(Reading time: 26 - 52 minutes)

ங்க பரத் அண்ணா ரொம்ப நல்லவர் மாயா, உன்னை அவர் கஷ்டப்படுத்தவே மாட்டார்” என்று மேலும் கூறினாள் உஷா. பரத்தின் அணைப்பில் இருந்து வெளிவந்த மாயா உஷாவை இறுக அணைத்துக்கொண்டாள். இருவரின் கண்களிலும் அவர்களை பார்த்த அவர்களின் துணைகளின் கண்களிலும் மகிழ்ச்சியுடன் கூடிய நெகிழ்ச்சியான கண்ணீரே வெளிவந்தது.

“போதும், நீ லண்டன்ல நல்லா அழ பழகிட்ட, சரியான அழுமூஞ்சி மாயா” என்று அவளை கிண்டல் செய்த உஷா அவளின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

மேலும் ஆதியிடம் “என் மாயா என்னைக்கும் என்கிட்ட பொய் சொல்ல மாட்ட ஆதி. அதான் உண்மையெல்லாம் எனக்கு பரத் அண்ணா  மூலமா  தெரியவந்துருச்சு. உங்களுக்கே கோபம் இல்லலே ஆதி. அவளை வருந்த வைக்காதிங்க எனக்காக” என்று கூறியவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. இப்பொழுது தன் துணைவியை அணைத்துக்கொள்வது ஆதியின் முறையாயிற்று. அவனின் தோள்களில் கலங்கியவளை அவளின் பெண்ணரசி மேலும் கலங்க நேரம் கொடுக்க வில்லை. அவள் அழுது தன் தாயின் கண்ணீரை குறைத்தாள்.

சிறிது நேரத்தில் மூவரும் அவர்களின் நட்பைப்பற்றி பரத்திடம் கூறி மகிழ்ச்சியுடன் அளவளாவினர்.

“இன்னைக்கு உனக்கு செமினார் இல்லையா உஷா” என்று ஆதி கேட்க

“எனக்கு மாயாவை பார்க்கன்னும் போல இருந்தது, நீங்க எப்படியும் ஆபீஸ் போக மாட்டிங்க நான் மட்டும் எதுக்கு காலேஜ் போகணும். அதான் லீவ் போட்டு மாயாவை பார்க்க போனேன். எனக்கு உண்மை தெரியவரலைல ஆதி. அதான் உங்க ஆபீஸ் போய் பரத் அண்ணாவை பார்த்தேன். அவர்கிட்ட சண்டைப்போட்டு பேசி கொஞ்சம் சமாதானம் ஆன பிறகு மாயாவை பார்க்க அவங்க வீட்டுக்கு போகலாம்ன்னு பார்த்தா, பரத் அண்ணா அப்பா, நிலனையும் நிவனையும் கூட்டிட்டு ஆபீஸ் வந்துட்டாரு. உன் பசங்க செம சார்ம் எங்க அண்ணா மாதிரியே. ஆனா நிவன் நீயே தான். உன்னை பத்தி கேட்டப்ப, நீ கோவிலுக்கு போயிருக்கதா சொன்னாங்க. எனக்கு ஒரு கெஸ் நீ இங்க வருவன்னு. அதான் அண்ணாவை இங்க கூட்டிட்டு வந்துட்டேன், எப்படி என் அறிவு” என்று தன்னை பற்றி பெருமையாக கூறியவளுக்கு ஆதி தன் வலக்கையின் இருவிரல்களை நெற்றியில் வைத்து அவளுக்கு சல்யுட் வைத்தான்.

“ஆனா இந்த அறிவை கொஞ்சம் காலேஜ்ல யுஸ் பண்ணலாம்” என்று கிண்டல் செய்தான் ஆதி.

“சாரி பரத், நான் ஆதி பத்தி சொல்லாததுக்கு” என்று பரத்திடம் மன்னிப்பு வேண்டினாள். புன்னைகையே பதிலாக தந்தான் பரத்.

“ஆதி பத்தி சொல்லலையா, எனக்கு பைனாப்பிள் ஜூஸ் வரைக்கும் தெரிஞ்சு வச்சுருக்காரு அண்ணா. அப்ப என்னை பத்தி சொன்னையா” என்று கேட்டாள் உஷா.

“இல்லை உஷா” என்று குழப்பமுற்றவள் பரத்தைப் பார்த்தாள்.

