(Reading time: 26 - 52 minutes)

ன் எங்க மாயாவை கல்யாணம் பண்ணுனீங்க, உங்களை எதுக்கோ காப்பாத்துறதுக்கு தான் அவ உங்களை கல்யாணம் பண்ணியிருக்கணும், என்ன தப்பு பண்ணுனீங்க? என்ன காரணம்? சின்ன வயசுல இருந்து அவ கூட இருந்த எங்களை மறக்குற அளவு அப்படி நீங்க என்ன உசத்தி” என்று தான் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டாள்.

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ், இரு ஜூஸ் சொல்றேன், உனக்கு பிடிச்ச பைனாப்பிள் ஜூஸ்” என்று அவளை கவனித்தான். ஜூஸ் வந்தவுடன் அவளுக்கு உபசரித்தவன் “ஜூஸ் குடிம்மா, சொல்றேன்” என்று புன்னகையுடன் கூறினான்

நீ இங்க வந்து 1 மணி நேரம் ஆகுது மாயா, ஏதும் பேசாம இருந்தா என்ன அர்த்தம், எனக்கு வேலை இருக்கு” என்று கோபமுடன் கூறினான் ஆதி.

“என்னை மன்னிச்சிரு ஆதி” என்று கூறினாள். கேட்ட ஆதிக்கோ கோபம் மேலும் வந்தது.

“தயவு செஞ்சு என்னை வெளிய போன்னு சொல்ல வைக்காத மாயா” என்றவனின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரம் தென் பட்டது.

11 மணியளவில் வந்தவளை கண்டு அதிர்ந்து கோபமுற்றாலும், அவளின் உடல்நிலை கருதி உள்ளே அனுமதித்தவன், குழந்தைக்கும் அவளுக்கும் பால் எடுத்து வந்து கொடுத்தான்.

கேள்வியுடன் பார்த்தவளுக்கு “கண்டிப்பா நீ ஏதும் நல்லா சாபிட்டிருக்க மாட்ட, அதான் பால் கொண்டு வந்தேன், இப்ப காபி எல்லாம் குடிக்க கூடாதுனு உஷா சொல்லுவா” என்று அவளிடம் கூறினான்.

கேட்டவளுக்கோ கண் கலங்கியது.

“நான் வருவேன்னு தெரியுமா” என்று கலங்கிய குரலில் கேட்டவளுக்கு,

“கொஞ்சம் எதிர்ப்பார்த்தேன், நீ காரணம் சொல்ல வருவேன்னு, ஆனால் இவ்வளவு சீக்கிரம் இல்ல” என்று கூறினான்.

அதன் பிறகு அவளிடம் இருந்தது வெறும் மௌனம் மட்டுமே.

குழந்தையுடன் வந்த ஆதியை கவனித்த வண்ணமே இருந்தாள். இருவரிடம் பேச்சற்ற மௌனமே நீடித்தது.

“தயவு செய்து சொல்ல வேண்டியதை சொல்லிட்டு கிளம்பு மாயா. உஷா வந்துருவா, அவ இங்க வரும்போது நீ இருக்குறதை நான் விரும்பலை” என்றான்.

“ஆதி” என்று அதிர்ந்து பார்த்தவள் “அவ என் ப்ரெண்ட் ஆதி” என்று கூறினாள்.

“ஒஹ் உனக்கு ப்ரெண்ட்ன்னு இப்ப தான் தெரிஞ்சதா. சூப்பர்” என்று கிண்டல் செய்தவன், “ஒரு காலத்துல அவளை ஒரு மனுசியா கூட மதிக்காம நீயும் தான் இருந்த, உனக்காக அவ எவ்வளவு பண்ணிருப்பா, நன்றி இல்லாதவ நீ. அவகிட்ட பேச கூட நேரம் இல்லாத புது பணக்காரியாச்சே நீ” என்றான் கோபமுடன் ஆதி.

அவனை பார்த்தவளோ “ஆமாம் நான் புது பணக்காரி தான், எனக்கு நன்றி இல்ல தான், ஆனா அதெல்லாம் என்னைக்காவது நான் உஷா கிட்ட காமிச்சு இருப்பேன்னு நினைக்கிறாயா ஆதி. நான் ஏமாத்துனது உன்னை தான், பொய் சொன்னது உன்கிட்ட தான். என்னால உஷா கிட்ட பொய் சொல்ல முடியுமா?” என்று கேட்டவளின் கண்களில் இருந்த வலியை அப்பொழுது தான் கவனித்தான் ஆதி.

அவள் சொல்வதும் சரி தான், தன்னிடம் எவ்வளவு விளையாட்டுத்தனமாக இருந்தாலும், உஷாவை மாயாவால் கிண்டல் செய்யவோ, அவளிடம் பொய் சொல்லவோ கோபம் கொள்ளவோ, ஏன் அவளை உதாசினப்படுத்தவோ மாயாவால் முடியாது. யாரேனும் உஷாவை தவறாக கூறினால் கூட அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கியபிறகு தான் அடுத்த வேலையே. அவனே ஒரு நாள் அனுபவித்து இருக்கிறானே. அவர்களின் நட்பு கல்லூரியில் அவ்வளவு பிரபலமானது.

பாஸ்டன் செல்லும் சமயத்தில் கூட உஷாவிடம் நிறைய பேசு. பாவம் அவள், பார்த்துக்கொள் அவளை என்று தானே கூறினாள். தன்னைப்பற்றி கூட அவள் இவ்வளவு சிந்திக்கவில்லையே.

“அப்ப என்கிட்ட பொய் சொல்ல காரணம்?” கூர்மையாக கேட்டவனுக்கு பதில் சொல்ல மிகவும் தயங்கினாள்.

“பதில் சொல்லு மாயா”

கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராமல் இருக்க கண்களை இறுக மூடியவளின் அதரமோ “பரத்தோட அம்மாக்கு அவங்க இறக்குற சமயத்துல நான் பண்ணி கொடுத்த சத்தியம் தான் காரணம் ஆதி” என்று கூறியது.

“என்ன” என்று அதிர்ந்தவனுக்கு

“ஆமாம் ஆதி. பாஸ்டன் போன கொஞ்ச நாளையே எனக்கு ஹாஸ்டல் செட் ஆகலை. நானும் என்கூட தங்கின ஒரு பொண்ணும் வீடு தேடி அலைஞ்சோம். அப்ப எனக்கு பழக்கம் ஆனவங்க தான் பரத் அம்மா காதம்பரி. ரொம்ப நல்லவங்க. ஆனால் அந்த நல்லவங்களுக்கு கடவுள் கொடுத்ததோ நிறைய கஷ்டம் தான்”.

“பெரிய பணக்காரங்க ஆதி. பரத் அவங்களோட ஒரே பையன். ஹி இஸ் பார்ன் வித் கோல்டன் ஸ்பூன். அதனாலேயே பரத் ரொம்ப கெட்ட பழக்கத்தோடேயே வளர்ந்தாரு. செல்லம் ஜாஸ்தி. கண்டிப்பு தர வேண்டிய அப்பாவோ பணம் சம்பாதிக்க போய்ட்டாரு. இவங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம். இவங்களுக்கும் அவரை கண்டிக்க முடியலை. பட் ஹி இஸ் வெரி ஜீனியஸ் அண்ட் கைண்ட் பெர்சன் ஆதி”.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.