(Reading time: 11 - 21 minutes)

லாஸ்ட் மந்த் அக்ஷய் மேரேஜிக்கு போக முடியாம மிஸ்ஸாயிடுச்சிடா…… இப்போ அவந்தான் போன் செஞ்சிருந்தான். ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில தங்கியிருக்கிறானாம். என்னைப் பார்க்கணும்னு கூப்பிட்டான், நான் இங்கே இருக்கிறதா சொன்னேனா, அதான் உன்னையும் கூட்டிட்டு வரச் சொன்னான்.

“இப்போ எதுக்குடா அவனை போய் பார்த்துட்டு…….”

“ இல்லைடா அவனுக்கு இன்னிக்கு நைட் ஃப்ளைட். அவங்கதான் அப்ரோட் செட்டில் ஆயிட்டாங்கனு உனக்கு தெரியுமே?, இப்போ பார்க்காட்டா எப்படி?”

‘சரி போகலாம் நீ ப்ரியாவை அங்கயே வரச் சொல்லிடேன்” அவனைப் பார்த்து பேசினதுக்கு அப்புறமா நாம மூணு பேரும் உட்கார்ந்து பேசலாம். இப்பவும் நான் சொல்றேன் இந்த விசாரணை எல்லாம் தேவையேயில்லை, ப்ரியா என் தங்கை மாதிரி, அவ நல்லப் பொண்ணுடா……….

நீ இப்ப பேச்சை மாத்தாதே, சரி நீ சொன்னா மாதிரி ப்ரியாவை வரச் சொல்லுறேன்.’

வர்கள் இருவரும் அக்ஷயை சந்தித்து பேசி திரும்ப வரும் போது அக்ஷயின் மனைவியும் அவர்களோடு இணைந்துக் கொண்டாள். அவர்கள் இருவருக்கும் ஷாப்பிங்க் கொஞ்சம் செய்ய வேண்டியிருந்தததால் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தனர். விடைக் கொடுக்கும் விதமாக மகேந்திரனும், வசீகரனும் அவர்களோடு கூட கார் பார்க்கிங் வரையிலாக உரையாடிக் கொண்டே செல்கையில் எதிரில் ப்ரியா வந்துக் கொண்டிருந்தாள்.

முதலில் அவளது உற்சாக “ஹாய்” தான் அவர்களது காதில் விழுந்தது. இவ்வளவு உற்சாகமாக அவளைப் பார்த்திராததால் ஆச்சரியமாக நின்றுக் கொண்டிருந்தான் மகேந்திரன். அருகே வந்தவள் அதே உற்சாகத்தோடு அங்கு நின்றுக் கொண்டிருந்த அக்ஷயின் மனைவியின் கரங்களைப் பற்றிக் கொண்டாள்.

“வாட் அ பிளஸ்ண்ட் சர்ப்ரைஸ் “……இருவரும் சற்று அளவளாவிய பின் தான் தத்தம் கணவர்கள் ஞாபகம் வந்ததோ என்னமோ…….முதலில் ஒருவருக்கொருவர் த்த்தம் கணவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர்.

பின்னர் ப்ரியா மகேந்திரனிடம்

“ எங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, என்னனு சொல்லுங்க பார்க்கலாம், எங்க ரெண்டு பேரு பேருமே ப்ரியா இனிஷியலும் சேம், சேம். அதான் கன்ஃப்யூஸ் ஆகாம இருக்கிறதுக்காக எங்க ப்ரொபசர் இவளுக்கு ப்ரியா T னு பேர் வச்சிட்டாரு, மேடம் இந்த பேர்ல செம ஃபேமஸ் தெரியுமா?”

இருவரும் மறுபடி கலகலவென்று உரையாட வசீகரன் மகேந்திரனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. மனைவியின் வெள்ளைச் சிரிப்பில் மகேந்திரனிடமிருந்து சந்தேகம் என்னும் மேகம் மெதுவாக கலைய தொடங்கியது.

பின் குறிப்பு: நான் இந்தக் கதையில் வரும் எந்த தவறான கதாபாத்திரத்தையும் ஆதரிக்கவில்லை.. இந்தக் கதையின் நோக்கம் தற்கால நிலவரம், அதன் பாதிப்புக்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என்பதே ஆகும்

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.