“நீ தான் காரணம் மாயா, இந்தியா போகணும்ன்னு சொன்னப்பதான் ஆதி பத்தி தெரிய வந்துச்சு. ஆனா அதுக்கு முன்னாடியே நம்ம கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள் கழிச்சே நான் உஷாவை பத்தி தெரிஞ்சுக்கிட்டேன். உனக்கு என்ன கஷ்டம்ன்னு கேட்டு உஷா கிட்டயிருந்து வந்த மெயில். Facebookல உஷா மெயில் ஐ. டி. வச்சு தேடினப்ப தான் நீங்க எல்லோரும் ஒரே காலேஜ்ன்னு தெரிய வந்தது. உனக்கு உஷா best friendன்னும். அதுக்குப்பிறகு ஒரு நாள் நீ வெளியே போகும் போது உனக்கு பைனாப்பிள் ஜூஸ் கேட்ட. வாங்கி கொடுத்தா குடிக்காம அதைப்பார்த்து அழுத அப்பவே கண்டுபிடிச்சுட்டேன்” என்று பரத் கூற, ஆதி செய்த மாதிரியே உஷாவும் பரத்தை பார்த்து செய்தாள். எல்லோரும் அவளை கண்டு சிரித்தனர்.

மேலும் சிறிது நேரம் பொதுப்படையாக பேசியவர்கள், மாயாவின் உடல்நிலை கருதி இருவரையும் வழியனுப்பிவைத்தனர் ஆதியும் உஷாவும்.

காரில் செல்லும்போது பரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் மாயா. அவனின் கவனமோ சாலையின் போக்குவரத்து நெரிசலில் இருந்தது. சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தவன் காரில் இருந்து இறங்கவே இல்லை. அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மாயாவோ அவனின் தோளில் கை வைத்து “என்ன பரத்?” என்று கேள்வியுடன் கேட்டாள். அவளின் கேள்விக்கு பரத்தின் இறுகிய அணைப்பு பதில் கூறியது. அவனின் தோள் சாய்ந்தவள் புரிந்துக்கொண்டது “நீயே எல்லாம்” என்ற அவனின் அன்பு மொழியே. ஆனாலும் அவளுக்கு கேட்க வேண்டியது இருந்தது. கேட்டாள் “ஆதி பத்தி தெரிஞ்சு நீங்க கோபமோ வருத்தமோ படுவீங்கன்னு நினைச்சேன் பரத், என் மேல ஒரு சின்ன சந்தேகம் கூட வரலையா?”

“உன்னை சந்தேகப்பட்டா நான் உயிர் வாழுறதுல அர்த்தமே இல்லை” என்றவன் அவளின் முகத்தை தன் இரு கைகளாலும் பற்றி கண்ணுக்குள் கண் வைத்து கூறினான் “என் அம்மாவை நான் எப்படி சந்தேகப்பட முடியும் கண்ணம்மா?” அவனின் நெற்றியுடன் நெற்றி வைத்து அணைத்தவள் இவன் தன்னவன் தன்னை எக்காரணத்தைக்கொண்டும் சந்தேகம் கொள்ள மாட்டான், பிரிந்து செல்ல மாட்டான். தனக்கும் இவனே எல்லாம் என்பது போல அவனை மேலும் இறுக அணைத்துக்கொண்டாள் மாயா பூரிப்புடன். தூரத்தில் அவளின் புதல்வர்கள் தங்களை கண்டு ஓடி வருவது தெரிந்தது.

ரத் மற்றும் மாயாவை அனுப்பி வைத்த பிறகு ஆதியின் முகத்தில் எப்பொழுதும் இருக்கும் ஒரு இறுக்கம் இல்லாததை கண்டு உஷா தனக்குள் புன்னகைத்துக்கொண்டாள். அவளுக்கு திருப்தியாக இருந்தது.

தேஜுவை உணவு கொடுத்து தூங்க வைத்த பிறகு, உஷாவிடம் வந்த ஆதியையே பார்த்தாள் உஷா.

“என்ன உஷா?” என்று அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டான் ஆதி. அப்பொழுதும் அவனையே பார்த்த உஷா மௌனத்தையே பதிலாக தந்தாள்.

“உஷா” என்று இழுத்தான் ஆதி,

“இப்போ ஹாப்பியா ஆதி” என்ற உஷாவின் கேள்விக்கு

“எப்பவுமே ஹாப்பி தான் உஷா, என்ன புதுசா கேட்குற” என்று புரியாமல் கூறினான் ஆதி. அவனின் பதிலைக்கேட்டு உஷாவிற்கு மேலும் சிரிப்பு வந்தது. சட்டென்று சிரித்து விட்டாள்.

“நான் யாரு ஆதி, இப்போ சொல்லுங்க? என்று கேள்வி கேட்டாள்.

முதலில் புரியாமல் என்ன சொல்ல வருகிறாள் என்று அவளை பார்த்தவன், அவளின் கண்களில் தெரிந்த பரிதவிப்பை கண்டு அவளை தன்னிடம் இழுத்து அணைத்தவன் அவளின் காதில் “காதலடி நீ எனக்கு” என்று ரகசியமாக கூறியவனை இறுக அணைத்துக்கொண்டாள் உஷா. இவனே தனக்கு எல்லாம் என்பது போல்.

 

This is entry #93 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை – காதல் / திருமண வாழ்க்கை அல்லது நட்பு

எழுத்தாளர் - அம்ரித சாகரி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.