(Reading time: 54 - 107 minutes)

ந்த ராம் அப்படி ஒன்றும் பெர்ஷ்னாலிட்டி கிடையாது.  இவனை விட உயரம் கம்மியாக , மெலிந்து சத்தியமாக இந்துவுக்கு பொருத்தமே இல்லை.

வசதியில் பார்த்தாலும் அவங்க அப்பாக்கு அஷிஷ்டன்ட் னா மிடில் க்ளாஷ் . எப்படி இந்த பொண்ணு அந்த ராமை லவ்  பண்ணுது. இதுக்குதான் காதலுக்கு கண் இல்லை என்பதோ என்று நினைத்தவனுக்கு பாரதியின் நினைவு வந்தது.

அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது. இந்துகூட ஒப்பிடும்பொழுது பாரதியும் அந்த அளவுக்கு அழகில்லை. அவளும் மிடில் க்ளாஷ் தான். ஆனாலும் அவன் மனம் இந்துவிடம் படரவில்லையே. பாரதியை தானே   தனக்கானவள் என்று அவன் மனம் நாடியது. இதுதான் காதலின் மகிமையா?”

இந்து தன் முகத்தையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு, மெல்ல புன்னகைத்து

“என்ன உங்க ராம் இப்போ உங்க காதலை ஏற்று கொண்டாரா?”

“ம்ஹூம் “ என்று தலைய இட வலமாக ஆற்றினாள் மிகுந்த வருத்தத்துடன். “முன்னாடியாவது என்னை பார்த்து அட்லீஷ்ட் புன்னகைப்பார் . ஆனால் இப்போ எனக்கு திருமணம் நிச்சயம் ஆயிருச்சுனு  என் பக்கமே திரும்பறது இல்லை. நானும் எவ்வளவோ விளக்க ட்ரை பண்ணினேன். அவர் என் பேச்சை கேட்க, என் அருகில் வர கூட தயாரா இல்லை “

“அவருக்கும் என் மேல் விருப்பம் தான். ஆனால் நான் பணக்கார வீட்டு பெண். அவங்க வசதிக்கு பொருத்தமா இருக்காது. அதை விட எங்க அப்பாகிட்டயே வேலை செய்திட்டு அவர் பொண்ணை லவ் பண்ணா அது அப்பாவுக்கு துரோகம் என்றுதான் என்னை மறுக்கிறார்.”

அபிக்கு அந்த ராமை நினைத்து பெருமையாக இருந்தது. இந்த  காலத்தில் கூட இப்படி இருக்காங்களே. ஒரு அழகான, வசதியான  பொண்ணு தானே வந்து காதலை சொல்லியும் அதை பயன்படுத்திக்காமல் நேர்மையாக இருக்கிறானே. நல்ல பையன்தான் என்று நினைத்து கொண்டான்.

“பின் திருமணத்தை நிறுத்துவது ? “ என்று புரியாமல் அவளை பார்த்தான்.

அவர் என் காதலை ஏத்துக்கலை  என்பதற்காக என் காதல் பொய்யாகாது.  நான் அவரை உண்மையாக  காதலிக்கிறேன்.  அவரை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.

உங்களை மணந்தாலும் அது பொய்யான வாழ்க்கையாக தான் இருக்கும். வீணா உங்களையும் கஷ்டபடுத்த விரும்பல. அதான் முன்னாடியே  சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று. நீங்க ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தினால் இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை தொந்தரவு செய்ய மாட்டாங்க”

“நான் இப்ப நிறுத்தினாலும், பிறகு உங்க வீட்ல வேற கல்யாணத்துக்கு கட்டாய படுத்த மாட்டாங்களா?”

“உங்க நிச்சயத்துக்கே நான் சம்மதித்திருக்க கூடாது. அப்போ எனக்கு சரியா புரியல.

ஆனால் நீங்க ஒவ்வொரு முறை போன் பண்றப்பவும் எனக்கு ஏதோ  முள்ளு மேல நிற்கிற மாதிரி இருந்தது. அப்பதான் தெரிந்தது நான்  ராமை எவ்வளவு விரும்பறேன் என்று. அவரை தவிர வேற யார் கூடவும் நெருங்க முடியாது என்று.

நான் ஏதாவது அதிகமா பேசி உங்க மனசில ஆசைய வளத்திட கூடாது தான் நான் எதுவும் பேசலை. சாரி, உங்களுக்கு கஷ்டமா இருந்திருக்கும்.

எவ்ளோ கேள்விகள் கேட்டீங்க. என்னை பிடிச்சிருக்கா னு ஒரு கேள்வி கேட்டிருந்தீங்கனா அப்பயே என் கதையை சொல்ல தைரியம் வந்திருக்குமோ என்னவோ?”

