்ல, அதனால முண்டச்சி கையில தண்ணி வாங்கியே குடிக்கப்புடாது அவள வேலைக்கு வச்சா சுத்தமில்லனு நிறுத்திப்புட்டாரு’ என்றான் மாயன்.

நம்ம ஊரவிட்டு எப்பதான் இந்த மடத்தனமெல்லாம் போகபோவுதோ என்ற முருகேசனின் கேள்வியினூடே டவுனை வந்தடைந்தனர்.

மாயன் தன் வேலையைப் பார்க்கச் செல்ல முருகேசன் பட்டியலிலுள்ள பொருட்களை வாங்கச் சென்றான். அனைத்தையும் வாங்கிவிட்டு தன் மகனுக்கு ஒரு ஸ்லேட்டும் வாங்கிக்கொண்டு மிதிவண்டியில் கிராமத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தான்.

மகனுக்கு மட்டும் வாங்கிட்டு மகளுக்கு எதுவும் வாங்கலயே என்பதை யோசித்துக் கொண்டே வந்தவன் எதிரே வேகமாய் வந்த லாரியை கவனிக்காமல் அதில் மோதிவிட்டான்.

சில மணிகளில் நிகழ்ந்துவிட்டது முருகேசனின் மரணம்.

ரு மாதத்திற்கு பின்,

‘அம்மாடி, வீட்டுல யாரு?’ என்ற கணேசன் சாரின் குரல் முருகேசனின் வீட்டு வாசலில் கேட்டது.

வாங்க சார், உட்காருங்க என்று திண்ணையில் பாய் எடுத்துப் போட்டாள் பரிமளா.

‘உன் மகன் குருமூர்த்திய பள்ளிக்கூடத்துல நாளைக்கு சேத்துடலாம்ல, காலையில அவன கூட்டிட்டு வந்துடு’ என்றார்.

சரிங்க சார் என்ற பரிமளாவின் பதிலினூடே ‘அம்மா அப்டினா நாளைக்கு மதியானம் நான் சோறு சாப்புடுவேனே’ , என்ற குருவின் குரல் அந்த வீட்டின் நிலையை உணர்த்தியது.

தலைவனை இழந்த குடும்பத்தின் நிலையை புரிந்துக் கொள்ள முடிந்தது கணேசனால். ‘அம்மாடி, முருகேசன் பாத்துகிட்டு இருந்த வேலையை நீ பாக்குறத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன், உனக்கு சம்மதமா?’, என்று பரிமளாவை கேட்டார்.

பிறந்த வீட்டினர் என யாரும் இல்லாததும், புகுந்த வீட்டினர் உதவ முன்வராததும், பிள்ளைகளின் எதிர்காலமும், வீட்டின் வறுமையும் பரிமளாவை சரிங்க சார் என்று சொல்ல வைத்தது.

று மாதத்திற்கு பின்,

கணேசன் போன்ற நல்லுள்ளம் கொண்ட சிலரின் உதவியாலும், பரிமளாவின் விடாமுயற்சியாலும் ஆறு மாதப் போராட்டத்திற்கு பிறகு அதே பள்ளியில் சத்துணவு ஊழியர் வேலை கிடைத்தது.

வேலையில் சேரும் தினத்தன்று மகளையும் தூக்கிக்கொண்டு மகனையும் கையில் பிடித்துக்கொண்டு பள்ளியை நோக்கி நடந்தாள்.

அங்கு ஏற்கனவே வசந்தி வந்து வகுப்பறைகளைப் பெருக்கிக்கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற பரிமளா, ‘வசந்தியக்கா நா என்ன வேலை செய்றது?’ எனக்கேட்டாள்.

‘அப்பாடி வேலைக்கு சேந்துட்டியா பரிமளா, நானும் கோமதியக்காவும் உன்னதான் பாத்துட்டு இருந்தோம். முருகேசு அண்ண இருந்தப்ப கூடமாட ஒத்தாசை பண்ணும், ஆனா இப்ப எங்க ரெண்டு பேரால சமாளிக்கமுடில. நம்ம சார் தான் சொன்னாரு சீக்கிரமே நீ இங்க வேலைக்கு வந்துடுவனு, நல்லது பரிமளா நீ அந்த காயெல்லாம் அரிஞ்சு வை, நானும் இந்த கிளாஸ கூட்டிட்டு வந்துடுறேன்’ என்று மடமடவென பேசினாள்.

மகள் செல்வியை ஓரமாக விளையாட விட்டுவிட்டு வேலையை செய்ய ஆரம்பித்தாள். குரு அவன் வகுப்பில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.

ப்படியே ஒரு வாரம் போனது.

சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்களன்று வேலைக்குச் சென்ற பரிமளாவிற்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

மதிய உணவு வேளையில் சில மாணவர்கள் சாப்பிடவராமல் நின்றுக்கொண்டிருந்தனர். ஏனென்று கேட்டதற்கு ‘அவுங்க சமைச்சா சாப்புட கூடாதுனு எங்க வீட்ல சொல்லியிருக்காங்க’ என்றனர் பரிமளாவைக் காட்டி.

ஆசிரியர் வந்து சாப்பிடச் சொன்ன பின்னரே அந்த மாணவர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

பரிமளாவின் அடிமனதில் அந்த கிராமத்தின் பழக்கவழக்கங்களைப் பற்றியிருந்த பயம் இப்போது பூதாகரமாய் நின்றது.

மறுநாளும் இது தொடர்ந்தது. நேற்றைவிட இன்று அதிகமான மாணவர்கள் சாப்பிடாமல் நின்றுக்கொண்டிருந்தனர். தலைமையாசிரியர் வந்து மாணவர்களை சாப்பிட போகச்சொல்லிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஊர்மக்கள் சிலர் பள்ளிகூடத்தின் உள்ளே வந்துக்கொண்டிருந்தனர்.

அவர்களை என்னவென்று விசாரித்ததற்கு, ‘பரிமளா ஒரு விதவை அவ எங்க பசங்களுக்கு சமைச்சு போடக்கூடாது, அது பாவம், அதனால எங்க பிள்ளைங்களுக்கு ஏதாவது ஆகிடும்’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.