(Reading time: 8 - 15 minutes)

சாப்பாடு நல்லா இருப்பதை விட நீ கூடவே இருந்து பரிமாறுவது , வயிற்றுடன் சேர்ந்து மனமும் நிறையுது...........

பத்மா  எப்பொழுதும் சாப்பாட்டை பறிமாறிவிட்டு டிவியில் சிரியல் பார்க்க சென்று விடுவார்.......... அதன் பின் அவராகவே பரிமாறி கொள்ள வேண்டும்..........

கவின் , தன் தாயார் பத்மா பற்றி ஒன்றும் கூற மாட்டான்....... நல்லதும் சரி, கெட்டதும் சரி.............. தாய் என்ற மரியாதை மட்டுமே............

ன்று ஞாயிற்று கிழமை , காலை சம்யுக்தாவால் படுக்கையிலிருந்து எழவே முடியவில்லை........... தலையெல்லாம் பாரமாக இருந்தது..........

இதில் கவின் ஷேவிங் முடித்து வந்து , என்னடா இன்னும் துக்கமா? என கேட்டு கொண்டே அருகில் வந்து கன்னம் உரசும் முன்பே, அவனது ஷேவிங் லோஷன் வாசத்திற்கு வயிற்ரை பிரட்டி கொண்டு வாந்தி வந்தது...........

குளியலறை சென்று வாமிட் செய்து முகம் கழுவி , வெளிய வந்த பின் தலை சுற்ற கவின் மேலேயே மயங்கி விழுந்தாள்.

என்ன தான் டாக்டராக இருந்தாலும், தனது அன்பிற்கினியவள் மயங்கியதும் பதறி தான் போனான்............

அவளை, தூக்கி சென்று படுக்கையில் கிடத்தி, பரிசோதித்ததில் , சம்யு கர்ப்பம் என் தெரிய வந்தது.........

அனைவருக்கும் ஒரே சந்தோஷம். அன்று மாலையே மகப்பேறு மருத்துவரை பார்த்து, உறுதி செய்தபின் அவளது அம்மா வீட்டிற்கு சென்றாள் .

ஷீலாவும்  ஐ பாடில், chillzeeயில் வரும் தொடர் கதைகளை விரும்பி படித்து கொண்டிருந்தார்.............

செய்தி தெரிந்த பின் அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....... உங்க அப்பாவே மறுபடி வரபோகிறார் என கூறி மகிழ்ந்தார்........

ன்று இரவு படுக்கையில் சம்யு யோசித்து கொண்டிருந்தாள்.

கவின், “ என்னடா? ஒரே யோசனை இந்த சின்ன மூளைக்குள்ள? நம்ம பேபி , ஆணா , பெண்ணா என்றா?

ம்ச்......... இல்லை கவின், அம்மா பாவம் தனிய இருக்காங்க, நாம ஏன் அவங்க கூட போய் இருக்க கூடாது.......

“இங்க நானும் ஒரே பையன் தான சம்யு, அப்புறம் எப்படி?

“இங்க உங்க அம்மாக்கு, உங்க அப்பா இருக்கார்”...........

அதற்கு மேல் கவின் பேசவில்லை, திரும்பி படுத்து கொண்டான்........

ப்படியே நாட்கள் கழிய, ஏழாம் மாதமும் வந்தது.........

பத்மாவும் , தனது சம்பந்தியான ஷீலாவை அழைத்து வளைகாப்பு விமர்சையாக செய்ய வேண்டும், மண்டபம் பிடிக்க வேண்டும், சாப்பாடு பெரிய கேட்டரிங் ஆளாக கூப்பிட வேண்டும், வைர வளையலாக போட வேண்டும் என இப்படி அடுக்கி கொண்டே போனார்.............

ஷீலாவும், அனைத்திற்கும் ஒத்து கொண்டார்............ தனது ஒரே மகளுக்கு செய்யாமல் யாருக்கு செய்ய போகிறார்.........

அதுவரை சமையலறையில் இருவருக்கும், டீ போட்டு கொண்டிருந்த சம்யுவின் காதுகளிலும் இந்த சம்பாஷனை விழுந்து கொண்டிருந்தது.......... அதனை கேட்டு கொண்டிருந்த சம்யுவுக்கு  புன்னகையே புன்னகையே முகத்தில் தவழ்ந்தது...........

இவங்களா கேட்காவிட்டாலும் அம்மாவே , இது அனைத்தையும் செய்ய தான் போகிறார்கள்............ கல்யாணத்தையே விமர்சையாக செய்த அம்மாவிற்கு இது தெரியாதா?

ஆனால் அடுத்து வந்த அவளது அத்தையின் வாக்கியத்தில் சிலை என நின்று போனாள் சம்யுக்தா.!!!!!!!!!!!!!!

“ ஷீலா , நீங்க எப்படி, நான் கூறியது போல்,கல்யாண சடங்குகளில் இருந்து ஒதுங்கி இருந்திங்கலோ, அப்படியே இப்பவும் இருக்கணும். இதெல்லாம் சுமங்கலிகள் மட்டுமே செய்ய கூடியது......... அதனால் வைர வளையலை என்னிடம் முதலிலேயே கொடுத்து விடுங்க , சபையில் நான் தான் அந்த வளையலை சம்யுவுக்கு போடுவேன்” என கூறி கொண்டிருந்தார்.........

அப்பொழுது தான் மருத்துவமனையிலிருந்து  திரும்பி வந்த அவளது கணவன், மாமனார் காதுகளிலும் இது விழுந்தது.

கோபத்தில் எரிமலையாகி போனாள் சம்யுக்தா.........

எந்த நிலையிலும் நிதானத்தை இழக்க கூடாது என்ற தந்தையின் வார்த்தைகள் காதுகளில் விழுந்தது......... மனதிற்குள் 10 லிருந்து ஒன்று வரை மெல்ல சொல்லி கொண்டாள்........

நிதானமாக ஹாலுக்கு வந்து, “யார் சுமங்கலி அத்தை?  25 வருடம், என் அப்பாவுடன், மனம் ஒன்றி, ஓர் உயிர் ஈர் உடலாக வாழ்ந்து , இந்த ஒரு வருடமா ஓர் உயிர் ஓர் உடலாகவே வாழும் என்னோட அம்மாவா?...............

இல்ல , இந்த 28 வருடமா, கணவருக்கு கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல், எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டு, மனதளவில் விலகியே வாழும் நீங்களா?

மனதளவில் சேர்ந்தே வாழ்பவர்கள் தான் சுமங்கலி ................

அப்படி பார்த்தல் எங்க அம்மா சுமங்கலி தான்...........

அவங்க ஒதுங்கி  இருந்து தான் இப்படி ஒரு விழா நடக்கணும்னா , எனக்கு எந்த விழாவும் வேண்டாம் என தன் முடிவை கூறினாள்...............

அதனை கேட்ட பத்மாவும் தனது தவறை உணர்ந்து ஷீலாவிடம் மன்னிப்பு கோரினாள்............ அங்கு வந்த தனது கணவரிடமும் ............

கவினும், நாம் இருவரும் கொஞ்ச நாள் உன் அம்மா வீட்டில் தங்கலாம், என்னுடைய அம்மாவும் , அப்பாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தெரிந்து கொள்வார்கள் என்று கூறி சம்யுக்தாவை மகிழ்ச்சி அடைய வைத்தான்..............

This is entry #91 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - பூஜா பாண்டியன்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.