(Reading time: 23 - 46 minutes)

ப்படி காபி மாயமாச்சு?” அவனை அதிசயமாக பார்த்தாள்.

“எல்லாம் slush powder செய்ற மேஜிக்” என சொல்ல “புரியல” என்றாள்.

“நான் ஒரு professional magician.  இந்த கப்பல்ல காண்ட்ராக்ட் பேசிஸ்ல ரெண்டு வருசமா மேஜிக் பண்றேன். பயணிகளை என்டர்டைன் பண்ணறது என்னோட வேலை.  இப்ப நீங்க குடிச்ச காபி கப் மேஜிக்ல பயன்படுத்தற கப். அந்த கப்புக்குள்ள slush powder கோட்டிங் பண்ணியிருக்கு. இந்த சிலஸ் பவுடர் அடர்த்தியான திரவத்தை கரைச்சி சில நிமிடங்களில் தன்னால வேப்பர் ஆக்கிரும்”

“அப்படீனா நீங்க ஊத்தும் போது மட்டும் ஏன் காபி வேப்பர் ஆகல?” மடக்கினாள் தீபிகா.

“இந்த சிலஸ் பவுடர் ஆயுசே 5 நிமிஷம்தான். அப்பறம் வேலைக்கு உதவாது. இதெல்லாம் யூஸ் அண்ட் த்ரோ மெட்டீரியல்.”

“சரி அப்ப காபில, நான் உப்ப கலந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்”

“அதுவா.....உங்க ஹேண்ட் பேக் கீழ என்ன இருக்குன்னு பாருங்க!

தீபிகா கைப்பையின் கீழ் புறம் நோட்டம் விட்டாள். மேஜிசியன்கள் பயன்படுத்தும் அரக்கு அந்த பையில் பப்பிள்கம் போல  ஒட்டிக் கொண்டு இருந்தது. அதற்குள் மினி spy audio recorder மறைந்திருந்தது.

“நீங்க வைட்டர்கிட்ட பேசறதை, என்கிட்ட இருக்கிற ஒயர்லெஸ் ரிசீவர் மூலமா கேட்டுகிட்டு இருந்தேன். இந்த ரிசீவர் ரெண்டு கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் வரை பிசிறு தட்டாம கேக்கும். அந்த வைட்டர் என்னோட கொலிக். என் பேச்சை தட்டாம கேப்பான் ஏன்னா அவனுக்கு சில பேசிக் மேஜிக் ட்ரிக்ஸ் சொல்லித்தர்றேன். நான்தான் அவனுக்கு போன் போட்டு உப்பு காப்பிய உங்க கப்புல மாத்தி ஊத்த சொன்னேன்”

“என்னோட பேக்ல எப்ப? எப்படி? இந்த ஸ்பை ரெகார்டர் வந்துச்சு”

“உங்க ஹேன்ட் பேக்க தொட்டு நான் சத்தியம் பண்ணும் போதே அந்த ஐட்டம் எங்கிட்ட இருந்து உங்க பேக்குல இடம் மாறிருச்சு” 

“யோவ்.... நீ கில்லாடியா..... தீபிகா ஆச்சரியப்பட்டாள்.

“இந்த மாதிரி நெறைய சரக்கு என்கிட்டே இருக்கு! இன்னைக்கு நைட் 7.30 மணிக்கு கிளப் ஹவுஸ்ல இருக்கிற ஆடிட்டோரியம் வந்தா என் மேஜிக்கை நீங்க ரசிக்கலாம்” என்று அவளுள் ஆர்வத்தை தூண்டினான்.

“கண்டிப்பா வர்றேன். எனக்கு ஒரு சீட்ட இப்பவே துண்டு போட்டு வச்சர்றேன்” மகிழ்ச்சியில் துள்ளினாள் அந்தமான் போகும் இந்தமான்.

