(Reading time: 2 - 4 minutes)

உப்பா ???? சர்கரையா ????? - கிருத்திகா

Salt Sugar

ந்த கல்யாணத்துக்கும் முன்னாடி ஸ்கூல் லைப் கு அப்புறம் இருக்க வாழ்க்கை இருக்கே அதவிட கொடுமை ஆனது எதுவுமே இல்லை 

8 மணி வரைதூங்கி அமம்வின் கொஞ்சலில் காபி குடித்து சுடசுட வெல்ல வெளேர்னு மல்லிபூ இட்டலி அப்டியே தொட்டுக நல்ல பழுத்த தக்காளி சிவப்பில் உரைப்ப கார சட்னி ( நல்லெண்ணெய் விட்டு)....இளம் பச்சை நிற மல்லி துவையல் ..மணக்கும் கொத்தமல்லி போடி ( நெய் சேர்த்து) ---( எல்லாம் வீட்டில செய்தது அம்மா கையால செய்தது ...அப்படியே இன்னைக்கு பறிச்ச மஞ்சல விள்ளகேன்னை ஊத்தி அரச்சா ஒரு மஞ்சள் கலர் வருமே அந்த கலர்ல பாசிபருப்பு சாம்பார் அப்படியே கடுகு கருவேப்பிலை மிதக்கும் பாருங்க அந்த அழகுக்காகவே நான் 10 இட்லி சாப்பிடுவேன் ( கிளாசில் தூங்கி தோப்புகரணம் போதாது தனி கதை .

படிச்சி முடிச்சி வேலைக்கு வந்தாச்சு .... ஷிபிட் கணக்கில் வேலைக்குபோய் ..வேந்தும் வேகாத இட்லி ... ஐயோ கடை சாம்பார் பத்தி கேட்கவே வேண்டாம் ... நைட் காஞ்சுபோன சப்பாத்தி 

சரி இதை சரி செய்ய என்ன வழின்னு பாத்தா  கல்யாணம் தான் ... ஆன  போனவாரம் தான அம்மா கிட்ட பேசும்போது இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன் .. இப்போ எப்படி தன்மானத விட்டு பேசுறது 

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் ஒரு ஐடியா 

"சிக்கன் கிரேவிக்கு எவ்வளவு சர்க்கரை போடனும்ன்னு அம்மாட்ட போன் பண்ணி அப்பாவியாக் கேட்டேன்.பையன் தனியா ரொம்ப கஷ்டப்படுறான் போலன்னு பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க". 

இப்படி ஒரு பதிவு பார்த்தேன்.யார்ன்னுத் தெரியல. 

நல்ல ஐடியாவா இருக்கேன்னு எங்க அம்மாட்ட போன் பண்ணி கேட்டா,"ரெண்டரை கரண்டி போட்டுக்கோ,பத்தலன்னா இன்னொரு அரைக் கரண்டி சேர்த்துப் போட்டுக்க"ன்னு சொல்றாங்க.  

எங்க போயி முட்டிக்கிறதுன்னுத் தெரியல.....

ஆனா அவ ஏன் அம்மாவாச்சே என்னை தெரியாதா ????

இன்னைக்கு தாங்க பொண்ணு போட்டோ ஈமெயில் வந்துச்சி .. இப்போ ஊருக்கு பொண்ணு பாக்க போட்டு இருக்கேங்க  பத்திரிகை அனுபுறேன் கல்யாணத்துக்கு வந்துடுங்க ...

(எனக்காக இல்லைனாலும் எங்க அம்மா இட்லி காக .. உங்களுக்கு பசிக்குதுன்னு உங்க முகத்த பாத்தாவே  தெரியுதே ) 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.