(Reading time: 12 - 23 minutes)

ப்போ அந்த பொக்கிஷத்தை நீங்களே கட்டிக்கிட்டு அழுங்க.. ரெண்டுல ஒரு முடிவு தெரியறவரைக்கும் நான் எங்கம்மா வீட்டுக்கே போறேன்”

மவுனமாக தலைகுனிந்தான். தாயையும் தாரத்தையும் சமமாக நேசிக்கும் தன்னைப் போன்றவர்கள் தப்பிக்க முடியாத வேதனைத் தருணம் இது என்பது அறிவுக்குப் புரிந்தாலும்... மனசு வலித்தது.. விழி கனத்தது!

அடுக்களை கதவருகே மறைந்து நின்றிருந்த சுந்தரிம்மா மூச்சை அடக்கி காதை கூர்மையாக்கினார்! மருமகளது மிரட்டலில் மகன் மடங்கிவிடுவானோ எனும் அச்சத்தில் தேகம் படபடத்தது! மறுகணம் ஒலித்த மகனின் குரலில் அவள் முகத்தில் மந்தகாசப் புன்னகை பரவியது.

“போகணும்னா தனியா போகாதே.. மகனைக் கூட அனுப்பறேன்.. ரஜத்... கண்ணா ரஜத்... அம்மா கூட போ”

கமலா படியிறங்கிப்போகையில் சுந்தரிம்மா அங்கலாய்த்தார்.

“ஆனாலும் என் மருமவளுக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது. குடும்பத்தை பிரிக்கமாட்டாள்னு நம்பி சொந்தத்திலே அதுவும் உள்ளூர்லேயே பொண்ணு எடுத்தது தப்பா போச்சோ? நீ ஒண்ணும் கவலைப்படாதே மகனே.. வெளிநாட்டுல இருந்து வந்திருக்கிற புருஷன்கூட கோபிச்சுட்டு எத்தனை நாள் தாய்வீட்டுல இருந்திரமுடியும்? ஊரும் உறவும் நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கிறப்போ மூணாம்நாளே திரும்பி வந்துரவா. ”  

ரவில்லை. இன்றோடு ஆறுநாட்கள்! விடிந்தால் மகனது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்ல, இன்னும் பத்துநாளில் சூரஜ் குவைத்துக்கு புறப்பட்டுவிடுவான் என்ற நிலையிலும் கூட மருமகள் மனம் மாறி வராதது சுந்தரிக்கே அதிர்ச்சிதான். அதேசமயம் மகனது உறுதியிலும் மவுனத்திலும் தனக்கான சாம்ராஜ்யம் உறுதிப்பட்டு விட்டதில் உள்ளூர பெருமகிழ்ச்சியே! ஆனாலும் அறுபத்தியாறு வயதில் மீண்டும் ஆனா ஆவன்னா அரிச்சுவடி படிப்பதுபோல மறுபடி அடுப்பு பற்றி பாத்திரம் ஏற்றி சமைப்பது போராட்டமே!  ‘அண்ணன் போகிறவரையாவது பூர்வீக வீட்டில் வந்திருங்கப்பா’ என தம்பிகள் குடும்பத்தை ஜாடைமாடையாக அழைத்தபோது... பதில் என்னவோ.. நேரடியாகவே வந்தது.

“அய்யய்யோ என் பொண்டாட்டியா? அவள்லாம் அண்ணிமாதிரி அட்ஜஸ்டிங் டைப் இல்லை. அதுவும் உன் கூட.. ஊஹூம் செட்டாகாதும்மா”

அப்போதுதான் தன் தவறு பிடிபட்டு சுந்தரி புலம்ப ஆரம்பித்தாள்..

