(Reading time: 26 - 52 minutes)

ரி நிலனும் நிவனும் டாடி கூட தூங்கிட்டாங்க, எனக்கு வேலை இருக்கு நான் ஆபீஸ் ரூம்ல இருக்கேன் நீ போய் தூங்கு” என்று அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான். என்ன நினைத்தாளோ? பரத்தின் வயிற்றோடு அவனை இறுக கட்டிக்கொண்டாள் மாயா. தன்னுள் புதைந்திருந்தவளின் முகத்தை இரு கைகளால் தாங்கிய பரத் என்ன கண்டானோ!!!

“சரி வா தூங்க போகலாம்” என்று அவளை எழுப்பி படுக்கை அறைக்கு கூட்டிக்கொண்டு வந்தான். அவளை இடது புறமாக வாகாக படுக்க வைத்து அருகில் படுத்தவனின் கைகள் அவளின் வயிற்றை ஆதுரமாக தடவியது. நிலனும் நிவனும் அவனின் அவசரத்திற்கு கிடைத்த பரிசு என்றானதால், இப்பொழுது கருவில் இருக்கும் குழந்தையோ அவளின் காதல் தனக்கு கிடைத்ததினால் உண்டான பரிசு. ஆனாலும் தன் இனியவளை போட்டு வருத்துவது என்னவென்று அந்த கள்வனுக்கு இன்னும் புரியாதது தான் வேதனை. மாயாவினால் தூங்க முடியவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள். தான் சிறிது அசைந்தாலும் கணவன் எழுந்துவிடுவான். அதனாலேயே அமைதியாக படுத்திருந்தாள். மனது அந்த வித அமைதி அடையாதது ஏனோ???

காலை தன் கணவனின் அலுவலகத்தில் ஆதியை கண்டதை அவளால் நம்பவே முடியவில்லை. ஆனால் ஏன் தன்னை தெரியாதது போல நடந்து கொண்டான். கோபப்படுவானோ, தன்னை அவமானப்படுத்துவானோ என்று பயத்துடன் பார்த்தவளுக்கு அவனின் சலனம் இல்லாத முகமே பதிலாக கிடைத்தது.

“மாயா” என்றழைத்தான் பரத். அவனை திரும்பி பார்த்தவளிடம், “உன்னை என்ன போட்டு வாட்டுது” என்று கேட்டவனின் கேள்விக்கு மாயாவிடம்  பதில் தான் இல்லை.

அவனைப்பார்த்து புன்னகைத்தவள் “எதுவும் இல்லை பரத்” என்று கூறியவள் எழுந்து அமர்ந்தாள்.

“வாய் தான் அப்படி சொல்லுது, உன் கண் வேற சொல்லுதே, என்ன மாயா” என்று மறுபடியும் கேட்டான். அவனையே பார்த்திருந்தவள் “எனக்கு இங்க இருக்க பிடிக்கலைங்க, ஏனோ மனசெல்லாம் ரொம்ப இறுக்கமா இருக்கு, நாம மறுபடியும் லண்டன் போயிரலாமா?” என்று கேட்டாள் மாயா. கேட்டு முடிக்கும் அவளின் கண்களில் இருந்து இரு சொட்டு கண்ணீர் வெளிவந்தது.

அவனும் மாயாவையே பார்த்திருந்தான், “நீ கடைசி வரைக்கும் சொல்ல மாட்ட, அப்படித்தான” என்று வலியுடன் கூறியவன் “நெக்ஸ்ட் வீக் நீ, அப்பா, பசங்க எல்லோரும் கிளம்புங்க, இங்க கொஞ்சம் வேலை எல்லாம் முடிச்சுட்டு பிறகு வரேன்” என்றான் பரத். அவனை இறுக அணைத்துக்கொண்டாள் மாயா.

‘ப்ளீஸ் பரத், உங்களை நான் எப்பவும் கஷ்டப்படுத்தகூடாதுனு நினைக்கிறேன்’, மனதோடு பேசியவளின் கண்ணீர் அவனின் தோள்களை நனைத்தது. அவனும் ஏதும் பேசாமல் அவளை இறுக அணைத்து தன் மேல் சாய்த்து  உறங்கினான்.

றுநாள் காலை 11.௦௦ அளவில்

அன்று தன் மகளை உடன் வைத்துக்கொண்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தான் ஆதி. உஷாவிற்கு காலேஜில் ஏதோ செமினார் என்று சீக்கிரமே சென்று விட்டாள்.

தன்னருகே மெத்தையில் தேஜு உறங்கிக்கொண்டு இருக்க, தன் மடிக்கணினியில் வேலையை முடித்தான் ஆதி. அப்பொழுது அழைப்பு மணி அடிக்க, மகள் புரண்டு விழாமல் இருக்க வாகாக தலையணையை வைத்துவிட்டு வெளியில் வந்து கதவை திறந்தான்.

அங்கே வெளியில்---

தே 11 மணியளவில்

உஷா ஆதியின் அலுவலகத்தின் வாயிலில் நின்று கொண்டு இருந்தாள். ஆதியிடம் காலேஜ் செமினார் என்று பொய் சொல்லி விட்டு இங்கு வந்து விட்டாள். அவளுக்கும் சில உண்மைகள் தெரியவேண்டி இருந்தது.

வரவேற்பறையை அடைந்தவள், அங்கு இருந்த வரவேர்ப்பாளினியிடம் “Hi Joni, Will you do me a favour? I need to meet Mr. Bharath, your M.D. I’m not having an appointment but please inform him, that I am his wife Maayaa’s close friend. I want to speak with him very personally” படபடவென்று கூறியவள் “And please don’t inform to Aadhi. I came here without his knowledge” என்று சேர்த்து கூறினாள்.

ஜோனியோ “Oh, I see. But Please wait Usha. I will try and do it for you. Let me make a call to Bharath Sir” என்றவள், பரத்திற்கு பேசினாள். மறுமுனையில் என்ன கூறினானோ,“You can go Usha” என்று அவளுக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தாள் ஜோனி.

பரத்தின் அறைக்கதவை தட்டி உள்ளே வந்த உஷாவிற்கு கிடைத்தது பரத்தின் அன்பான வரவேற்ப்பே

“ஹாய் உஷா, வாங்க” என்று அவளை வரவேற்றவனை

“என்னை பற்றி தெரியுமா?” என்று கேட்டாள்.

“இல்லை” என்று கூறியவன், அவனை உற்று பார்த்தவளை கண்டு சிரித்தான்.

“நான் மாயாவோட பெஸ்ட் ப்ரெண்ட், அண்ட் இங்க டீம் லீடரா வொர்க் பண்ற ஆதித்யாவோட வைப்” என்று கூறினாள் மாயா.

“நைஸ் டூ மீட் யு மிசஸ். உஷா, என்ன சாப்பிடுறீங்க” என்று கேட்டவளின் பேச்சில் இருந்த தன்மையை உணர உஷாவிற்கு விருப்பம் இருக்கவில்லை.

“எனக்கு உங்க விருந்தோம்பல் எல்லாம் தேவை இல்லை சார். நான் கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் பதில் வேணும்” என்று கறாராக கூறியவள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.