(Reading time: 13 - 26 minutes)

2017 போட்டி சிறுகதை 102 - சீதையின் இராவணன் - புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #102 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புக்கேற்ற கதை - என் கணவன், என் தோழன்

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

 love

ன்னைக்காச்சும் இந்த மீட்டிங் நல்லபடியா நடக்குமா?” என்ற கேள்வி அந்த அலுவலகத்தில் இருந்தவர்களின் பேச்சின் பிரதானமாய் இருந்தது. இதற்குமுன் இரண்டு தடவை மீட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது, ஃபோன் ஒன்று வரவும் யாரையும் மதிக்காமல் அங்கிருந்து சென்றிருந்தான் அவன்.

அவனை எதிர்த்து கேள்வி கேட்கவோ, அல்லது நிறுத்தவோ யாருக்குமே தைரியம் இருக்கவில்லை. இன்று என்று இல்லை, அவன் இத்தொழிலுக்கு வந்து தனக்கென அடையாளம் ஏற்படுத்திக் கொண்ட கடந்த பதினைந்து வருடங்களில் அவனை எதிர்த்து எவரும் கேள்வி கேட்டதில்லை. அப்படியொரு ஆளுமை திறன் அவனுக்கு. அவனது முகத்திற்கு நேராக பேச தைரியம் இல்லாத பலர் இப்போது அவன் இன்னும் வரவில்லை என்ற தைரியத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அவர் வீட்டுக்கு யாரோ ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்திருக்காராமே! அந்த பெண் வந்ததுக்குபிறகுதான் ஆளே மாறிட்டாரு. எப்பவுமே வீட்டில்தான் இருக்காராம்..ஆஃபிஸை கவனிக்கிறதே இல்லையாம்!”

“ஹ்ம்ம்..பெண்ணாசை வந்துட்டா அழிவு நிச்சயம்னு சும்மாவா சொன்னாங்க?” என்று பேசிக் கொண்டிருந்தவர்களின் பேச்சு அவன் உள்ளே வந்ததும் அப்படியே நின்று போனது. அந்த அறைக்குள் இருந்த சலசலப்பு ஒரே நொடியில் நிசப்தமாய் மாறியது. அவன் பார்வையின் தீட்சன்யத்துக்கு அப்படியொரு ஷக்தி.

அனைவரும் அமைதியாகிவிட தனது கணீர் குரலில் பேச ஆரம்பித்தான் அவன். அவன் பேச ஆரம்பித்த பத்தாவது நிமிடம் அன்றுபோல் இன்றும் போன் அடித்தது. அனைவரின் முகத்திலும் அதிருப்தி.

“டோண்ட் வர்ரி  ஜெண்டல்மேன். இன்னைக்கு கண்டிப்பா மீட்டிங் நடக்கும்”என்றவன் தனது அசிஸ்டண்டை அழைத்து எதையோ காதில் முணுமுணுத்தான். அந்த அலுவலக அறையில் இருள் சூழ்ந்திட, அந்த மீட்டிங்கின் சாரம்சமாய் அவன் பேச வேண்டிய தகவல்கள் காணொலியாய் ஒளிபரப்பாகியது. மிச்சத்தை தனது விசுவாசி சமாளித்து கொள்வான் என்று அறிந்தவன், காரைக் கிளப்பினான் வீட்டை நோக்கி. அவன் புஷ்பரகன்!

ன்னொரு பக்கம் ஆவேசமும் ஆதங்கமும் நிரம்பிய குரலில் பேசிக் கொண்டிருந்தான் அவன். அந்த அரங்கத்தில் அவன் குரலே ஓங்கி ஒலித்தது, அவன் புருஷோத்தமன்! உளவியல் மற்றும் மருத்துவத்தில் பெரும் புகழை அடைந்தவன். தனது ஆராய்ச்சிக்காக அல்லும் பகலும் உழைப்பவன்.

அதற்காக அவன் விலையாய் கொடுத்தது தன் மணவாழ்க்கைதான்! திருமணமாகிய பதினான்கே நாட்களில் தன் காதல் மனைவியை அவன் வீட்டிலேயேவிட்டுவிட்டு ஸ்பெயின் நாட்டிற்கு வந்திருந்தான். தனது ஆராய்ச்சிக்காக. தனது நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் அவல நிலைக்கு குரல் கொடுக்கும் எண்ணத்தில்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் காலம் காலமாய் இப்புவியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வர சட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தீர்வு?

அதைத்தேடிதான் இப்பயணம். அண்டை நாடுகளில் அவ்வப்போது இதைபற்றி ஆராய்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. காமம் என்பது குற்றமல்ல உணர்வு! அந்த உணர்வு மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று. ஆனால் அதே நேரம் மனிதனால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்த உணர்வுதான் அது.

அப்படியிருக்கையில் ஏன் இத்தனை அவலநிலைகள்? பெண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாத சிசுவை கசக்கி மண்ணாக்குவது உணர்வல்ல வெறி. இதற்கான காரணம் என்ன?உளவியல் பிரச்சனை மட்டும்தானா?உடலளவின் பிரச்சனை இல்லையா? என்ற ஆராய்ச்சியில் பாலியல் வன்முறை செயலில் ஈடுபட்டவர்களை வைத்து DNAக்கள் மூலமாக இதற்கான காரணத்தை ஆராய்ச்சி செய்திருந்தான்.

மேலும் pepper sprayபோல ஆணின் காம உணர்வினை உடனே மட்டுப்படுத்தும் இரசாயண ஸ்ப்ரே ஒன்றையும் கண்டுபிடித்திருந்தான் அவன். அதைப்பற்றிய கருத்தருங்கில் தன் படைப்பினைப் பற்றி அவன் பேசிக் கொண்டிருக்க, மனமோ பத்து மாதங்களாய் ஃபோனில் கூட பேசாமல் பிரிந்து வாழும் மனையாளைப் பற்றியே நினைத்தது.

ந்த மாளிகைப் போன்ற வீட்டினுள் புஷ்பரகனின் கார் சீறி பாய்ந்து நுழைந்தது.

“தம்பி வாங்க தம்பி” என ஓடி வந்தார் வீட்டில் சமையல் வேலை செய்யும் அன்னபூரணி.

“என்னாச்சு பூரணிம்மா?” அவன் நேராக விஷயத்திற்கு வர, அவரும் சற்றுமுன் அவனுக்கு ஃபோன் செய்த காரணத்தைக் கூறினார்.

“அந்த பொண்ணு சாப்பிட வரவே இல்லை தம்பி, கதவு பூட்டியே இருக்கு..நிறைய தடவை கதவை தட்டினேன்.பதிலே இல்லை” என்றார் அவர். அடுத்த நொடி இரண்டிரண்டு படிகளாக தாவி அவள் இருக்கும் அறையின் வாசலில் நின்றான் புஷ்பரகன். இரண்டு முறை அவள் பெயரை அழைத்தான்.பதில் இல்லை.

கோபம் கொண்ட சிங்கமாய் அடுத்த அறைக்குள் நுழைந்தான். அது அவனது படுக்கையறைதான். அவளது அறைக்குள் நுழைய அவன் அறையில் ஒரு வாசல் இருந்தது. அந்த கதவைத் திறந்து கொண்டு நுழைந்தவனுக்கு அவள் இருந்த கோலத்தை கண்டதும் சுரீரென வலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.