ரவு  மணி 7.30. முகேசின் மேஜிக் காண கூட்டம் நிரம்பியது. இன்னும் சற்று நேரத்தில் அவனுடைய மேஜிக் மட்டுமல்ல, கப்பலின் மொத்த பயணிகளும் குலை நடுங்க வைக்கும்  பயங்கரமும், ரத்தம் தெறிக்கும் மரணங்களும் அரங்கேற காத்திருந்தது அந்த ஆடிடோரியம்.

ஆப்டிகல் இல்யூசண் முறையில் மேடையில் ஆல்டோ காரை மறைய வைத்தான். fire magic ல் பூட்டிய வெறும் கூண்டில் நெருப்பை எரிய விட்டு, துணி போர்த்தி விலக்க,நளின மங்கை ஒருத்தி அந்த கூண்டில் இருந்து மம்தா பானர்ஜி போல் கை ஆட்டியபடி வெளியே வந்தாள்.

முகேஷின் கை கால்களை விலங்கிட்டு, கண்ணாடி கூண்டில் அடைக்கப்பட, திரை மூடி விலகிய சில நிமிடங்களில் கூண்டில் மறைந்து, ஜனக்கூட்டதின் மத்தியில் இருந்து எழுந்து வந்தான். இது போல எண்ணற்ற பல மேஜிக்கால் எல்லோரையும் திகைக்க வைத்தான். வெறும் கையில் பணமழைகூட பொழிய வைத்தான்.

பிறகு ஏன் அவன் சொற்ப சம்பளத்தில் காண்ட்ராக்ட்டில் குப்பை கொட்டுகிறான் என கேட்ககூடாது. மேஜிசியன் பொழப்பு அப்படித்தான்.

நிகழ்ச்சியின் இறுதியில், முகேஷ் தன் சிக்னேச்சர் மேஜிக்காக கருதும் mind reading magic. அதில் பார்வையாளர்களின் மனதில் நினைக்கும் நபர்களின் செல்போன் நம்பரை இரண்டு வெள்ளை தாள்களில் எழுதி, ஒன்றை மேடையில் உள்ள பாக்ஸ்சில் மடித்தோ அல்லது தாறுமாறா கிழித்தோ போடவேண்டும். மற்றொன்றை முகேஷ்க்கு காட்டமல்  அவர்களே வைத்துகொள்ளலாம். STD மற்றும் இன்டர்நேஷனல் கோடு சரியாக குறிப்பிடவேண்டும். முக்கியமான கண்டிஷன் பார்வையாளரின் மனதில் உள்ள நபரின் செல்போன் வீடியோகாலிங் வசதி கொண்டதாக இருக்கவேண்டும். இப்போது முகேஷ் பார்வையாளரின் மனதில் உள்ள செல்போன் நம்பரை டெலிபதிசக்தி மூலம் கிரகித்து,முகேஷின் முயற்சி எதுவுமே இல்லாமல் பார்வையாளர் மனதில் உள்ள நபர் ஆடிடோரியத்தில் உள்ள அகன்ற திரையில் தோன்றி பேசுவார்.

பலரும் முயற்சி செய்தனர். எல்லோறுமே தங்கள் மனதில் நினைத்த நபர் சரியாக திரையில் தோன்றியதாக சிலாகித்தனர். இத்தனைக்கும் முகேஷின் கண்கள் கருப்பு துணியால் கட்டப்பட்டு இருந்தது.

அப்போது கூட்டத்தில் இருந்து எழுந்து வந்த ஒரு ஸ்பானிஷ்காரன் முகேஷிடம் “ஸ்பானிஷ் மொழி தெரியுமா?” என்றான்.

“ஏலியன்ஸ் பாஷை தவிர எல்லா பாஷையும் தெரியும்.கப்பல்ல ஆயுள கழிக்கிற எனக்கு இது அவசியம்” என்று ஸ்பானிஷ் மொழியில் பதிலளித்தான்.

அந்த ஸ்பானிஷ் தன் நண்பனை மனதில் நினைக்க அடுத்த சில நிமிடங்களில் அந்த அகன்ற திரையில் அவன் நண்பன் தோன்றி “Hola” என்று ஸ்பானிஸ் மொழியில் வந்தனம் சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.