“ஆனால் இப்ப நான் தெலிவாயிட்டேன். இன்னொரு தரம் என்னால இந்த வேஷம் போட முடியாது. இனிமேல் எங்க வீட்லயும் என்னால தைரியமா  எடுத்து சொல்ல முடியும் ராமை தவிர வேற யாரையும் மணக்க முடியாது என்று”

“அடபாவி, சம்மந்தமே இல்லாமல் Out of syllabus la இருக்கிற கொஷ்டினா கேட்டியே. முக்கியமா , syllabus  ல இருக்கிற கேள்விய விட்டிட்டியே? நீ எல்லாம் எப்படிதான் ஆபிஷ் ல இன்டர்வ்யூ பன்னி ஆளுங்கள எடுக்கறியோ?

இந்த பொண்ணு அப்பயே சொல்லி  இருந்தா நான் இந்துவா, பாரதியானு confuse ஆகாம  நம்ம பாரதி பொண்ணயே ஷைட் அடிச்சிருப்பேன். சொதப்பிட்டியே “ என்று புலம்பியது மனசாட்சி.

“எப்படி இதை  கேட்காம போணேன். ஒரு வேல எல்லாரும் நான் ஹேன்ட்ஷமா இருக்கேன். எல்லா பொண்ணுங்களும் என்னை சுத்தி வர்ராங்கனு சொல்லி சொல்லியே எனக்குள்  கர்வம் வந்திருச்சோ?

எப்படியும் என்னை பிடிச்சிருக்கும்  என்று நானே நினைத்து கொண்டேன். அதனால் தான் அந்த பொண்ணுகிட்ட “என்னை பிடிச்சிருககா” என்று  எனக்கு கேட்க தோணல. ஆனால் அந்த கர்வத்தையே உடைச்சிருச்சு இந்த காதல். என்னையே பிடிக்கலை என்று சொல்லிருச்சே “ என்று  வருத்தத்துடன்

“உங்கள் காதல்  கண்டிப்பா வெற்றி பெறும். என் வாழ்த்துக்கள். நானும் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன். இந்த திருமணத்தை நானே நிறுத்திடறேன்

அப்ப நமக்குள்

"எல்லாமே முடிஞ்சு போச்சு..." என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி...!

ஒரு வழியாக இந்த பிரச்சனை முடிஞ்சுதே என்று....

அதன் பிறகு அபி இந்துவின் அப்பாவை சந்தித்து, தான் வேற ஒரு பொண்ணை விரும்புவதாகவும், இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி கல்யாணத்தை நிறுத்த சொன்னான். ராமை சந்தித்து இந்துவோட காதலை எடுத்து சொல்லி அவனுக்கு பைனான்சியலாலும் ஹெல்ப் பண்ணி, இந்துவின் அப்பாவிடம் எடுத்துசொல்லி தங்களுக்கு பார்த்த அதே முகூர்த்ததிலே ராம்-இந்து திருமணத்தை நடத்தி வைத்தான்.

இந்து திருமணம் முடிந்த அடுத்த நாளே, பாக்கியம்  பாரதியின் பெற்றோரை சந்தித்து நிச்சயம் எதுவும் செய்யாமல் அடுத்த வாரமே அபி-பாரதி திருமணத்தை முடித்தார். எங்க நிச்சயம் பண்ணி 3 மாதம் இடையில் இவன் வேற ஒரு பொண்ணை பிடிச்சிருக்குனு வந்தானா என்ன பண்றது என்ற கவலையில் தான் திருமணத்தை உடனே முடித்தார்.

அபி , இந்து இருவரும் காதலில் வென்று தன்னவளு/னு டன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தனர் காதலுடன்.

வேலனும், “காதல் என்பது அழகு , வசதி பார்த்து வருவதில்லை. உண்மை காதல் எப்பவும் ஜெயிக்கும்” என்ற காதலின் மகிமையை உணர்த்த, தான் ஆரம்பித்த விளையாட்டு நல்ல படியாக முடிந்தது என்ற மகிழ்ச்சியோடு வள்ளியை தேடி சென்றான் காதலுடன் ....

Hai friends, hope you enjoyed this story. Actually காதலர் தினத்திற்காக இந்த கதையை எழுத ஆரம்பித்தது. அதற்கு முன் முடிக்க முடியவில்லை.

இந்த கதையில் வரும் காதலர்களை போன்று, நீங்களும் உங்கள் வாழ்க்கை பயணத்தை காதலுடன் தொடர வாழ்த்துக்கள் !!!

Belated Happy Valentines day!!

This is entry #101 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - பத்மினி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.