“நான் மாமியாருங்கிற அதிகாரம் காட்டினப்போல்லாம் பொறுத்துக்கிட்ட மூத்த மருமவ.. இப்ப நான் பாதிக்குப்பாதியா வாயையும் கோவத்தையும் குறைச்சப்பிறகா வீட்டை விட்டுப்போகணும்? ஹும் எல்லாம் விதி”

அப்போதும் ஹீனமான புன்னகையைத்தவிர சூரஜிடம் வேறு பதில் இல்லை. வயதுக்குப் பொருத்தமில்லா மவுனத்துடன் தலைகுனிந்திருக்கும் பதின்மூன்று வயது மகனைப் பார்க்கையில் இன்னும் கூடுதல் மன அழுத்தம்!

“அம்மா ஞாபகம் ரொம்ப வருதா? உன் பிறந்தநாளை அம்மாவோட போய் கொண்டாடுறியா?”

”ஊஹூம்.. வேணாம். ஆனா நீங்க கூப்பிட்டா அம்மா வந்திருவாங்க”

“நான் போகச்சொல்லியிருந்தாதானே நானே கூப்பிடணும்னு எதிர்பார்க்க முடியும்?”

பேரன் முகம் வாடி தலைகுனிந்தபோது சுந்தரிக்கும் மனசு கனத்தது.

“நீ கவலைப்படாதே.. உன் பிறந்தநாளைக்கு பாட்டி பிரியாணி பண்றேன். நீயே போய் அம்மாவுக்கும் குடுத்துட்டு அம்மாவோட கொஞ்சம் இருந்துட்டு வா”

“ம்...”

கனது பிறந்தநாள்! முதன்முறையாக மகன் அருகில் இல்லை! கமலா மூலையிலே சாய்ந்திருந்தாள். அம்மா அடுக்களையில் இருந்து வெளிவந்து...”நாளும் கிழமையுமா மூதேவி கணக்கா மூலையிலே உட்கார்ந்திருக்காதே. உன் புருஷன்கூடத்தானே சண்டை. உன் புள்ளை என்ன பாவம் செய்தான்? சாக்லேட்டோ கேக்கோ வாங்கிட்டுப்போய் புள்ளையைப் பார்க்கத் தோணலையா?” என கத்திவிட்டுப் போகவே.. கமலாவுக்கு ரோஷம் பொங்கியது. தான் ஒன்றும் சோகத்தில் முடங்கிக் கிடக்கவில்லை என ஊருக்கு காட்ட நினைத்தவளாக பெட்டியைத் திறந்து பட்டு புடவையை எடுத்து விரிக்கவும் தம்பி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“எங்கே கிளம்பிட்டே.. புருஷன் வீட்டுக்கா?”

“நான் ஏன் அங்கே போறேன். நான் கோவிலுக்கு போய் என் பிள்ளை பேர்ல அர்ச்சனை பண்ணப் போறேன்”

“இப்படி சொல்ல வெட்கமாயில்லை. பெத்த அம்மாவை பட்டினிப்போட்டுட்டு ஊருக்கெல்லாம் அன்னதானம் செய்த கதையா நல்ல நாளும் அதுவுமா புருஷனையும் புள்ளையையும் பார்க்காம சாமியை குசலம் விசாரிக்க போறியாக்கும்?”

“அவருக்கு பொண்டாட்டி நினைப்பு இல்லேன்னா எனக்கு மட்டும் எதுக்கு அவர் நினைப்பு?”

“நீ அவரை புரிஞ்சுகிட்ட்து அவ்வளவுதான். அவர் காரணமில்லாம எதுவும் செய்ய மாட்டார். இன்னைக்கு கூட உன் புள்ளையை இங்கே வந்து உன் கூடத்தான் பிறந்தநாள் கொண்டாட  சொன்னார். அவன்தான் முடியாதுன்னுட்டான். அதனால வீணா மச்சானை குத்தம் சொல்றதா நினைச்சு உன் தலையிலே நீயே மண்ணை அள்ளி போட்டுக்காதே”

கமலா குழப்பத்தோடு பார்த்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.