(Reading time: 25 - 49 minutes)

மூடுபனி - உஷா

This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்!! பல ஆண்டுகள் கழித்து சிறுகதை எழுத முயன்றுள்ளேன். This is a holy joly Rom - Com! Just for a positive feel!!! Happy reading! 

வனின் மனம் முழுவதும் அவள் நினைவுகளே. அவளை பார்த்து ஒரு மாதம் தான் ஆகிறது என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதத்திலேயே பல வருடங்களாக அவனுக்கு உயிராக இருக்கும் பெற்றோர் தங்கையை போலே அவள் அவனுடைய மனதிற்கு வெகு நெருக்கமாகி இருந்தாள். பெற்றவர்கள் பேசி திருமணத்திற்கு தேதியும் நிச்சயத்திருந்தார்கள். இப்போதெல்லாம் அவனுக்கு அவளின் நினைவு மட்டுமே. இப்போது கூட அவனுக்கு முன் இருந்த பைக்கில் இருப்பவள் அவளாகவே அவனுக்கு தெரிந்தாள். ச்சேச்சே அவளாவது இப்படி இன்னொருவனுடன் நெருக்கமாக பைக்கில் பயணம் செய்வதாவது... அவன் நினைத்து முடிக்கும் முன் பைக்கில் இருந்தவள் திரும்பினாள். அது அவளே தான்...

ருள் கவ்வ ஆரம்பித்து இருந்த வேளையில் மெழுகு சிலை போன்ற அவள் முகம் நன்றாக தெரிந்தது... காற்றின் வேகத்தில் முகத்தில் வந்து விழுந்த கற்றைக் கூந்தலை விளக்கி விட்டவள் பின்னால் வந்தவனை கவனிக்கவில்லை..

ஆனால், இவன் கண்ணில் பட்டு விட்டாளே!!!

moodupani‘என் ரசி இன்னொருத்தன் பைக்கிலா.. ‘,

என்று எண்ணும் பொழுதே, முன்னே சென்ற அந்த பைக் ஒரு ஸ்பீட் ப்ரேக்கரை கடக்க... அவள் இன்னும் நெருக்கமாய்...

அந்த காட்சியை பார்க்க முடியாமல் கண்களை அவளிடமிருந்து அகற்றியவனுக்கு இதயம் வெடித்து விடும் போல இருந்தது..

யாருக்காகவும் , எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாதவனாய்  உயிரோடும் உணர்வோடும் பிணைந்து போயிருந்தாளே அவன் ரசி என்ற இளவரசி..

“ரஞ்சி மிஸ், உங்க பையன் லைஃப்ல இன்னைக்கு ஸ்பெஷல் டே! என்னன்னு அவரை கண்டுபிடிச்சு எனக்கு போன் பண்ண சொல்லுங்கன்னு  எனக்கு ஃபோன் பண்ணாடா இளவரசி!!!! சொல்ல மறந்துட்டேன்!!!”,

பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த அவன்  தாய் ரஞ்சிதம் சொன்னது இவன் காதில் விழுந்தாலும்.. கருத்தில் பதியவில்லை!

எப்படி பதியும்? இவன் மனம் கொதிகலனாய் கொதித்து கொண்டிருந்ததே!

‘ச்சே... எங்கம்மா உன் பேரை சொன்னாளே உருகுவாங்களே...  உன்னை மட்டும் இப்படி பார்த்தா உடைஞ்சே போயிடுவாங்க’,

தான் உடைந்து கொண்டிருப்பதை அறியாமல் தாய்க்காக அவன் உள்ளம் வருந்த.. 

அனிச்சையாக அவன் கை பிரேக்கை அழுத்தி வேகத்தை குறைத்து  மாற்றுப் பாதையில் வண்டியை செலுத்த.... அவன் கண்ணில் இருந்து முற்றிலுமாக மறைந்து விட்டாள். இப்பொழுது தற்காலிக நிம்மதி!!!!

