(Reading time: 23 - 46 minutes)

மரதுன்கா விடுதலை செய்யப்பட்டு கப்பலில் இருந்த அந்த கும்பலின் வசம் ஒப்படைக்கப்பட்டான். கப்பலின் கீழ் தளத்தில் இருந்த அவசரகால வழியே ஒரு இயந்திரபடகை கடலில் இறக்கி, பிணைய கைதியாக முகேஷை பிடித்துகொண்டு அவசரமாக  தப்பிக்க முயல, சத்தம் கேட்டு தூக்கம் கலைந்து எழுந்து வந்த நடுத்தர வயதைக்கடந்த   கப்பல் கார்பென்டர் ஒருவன் அவர்கள் அருகே வந்து “சினிமா ஸூட்டிங்கா? டைட்டானிக் பார்ட் 2 வா? உங்க சினிமால எனக்கு ஒரு சான்ஸ் தர முடியுமா? என்றான்

“டோன்ட் கம் வீ வில் சூட் யூ”  ஒருவன் பிஸ்டலுடன் மிரட்ட,       

“சார் ஒரே ஒரு சீன் போதும். உயிர குடுத்து நடிப்பேன்” என்று கெஞ்ச

கடத்தல்காரர்கள்  அவனை துப்பாக்கி தோட்டாவால் துளைத்தெடுக்க, ரத்த வெள்ளத்தில் நிஜமமாகவே நடிப்புக்காக உயிரை விட்டான்.

இண்டியன் கோஸ்டல் கார்ட் சீப் கமேண்டர், கடத்தல்காரர்களை தொடர்புகொண்டு “நீங்க கேட்ட மாதிரியே சமரதுன்காவை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டோம். உடனடியா கப்பலை விட்டிட்டு ஓடிப்போங்க” என்றார். 

கப்பலில் லேசர்பாம் இருப்பதால், ரிமோட்மூலம் கப்பலை தகர்த்துவிடுவோம் என பயமுறுத்தி, அவர்கள் தப்பிச்செல்லும் வரை சற்று தொலைவில் படகை பின் தொடர்ந்து கப்பல் வரவேண்டுமென மிரட்ட, கப்பலின் காப்டன் பயத்தில் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டான்.

அவர்களுடைய திட்டம் அந்தமானுக்கு அருகிலுள்ள பெர்கா தீவுக்கு சென்று,அங்கு தயாராக இருக்கும் ஹெலிகாப்டர் மூலம் பாங்காக் தப்பிசெல்வதுதான். பெர்கா தீவு வரை கப்பலை பயமுறுத்தி அழைத்துச்சென்று விட்டால் பிறகு சுலபமாக தப்பி சென்றுவிடலாம் என கணக்கு போட்டனர். இயந்திர படகு முன் செல்ல, ப்ளூ சீ ஈகிள் கப்பல் பயத்தால் பின் தொடர, ராணுவ ஹெலிகாப்டர்கள் சமயம் பார்த்து அவர்களை தூக்க, கொக்கு போல வானில் பறந்தபடி நோட்டம் விட்டனர். படகிலும் R.D.X வெடிபொருள் இருப்பதாகவும், அருகே வந்தால் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்துவோமென கடத்தல் காரர்கள் மிரட்டியதால் உஷாராகவே ராணுவம் பின் தொடர்ந்தது.

பெர்கா தீவை படகு நெருங்குவதற்கு சற்று முன் ஏற்கனேவே அந்த தீவில் பதுங்கி இருக்கும் சக கடத்தல்காரர்களிடம்,  ஹெலிகாப்டரை தயார் நிலையில் வைக்க சொல்லி இன்ஸ்ட்ரக்சன் கொடுத்து, அடுத்து என்ன செய்யலாம் என அவர்கள் தனியாக கூடி ஆலோசனை செய்ய,அவர்கள் எதிர்பார்க்காத வகையில் முகேஷ் கடலில் குதித்தான்.    

சொகுசு கப்பலை நோக்கி கடல் நீர் மேல் மெதுவாக நடந்தான்.

