(Reading time: 22 - 43 minutes)

து அவளுக்கு கெட்ட நேரமா என்னவோ, வினோத் கண்ணில் பட்டு விட்டாள்..

அவனும் அவள் தனியாக வந்த இந்த தருணத்தை விட தயாராக இல்லை. இன்று எப்படியும் தன் காதலை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும் என்பதில்  உறுதியாக இருந்தவன்.. அவளை வழி மறிந்து,

“ஸ்கூல் பர்ஸ்ட் வந்தா மட்டும் போதாது... லவ் விஷயத்திலயும் பர்ஸ்ட்டா இருக்கணும்! ஒன்னு ஐ லவ் யு சொல்லிட்டு போ..”

என்று மிரட்ட, எரிச்சலாக வந்தது பானுவிற்கு.

“இதோ பார். நான் டாக்டராகி நிறைய சாதிக்கணும்னு இருக்கேன்! ”, பேச ஆரம்பித்தவளை இடை மறித்து..

“சரி விடு... எங்கிட்ட இதை வாங்கிட்டாவது போ”, என்று முத்தமிடுவது போல உதட்டை குவித்து அவளை நெருங்க...

சிறு பெண் மிரண்டாள் அவன் செயலில்! தன்னை காத்துக் கொள்ள அனிச்சை செயலாக நெருங்கி வந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட...

அதை எதிர்பார்க்காதவன் சுதாரிக்கும் முன்னே, வேக வேகமாக சைக்கிளை அழுத்தி வீடு வந்து சேர்ந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது..

அழுது கொண்டே தன் தந்தையிடமும், தாயிடமும் வினோத் பற்றி மனம் திறந்தாள். மகளை சமாதானம் செய்தவர்கள், கோபத்துடன் அவன் பெற்றோரிடம் முறையிட..

என்ன நடந்ததோ.. அதன் பின் அவன் தொல்லை இல்லை!

நல்ல கட் - ஆப் வைத்திருந்ததால், அவள் கனவு போலவே சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அந்த கல்லூரியில் சேர்ந்து இரண்டு மாதமாகியிருந்தது!

இரண்டு மாதம் கழித்து தான், அவளுக்கு ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது! வீட்டை பிரிந்ததில் வாடி இருந்தவள், அத்தனை ஆசையாய் ஊருக்கு கிளம்பினாள். ரயிலில் வந்து இறங்கியதும், வீட்டிற்கு செல்ல ஆட்டோக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தவளை அழையா விருந்தாளியாய் எதிர் கொண்டான் அந்த வினோத்!!!!

‘இத்தனை நாள் கழித்து, மீண்டும் வந்திருக்கிறானே! அன்னைக்கு மாதிரி ஏதாவது செய்யப் போறானா’, என்று இவள் குலை நடுங்க அவனைப் பார்க்க,

“என் முதல் காதலை அழிச்சிட்டு, நீ மட்டும் நல்லா வாழ்ந்திடலாம்ன்னு நினைக்கிறியா?”

“நாலு வருஷம் உன்னை நினைச்சு ஏங்கினதுக்கு.. ரோட்டில் என்னை அவமானப்படுத்தினது மட்டும் இல்லாம, எங்க வீட்டில் உள்ளவங்ககிட்ட என்னை கேவலப்படுத்தி... நான் பட்ட பாடை கொஞ்சமாவது நீ அனுபவிக்க வேண்டாம்???!!”, என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கி..

அந்த அமில முட்டையை அவள் மீது  எரிந்து விட்டு பறந்து விட்டான்...

கொசுக்கடிக்கு கூட தாளாது சிவந்து வீங்கிவிடும் பானுவின் தோல், அந்த அமிலம் பாய்ந்த இடமெல்லாம் கருகி போனது.. முகத்தின் கீழ் பாதியில் துவங்கி அவள் உடலின் ஒரு பகுதி அமில தாக்குத்தில் உருக்குலைந்தது..

அவள் எதிர்காலம், அவள் குரல் வளம், அவள் உருவம் என எல்லாத்தையும் ஒருவனின் வெறி செயல் பலி கொண்டது!

பானு சிகிச்சை பெற்று கொண்டிருந்த சமயம், வினோத் மேல் சட்டபடி நடவடிக்கை எடுக்க முயன்றனர்! இரண்டு வருடம் ஓடினாலும், அவன் பிடிபடவில்லை!

காரணம் அவன் பணக்காரன்! சட்டத்தின் ஓட்டைகளை தனக்கு சாதகமாக்கி தப்பித்து விட்டான்..

‘ஏன்ம்மா, அவங்ககிட்ட காசை வாங்கிட்டு ஒதுங்க வேண்டியது தானே! எப்படியும் தோத்து போகப் போறீங்க’, எகத்தாளமாக சிரித்தான் வினோத் தரப்பு வக்கீல்!

அந்த வக்கீல் சொன்னது உண்மை தான்! தோல்விக்கு பிறகு, நிதர்சனம் புரிந்தது பானுவிற்கும், அவன் பெற்றோருக்கும்!

தவறுகளை செய்து விட்டு எத்தனையோ வினோத்கள் இந்த நாட்டில் உலவி கொண்டு இருக்கின்றனர்! மருத்துவம் உயிரை காப்பற்றும்! உரிமையை சட்டம் தானே காப்பாற்ற வேண்டும்?

சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி ஒரு தப்பிக்கிறானாம்! வலையில் கூட தான் ஆயிரம் ஓட்டைகள் இருக்கிறது!  அதற்காக மீன் பிடிக்க உதவாது என்று யாரும் தூக்கி போடுவார்களா?

தவறு சட்டத்தில் இல்லை! அதை உபயோகிப்பதில்! எந்த சட்டத்தால்  ஒருவரை தப்ப வைக்க முடியுமோ அதே சட்டத்தால் ஒருவரை சிக்க வைக்கவும் முடியும்! அப்படி முடியாத பட்சத்தில், குறைந்த பட்சம் தப்பு செய்தவனை அலைகழிக்காவது முடியும் அல்லவா! நாம் இழந்த நிம்மதியை துளி அளவாவது அவனையும் இழக்க வைக்கும் அல்லவா!

இப்படி தான் யோசித்தாள் பானு! மருத்துவ படிப்பை ஒதுக்கி விட்டு சட்டம் பயில முடிவெடித்தாள்...

அந்த வெறியன் அவள் அடையாளத்தை சிதைத்த பின்பு, அந்த வலியை விட, மற்றவர்களின் பரிதாப பார்வையும், கேள்விகளும், அறிவுரைகளும் அதற்கும் மேலே,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.