பைக்கை ஓட்டிய சின்ன கண்ணனின் மனம் இரண்டு மாதம் பின்னோக்கி சென்றது...

அந்த இரவு பொழுது, கிரிக்கெட் மேட்ச்சை பார்த்த படி தொலைக்காட்சி முன் இவன் அமர்ந்திருக்க.. அப்பொழுது தான் கோவிலுக்கு சென்று திரும்பிய அவன் அன்னை ரஞ்சிதம், வீட்டிற்குள் நுழைந்தவுடனே,

“கண்ணா... நாம மதுரையில் இருக்கிறப்போ  அப்பா கூட வேலை பார்த்தாரே சரவணன் சார் உனக்கு நினைவிருக்கா?”, என்று இவனிடம் வந்து கேட்க, அவனுக்கு ஏதோ கேள்வி பட்ட பெயர் போல இருக்கிறதே என்று தான் முதலில் தோன்றியது...

சின்ன கண்ணனின் தாய் தந்தையர் இருவருமே அரசு பள்ளி ஆசிரியர்கள். மதுரையில் தெளிந்த நீரோடை போல அமைதியாக சென்று கொண்டிருந்த அந்த காலம் அவர்களுக்கு வசந்த காலம். அது காலனுக்கு பொறுக்கவில்லை போலும்! அவன் தந்தைக்கு புற்று நோய் வந்த வேகத்திலே அவர் உயிரை பறித்தும் கொள்ள, தலைவனை இழந்து பரிதவித்தது அந்த குடும்பம்!

அதன் பின் ரஞ்சிதம், மதுரையை காலி செய்து, தன் அண்ணன் இருந்த ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று விட்டார்.

தாய் சொன்னதும், சிறு வயதில் தான் கண்ட அந்த மதுரை அரசினர் பள்ளி கண்ணனின் நினைவில் விரிய,

“சரவணன் சார்.... “, என்று யோசித்தவன்,

“அந்த முறுக்கு மீசை வைத்திருப்பாரே.. அப்பாவோட ஃப்ரண்ட்”, என்று தன் நினைவில் வந்த உருவத்தை நினைவு கூர்ந்து,

“என்னம்மா.. அவர் பொண்ணுக்கு மாப்பிள்ளை கீப்பிள்ளை பார்க்கிறாங்களா?”, என்று குறும்புன்னகையுடன் கேட்ட படி தாயை ஏறிட,

திகைப்பும் வியப்புமாக ரஞ்சிதம் அவனைப் பார்த்தார். அவர் சொல்ல வந்த விஷயமும் அது தான்.

“எப்படிடா.. கரெக்ட்டா சொல்றே??!!!!”

“கோவிலுக்கு போனா ஒரு மணி நேரத்தில் வந்துடுவீங்க.. நீங்க வர்றதுக்கு இரண்டரை மணி நேரம் ஆகியிருக்கே.. சோ.. சரவணன் சாரை பார்த்து இருக்கீங்க! உங்க மகனுக்கு பொண்ணு பார்க்கிறேன் இலவச விளம்பரம் கொடுத்து இருப்பீங்க...“,

“இதை சொல்றதுக்கு யோசிக்கணும்னு அவசியமே இல்லை! ஆனா, அவர் வீட்டில் பொண்ணு இருக்கிற விஷயம் உங்க முகத்தில் தெரியுதே ஒரு தேஜஸ்! அதை வைச்சு கெஸ் பண்ணேன்”, என்று சிரித்துக் கொண்டே அவன் சொல்ல...

மகனின் சாதுர்யத்தில் பூரித்தவராய்,

“அது என்னமோ உண்மை தான்.. சரவணன் சார் குடும்பத்தோட கோவிலுக்கு வந்திருந்தார். அவர் பொண்ணு இளவரசி, என்னோட ஸ்டூடன்ட். சின்ன வயசுல ரஞ்சி மிஸ்ன்னு காலையே சுத்தி வருவா, சரியான சுட்டி!”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.