“ஷிட்... அந்த இண்டியன் மேஜிசியன் நம்மை ஏமாத்திட்டான். இப்பவே அவன சாகடிக்கணும்” கும்பலில் இருந்த ஒருவன் ஆத்திரத்தில் பிஸ்டலை எடுக்க, ஸ்பானிஷ்காரன் அவனை தடுத்தான்.

“முட்டாள். கப்பல்ல லேசர் பாம் இருக்குன்னு ராணுவம் பயப்படுது. ஆனால் அந்த கப்பல்ல எந்த எக்ஸ்ப்லோசிவ் மெடீரியலும் இல்லைங்கற விஷயம் நமக்கு மட்டும்தான் தெரியும். ராணுவத்துக்கு தெரிஞ்சா நம்மை ராக்கெட் லாஞ்சர் போட்டு பஸ்பமாக்கிறுவானுங்க! பொறுமையா தப்பிக்கிற வழிய யோசிப்போம்” என்றான் ஸ்பானிஷ்.

“சரி இப்ப என்ன பண்ணறது” யோசனை கேட்டான் அருகிலிருந்தவன்.   

“பயப்படாதீங்க...... அவன் இண்டியன் மேஜிசியன்னா! நான் இன்டர்நேஷனல் கிரிமினல். நான் அவனுக்கு பரிசா கொடுத்த மோதிரம் வெறும் மோதிரமல்ல. டைமர் பாம். இங்கிருந்தே டைம் செட் பண்ணி அவன தீத்தரலாம். ஆனா இப்ப வேண்டாம். கப்பலுக்கு போகட்டும். கப்பலுக்கு வேட்டு வெச்சா ராணுவ கவனம் அவங்க மேல திரும்பும். அந்த கேப்ல நாம பறந்தறலாம்” என ஐடியா கொடுத்தான்  

நடப்பதை ராணுவம் உன்னிப்பாக கவனிக்க, கப்பல் முகேஷ் அருகில் வர, கப்பல் சிப்பந்திகள் முகேஷை பத்திரமாக கப்பலுக்குள் அழைத்து சென்றனர். அதே சமயம் படகில் இருந்த கடத்தல்காரர்கள் பத்து நிமிடத்தில் டைமர் பாம் வெடிக்க மோதிரத்தில் நேரம் குறித்தார்கள்.

பயத்தில் உறைந்திருந்த தீபிகா அவன் அருகில் வந்து “உங்களுக்கு எதுவும் ஆகலயே! என ஆதங்கப்பட்டு,  “கப்பலுக்கு ஏதாவது ஆபத்து இருக்கா?” என பயப்பட்டாள்.

“நம்ம கப்பல்ல லேசர் பாம் எதுவும் கிடையாது. அவனுக சும்மா உதார் உட்டிருக்கானுக. அதே மாதிரி அந்த படகிலும் எந்த வெடி பொருளும் கிடையாது. துப்பாக்கிய தவிர.”

“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” தீபிகா கேட்க

“என்னம்மா நீங்க எப்ப பாத்தாலும் அட்வகேட் மாதிரி கேள்வி கேட்டுகிட்டு. ஸ்பை ஆடியோ ரெகார்டர் ஞாபகம் இருக்கா? அதே டெக்னிக்தான். உங்க பேக்ல வச்ச மாதிரி அவன் ஹிப்பிதலைக்குள்ள சொருகுனேன். இப்ப வரைக்கும் அவங்க பேச்ச ஒட்டு கேட்டுகிட்டு இருக்கேன்”

“இப்பவே ராணுவத்துக்கு தகவல் கொடுங்க. அவனுகளை ஈஸியா மடக்கிறலாம்”  தீபிகா யோசனை சொன்னாள்.

“அதுக்கு அவசியமே இல்ல இன்னும் பத்து நிமிசத்துல அந்த படகு வெடிச்சு செதற போகுது”

“அந்த படகுலதான் வெடிபொருளே இல்லைன்னு சொன்னீங்களே”  

“படகுல இல்ல. ஆனா fake hand ல இருக்கே” முகேஷ் புதிர் போட

“வ்வேக் ஹேன்ட்டா அப்படீனா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.