(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 56 - என் கணவன் என் தோழன்  - பூஜா பாண்டியன்

This is entry #56 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை -என் கணவன் என் தோழன்

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

Maldives (மாலத்தீவு ) International ஏர்போர்ட், வந்து இறங்கியவுடன் ஒன்றும் புரியவில்லை சிநேகாவிற்கு, உடன் கணவன் டாக்டர்.ஜெய் இருந்த பொழுதும்........ திருமணம் முடிந்து நான்கே நாட்களில், தெரிந்த உறவுகள், ஊர், நண்பர்கள் அனைத்தையும் விட்டு, இந்த தேசத்தில்..........

சென்னையிலிருந்து விமானத்தில் இரண்டரை மணி நேர பயணமே என்றாலும் , முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மிகவும் சுத்தமாக..... மிகவும் சிறியதாக .......“திவைஹி” என்ற மொழி பேசுகிறார்கள். ஏர்போர்ட் தனி தீவில் உள்ளது. அங்கிருத்து பெரிய படகில் தலை நகர் “மாலே” வை  சென்றடைந்தோம். அங்கே ஜெட்டியிலிதுந்து காரில் பத்தே நிமிடத்தில் வீடு வந்தடைந்தோம்.

பத்தாவது மாடியில் வீடு,

ஜெய் “ வீட்டுக்குள் முதல் முறை , புதுப் பொண்ணை இந்த ஊர் வழக்கப்படி மணமகன் தூக்கிட்டு தான் வரணும் ..... வரட்டுமா? என்று கண்ணோரம் குறும்பு மின்ன கேட்டதிற்கு ........

ஸ்நேகா “பத்து மாடியும் முடியுமா?

உனக்கு ஓகேன்னா “லிப்ட்ல  தான.........

ம்...... ஆசை, தோசை........என சொல்லும் போதே கன்னம் வெட்கத்தில் சூடானது போல் இருந்தது..........

ஓகேடா , நீ லக்கேஜ் உள்ள வச்சுட்டு ரிலாக்ஸ் பண்ணு........ நான் போய், நமக்கு சாப்பிட  எதாவது வாங்கிட்டு வர்றேன்.

இரண்டு படுக்கை அறை கொண்ட வீடாக இருந்தது. மிகவும் சுத்தமாக, ஓர் நேர்த்தியுடன் அழகாக ,  பால்கனியில் இருந்து பார்த்தால் ஊரே தெரிந்தது.

த்து நாட்களுக்கு முன் சென்னையில் ..............

அந்தி மாலை பொழுதில் முன்றாம் ஆண்டு இறுதி தேர்வு முடித்து கல்லூரி விட்டு வீடு திரும்பியதும், வீட்டில் இருந்த பரபரப்பு, ஜன்னல் திரை எல்லாம் புதிதாக மாற்றப்பட்டிருந்தது,  சோபா கவர் எல்லாம் புதிது, பூ ஜாடியில் புத்தம் புது பூங்கொத்துக்கள், என வீடே விழா கோலம் பூண்டிருந்தது.....மற்றும் ஊரில் இருந்து பெரியம்மா பெரியப்பா என்று சொந்தங்களை பார்த்ததும் ஸ்நேகாவிற்கு வியப்பு.

ஏதோ புரிவதும்  புரியாதுமாக  இருந்தது. உள்ளிருந்து அண்ணி விஜயா , வந்து உள்ளே அழைத்து சென்று இன்று உன்னை பெண்  பாக்க வர்றாங்க என்று சொன்னதும், தலை சுற்றுவது போல் இருந்தது.

அம்மா சரோஜினி எப்பவும் இப்படிதான் , வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பா ராஜன், சோ ஸ்வீட் ...... இருந்தாலும் அம்மா எல்லாம் சரியாக செய்வார்கள் என்று , அப்பா எதிலும் தலையிட மாட்டர்கள். வீட்டு விஷயம் எல்லாம் அம்மா தான்.

ஸ்நேகா, மூன்றாவது வருடம் எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்கும் இளம் சிட்டு . பார்க்க குடும்ப குத்து விளக்கு என்று சொல்லும்படியான  தோற்றம். இடுப்புக்கு கீழே தொங்கும் கேசம்.

“என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை “

என்று சொல்லும் வண்ணம் இருப்பவள்.

படித்து முடித்தவுடன் தான் கல்யாணம் என்று நினைத்து இருந்தவளுக்கு , திடிரென்று இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்றவுடன் கஷ்டமாக இருந்தது.

அண்ணி விஜயா “மாப்பிள்ளை டாக்டராம் “ அது ஒன்று தான் அத்தை சொன்னாங்க......

ஸ்நேகா “ஐயோ, எனக்கு டாக்டரே பிடிக்காது.”

விஜயா “ டாக்டர் உனக்கு ஓகே வான்னு இங்க யாரும் கேட்கல, டாக்டர் தான்னு சொல்றாங்க.”

அண்ணி நல்ல தோழி தான், ஆனால் அவங்களுக்கும் அம்மாவை பார்த்தால் பயம்.  

சற்று  நேரத்தில் மாபிள்ளையின் பெற்றோர் ரத்னமும் , லீலாவும் , அக்கா மீனாவும் அத்தான் கோபாலும் அவர்கள் குட்டி ஏஞ்சல் ஹேமா , மாப்பிளை உடன்  வந்திருந்தனர்.

ஆண்கள் ஹாலில் அமர்ந்திருக்க பெண்கள் உள்ளே டைனிங் ஹாலில் வந்து சினேகாவுடன் பேச ஆரம்பித்தனர்.

மீனா “ என்ன சினேகா  படிக்கிற ?

“ BE கம்ப்யூட்டர் சயின்ஸ்  3rd இயர் “

லீலா “ சமைக்க தெரியுமாம்மா?

ம் ..... கொஞ்சம் ......

மீனா  “எங்க ஜெய்யுக்கு சமையல்ன்னு பேப்பர்ல் எழுதினா படிப்பான், மத்தபடி , நல்லா சாப்பிடுவான்”.

குட்டி ஏஞ்சலும் தன் பங்கிற்கு “நீங்க என்ன கார்ட்டூன் பார்பிங்க” என கேட்டாள்.

ஷப்பா...... இப்பவே கண்ண கட்டுதே என்று வடிவேலு போல் மனதிற்குள் புலம்பினாள் ஸ்நேகா......

ஒரு வழியாக அனதைத்து கேள்விகளையும்  கேட்டு அவங்க வீட்டு பிள்ளையின் புராணம் பாடி முடித்த பின்........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.