(Reading time: 6 - 12 minutes)

நாலு நாட்கள் கழிந்து விட்டன, பிள்ளைகள் இன்னும் என்னுடன்  கதைப்பதில்லை. மிகவும் கோபமாக இருக்கிரார்கள். என் கிரிக்கெட் பேட்டை அப்பா ஆத்திரத்தில் அடித்து உடைத்தது ஞாபகம் வந்தது. எவ்வளவு துக்கப்பட்டிருப்பேன்!. அதை யோசிக்கச்  சஞ்சலமாக இருந்தது.  

நண்பர்களுக்கெல்லாம் ஹாக்கி மேட்ச்க்கு  போவதை பற்றி புகழ்ந்து விட்டு மேட்ச் பார்கவில்லை என்றால் எவ்வளவு அவமானமாக இருக்கும்!.  பிள்ளைகள் மனதைப் புண்படுத்தி விட்டேன் என்ற கவலை!.

தொலைபேசி அடிக்கிறது! நிருபர் என்னைப் பார்க்க வரப்போவதாக கூறுகிறார். மருத்துவமனையில் இருந்து வந்து விட்டார் போல!. வரச்சொன்னேன்!. சுகம் விசாரித்தேன்! தனது உயிரைக் காப்பதியதற்காக  நன்றி கூறினார்.  “அது எனது கடமை” என்று கூறினேன்!

முக்கியமாக, தன மனைவியிடம் இருந்தும் அவரது மணவாழ்க்கையில் இருந்தும் தன்னை காப்பற்றியதற்காக என்னை கட்டிப் பிடித்து நன்றி சொன்னார். எனது அறையில் இருந்த அவரது பொருட்கள் இருந்த பெட்டி ஞாபகம் வந்தது! . எடுத்து கொண்டு அவரிடம் வந்தேன். ``அந்த பெட்டி எனக்கு வேண்டாம் நான் அந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் விட்டுவிட்டேன்”`என்றார்.

கையில் இருந்த என்வேலோப்பை என்னிடம் தந்தார்! “`இது உங்களுக்கு ஒரு அன்பளிப்பு” என்றார்.  “எனக்கு இது ஒன்றும் வேண்டாம்” என்றேன்!. என் ஷர்ட் பையில் போட்டு விட்டு , “மனைவி எனக்காக காத்திருக்கிறாள்” என்று கூறியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.

எனக்கு என்ன வந்ததோ தெரியவில்லை அன்று நாலு மணிக்கே வீட்டுக்கு புறப்பட்டேன். மனைவியும் பிள்ளைகளும் என்னை ஆச்சரியத்தில் பார்த்தார்கள்!.மனைவி என்னை நம்பவில்லை!

உடுப்பைக் கழத்தினேன்!. பையில் இருந்து என்வெலோப் நிலத்தில் விழுந்தது கூட எனக்குத்தெரியாது!

மனைவி கொண்டுவந்த தேனீரை அருந்தத் தொடக்கினேன். பிள்ளைகள் கூச்சு க்குரலில், ஆரவாரமாக கத்திய படி என்னை வந்து கட்டிப் பிடித்தார்கள். என்னை முத்தமிடுவதும், சந்தோசத்தில் துள்ளுவ தும், கத்துவதுமாக இருந்தார்கள். நாலைந்து நாட்கள் இல்லாத சந்தோசம் அவர்களுக்கு. எனக்கு நன்றி! நன்றி! என்று கூறியபடியே செல்போனில் நண்பர்கள் எல்லோரையும் அழைக்கத் தொடங்கி விட்டார்கள்.   

என் கண்களில் கண்ணீர் வரத்தொடங்கியது, அதை அடக்கிக் கொண்டு, அவர்கள் கையில் இருப்பதை கவனித்தேன். அப்போதுதான் அவர்கள் உற்சாகத்துக்கு காரணம் புரிந்தது.

மிக விலை உயர்ந்த ஆசனங்களுக்கான ஐந்து “ப்ளூ ஜே” ஹாக்கி டிக்கட்டுகள்!. அதுவும் ஐஸ் ஹாக்கி சாம்பியன் மாட்ச்சுக்கு!

இச்சிறுகதையில் வரும் எல்லாம் கற்பனையே. ஒருவரையும் குறிப்பதில்லை .

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.