(Reading time: 8 - 16 minutes)

ண்ணி, காபி கப்புகள் அடங்கிய டிரே யுடன்  வந்து என்னை ஹாலிற்கு அழைத்து சென்றார்கள். அங்கு எல்லோருக்கும் காபி கொடுத்த பின், தனி சோபாவில் அமர வைத்தனர்.

ஒவ்வருவரும் ஒரு கேள்வி , காலேஜ் , ஹாபி , கேட்டபின், பெரியாப்பாவோ , எங்க ஸ்னேஹா ரொம்ப நல்லா படிப்பா, வீணை வாசிப்பா, நல்லா பாட்டு பாடுவா என, நான் எல்லா கிளாஸ்க்கும், அரை, குறையாய் சென்றதை மறந்தது என் கோ.பா.சே  வாக மாறி ஒரேடியாக அளந்து விட்டு கொண்டிருந்தார்.

அதன் உச்சகட்டமாக, “சினேகா ஒரு பாட்டு பாட்டு பாடுமா “ என கூறி என்னை எவரெஸ்ட் உச்சியில்லிருந்து தலை கீழாக தள்ளி விட்டார்.

ஒரு நிமிடம் அறையே பின் டிராப் நிசப்தமாகியது.

எனக்கு ஆ...... என்று கத்த வேண்டும் போல் இருந்தது. அதையும் இந்த பெருமை பெரியப்பா எதாவது சொல்வாரே  என்று, அங்கிருந்த எனது அண்ணன் சுகுமாரை, என்னை காப்பாற்ற சொல்லி கண்ணாலேயே கெஞ்சினேன்.

ஆனால், அவனோ பெரியப்பா பேச்சை தட்டாத பிள்ளையாய், மௌனமாக இருந்தான். என்னவோ அவர் இவனுக்கு சொத்தை எழுதி வைக்க போவது போல்....... அப்பாவோ, அப்பொழுது தான் ராமரின் தம்பி லட்சுமனனாய் மாறி அண்ணன் சொல் மிக்க மந்திரமில்லை என்று பேசாமல் அமர்ந்திருக்க.....

என்னக்கு தான் எங்காவது ஓடி போய்டலாம் போல் இருந்தது.

ஒரு கணம்  கண்ணை மூடி அமர்ந்திருந்த பொழுது அசிரிரி குரலாய்......

“இன்னொரு நாள் பாடட்டும் பெரிய மாமா”

கண்ணை திறந்து பார்த்தால் நம்ம ஹீரோ தான், என் பெரியப்பா எப்போ இவருக்கு மாமாவானார் என்று நான் யோசித்து கொண்டிருகையில்.........

அம்மா வந்து உள்ளே அழைத்து சென்று விட்டார்கள். அப்பாடா, ஏதோ பெரிய நுழைவுத் தேர்வு எழுதி முடித்த நிம்மதி.......

வெறும் ஐந்தே நிமிடம் நீடித்த நிம்மதி, நில நடுக்கதிற்கு  பின் வந்த சுனாமியாய், கல்யாணம் முடிவானது. யாரும் என்னை கேட்கவில்லை, அவர்களை பொறுத்தவரை .........

மாப்பிள்ளை நன்றாக படித்திருக்கிறார், பார்க்க ஆறு அடியில் அம்சமாக வாலி பட அஜீத் போல் அழகாக இருக்கிறார். கை நிறைய சம்பாதிக்கிறார்.

என் படிப்பை பற்றி தான் யாருக்கும் கவலை இல்லை.

அன்றே பூ வைத்தார்கள், ஒரே வாரத்தில் திருமணம், மாமனாருக்கு கல்யாண மண்டபம் இருப்பதால் அந்த பிரச்சனையும் இல்லை. திருமணம் முடிந்தவுடன் அவருடன் maldives கிளம்ப வேண்டும்.

“பாஸ்போர்ட் இருக்கிறதா? இதை மட்டும் என்னிடம் கேட்டார்கள். கல்லுரிலிருந்து சென்ற வருடம் சிங்கபூர்க்கு  சுற்றுலா அழைத்து சென்ற போது எடுத்தது.

சிங்கப்பூர்க்கு ஆசை பட்டு இப்போ சிக்கிப்பேணு யாருக்கு தெரியும்.

திருமணமும் முடிந்தது, இருந்த நான்கு நாட்களில் புகுந்த வீடு, உறவினர் வீட்டு விருந்து, கொஞ்சம் ஷாபிங் என இங்கு வந்தும் சேர்ந்தாச்சு. இதில் அவருடன் பேச கூட நேரமில்லை.

ரவு உணவு வாங்கி வந்து சாப்பிடும் நேரம்,

ஜெய் “ சாரிடா , உடனே இங்க வந்து வேலையில் சேர வேண்டி இருந்ததால், திருமணத்திற்கு நேரம் ஒதுக்க முடியலை. உனக்கும் கல்லூரி முடிந்ததுன்னு சொன்னாங்க அதான்.........

இங்க நம்ம ரெண்டே பேர் தான் , அதனால மெதுவா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கலாம்.

ஓகே இப்ப சொல்லு “உனக்கு என்ன எல்லாம் பிடிக்கும்?

ரொம்ப சீக்கரமா  கேட்டுடிங்க .......... எனக்கு படிக்க பிடிக்கும்.........

ஒ “மேல படிக்கனும?..........

BE ல் மூனாவது வருஷத்திற்கு பிறகு நாலாவது வருஷம் படிக்கணும்.

நாங்க வந்த அன்று “ நீ கடைசி பரிட்சை முடித்து வந்ததாக கூறினார்கள், “ நானும் , நீ படித்து முடித்து விட்டதாக நினைத்தேன்.

நல்லா நேனைசிங்க , சுரைகாக்கு உப்பிலைன்னு ...........

யாருக்கும் என்ன பத்தி கவலை இல்லை, எங்க வீட்லேயும் சரி உங்களுக்கும் .......... சொல்லும் போதே கண்ணீர் விழி ஓரத்தை எட்டி பார்த்து. டக் என்று எழுந்து ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டு கொண்டாள்.

று நாள் காலை எழுந்து வந்து பார்த்த போது சாப்பாட்டு அறையில் மேஜை மேல் எதுவும் இல்லை. எல்லாம் சுத்தமாக துடைத்து வைக்க பட்டிருந்தது. கொஞ்சம் குற்ற உணர்வாக இருந்தது.

சரி காபி போடலாம்னு பார்த்தா பால் எப்போ வரும்னு தெரியல........

ஹே குட் மார்னிங்டா ........ என்று இரவு ஒன்றுமே நடக்காதது போல் வந்த ஜெய்யின்  சிரித்த முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

இங்க எல்லாம் காலையில் பால் பாக்கெட்டு வராது , எல்லாம் பால் பவுடர் தான். ரொம்ப நல்லா இருக்கும்.

வெள்ளி கிழமை தான் இங்க வார விடுமுறை. அன்று பக்கத்தில் உள்ள ரேசாடிற்கு போகலாம். உனக்கு ஓகேவா ?

ம்...... என கூறி சமையலை துவங்கினாள் ஸ்நேகா.......

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.