(Reading time: 15 - 30 minutes)

2017 போட்டி சிறுகதை 121 -  பக்கெட் சுந்தரி - ஷிவானி

This is entry #121 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஷிவானி

Bucket

ணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்ர்த்துளிகள் எட்டிப் பார்த்தன… இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்… நினைக்கும் போதே சுளீர் என வலித்தது……

அவளின் இந்த அழுகோலம், இது ஒரு கட்டாய கல்யாணம் என்றுதான் பார்ப்பவரின் மனதை நம்பவைத்திருக்கும். தவிர்க்க முடியாத சூழ்நிலையின் காரணமோ, பெற்றோரின் நிர்பந்தமோ, மறுக்க முடியாத நிலையோ, என ஏதோ ஒன்றுதான் அவளின் இந்த திருமணத்திற்குக் காரணம் என்று நினைக்க வைத்திருக்கும். திருமணத்திற்கு வந்திருக்கும் சொந்தங்கள் முதல், தாம் வரை அனைவரும் அப்படித்தான் நினைத்திருப்பீர்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல, அதை யாதேன்று அறியும்வரை அனைவரும் அப்படித்தான் நினைப்பர். முதலில் நான் யார் என்பதை சொல்லிவிடுகிறேன், அப்போதுதான் நான் கூறுவதனைத்தும் நிஜம் என்று தங்களிற்கு புரியும். “வணக்கம்” நான் தான் மணப்பெண் சுந்தரியின் அம்மா. இது ஒரு காதல் திருமணம், தனது 6வருட காதலை கல்யாண மேடைக்கு கொண்டுவர, அவள் அனேக அறவழி போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருந்தது.

அதன் விளைவாகவே, இன்று குடும்பத்தாரின் அனுமதியோடு தான் விரும்பியவனின் கரம்பிடிக்கின்றாள். மகளின் மணக்கோலம் கண்டு மனதில் ஆனந்தம் எழுந்தாலும், அவளின் இந்த அழுகோலம் என் நிம்மதியை குலைக்கின்றது. தன் குடும்பத்தாரின் அனுமதியோடும், தான் விரும்பியவனோடும் நிகழும் இந்த திருமணத்தில் அவளின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்ததன் காரணம் யாது? தன் அன்பார்ந்த பெற்றோரை பிரியும் துக்கத்திலோ, தனது ஆசை காதலனை கணவனாக அடையும் சந்தோஷத்திலோ வந்ததாக என்னவேண்டாம்.

அவள் ஒரு “பைத்தியம்”. என்னடா? பெற்றவளே இப்படி கூறுகின்றாளே என்று என்னை தவறாக நினைக்க வேண்டாம். அவளின் அழுகைக்கான காரணம் அறிந்தபின் தாமும் என்னுடை இந்த கூற்றை ஆமோதிப்பீர்கள். ‘சுவச் பாரத்’, என்று நம் ப்ரதமர் 2016-ல் தான் கூறினார். ஆனால் நான், சுத்தத்தை உயிரினும் மேலாக என்னுபவள். நம் சுற்று சூழலை சுத்தத்தோடு பாதுகாப்பது நமது தர்மமும், மனிதனின் தவிர்க்க முடியாத கடமையுமாகும் என்பது என்னுடைய 10 வயது முதலான நம்பிக்கை.

இதை எண்ணத்திலும், வார்த்தையிலும் மட்டும் நிறுத்தாது என் செயலிலும் காட்டியதின் பலனாக மாநில அளவில் பல விருதுகள் பெற்று சிறபிக்க பட்டிருக்கின்றேன். என்னுடைய இந்த நன்னடத்தையே மணமேடையில் அமர்ந்திருக்கும் என்மகளின் அழுகைக்கு காரணமாகிவிட்டது என்பது என்மனதை சுளீர் என்று வலிக்கசெய்கிறது. எப்படி? என்று யோசிக்கின்றீர்களா?........ அதையும் சொல்கின்றேன் கேளுங்கள். கல்யாண வீடு என்பதால் சொந்தங்கள் நிறைந்திருந்தன. சொந்தங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், வேலைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

அவை அனைத்தையும் செய்வதோடு சேர்த்து, எனது ‘சுத்தம்’ என்னும் தர்மத்தையும் காத்து வந்தேன். நேற்று மாலை 4 மணியளவில், அழுக்கு துணிகளை ஊர வைக்கும் பக்கெட் ஒன்றை கண்டேன். அதன் மேல்புரத்தில் சாரை, சாரையாக சோப்புக்கறை படிந்திருப்பதை பார்த்து உறவினர்களின் சுத்தம் மற்றும் பொருப்பில்லாமையை நினைத்து கோபம் கொண்டேன். தவிர்க்க முடியாத வேறு சில வேலைகள் இருந்த காரணத்தால் தோழிகளோடு பேசிக்கொண்டிருந்த சுந்தரியை கல்யான பெண் என்று கூட பாராது அதை உடனடியாக சுத்தம் செய்ய கூறினேன்.

சுத்தத்தின் மீது நான் கொண்ட பிணைப்பின் வெளிப்பாடே எனது மகளின் பெயராக ஆனது, “சுந்தரி”. ‘சுத்தமாக’ இருந்தால்தான் எதுவும் ‘சுந்தரமாக’ இருக்க இயலும் என்பது எனது நம்பிக்கை. என்னைப்போல் அவளும் சுத்ததில் நாட்டம் கொண்டவள் என்று நினைத்திருந்த காரணத்தால், பக்கெட்டை குறித்து மறுமுறை விசாரிக்க தவறினேன். அப்போது அது இப்படி ஒரு விஷ்வரூபம் கொண்டு சுந்தரியை பாதிக்கும் என்பதை அறியாது போனேன்.

“மணமேடையில் அமர்ந்திருக்கும் சுந்தரியின் அழுகைக்கும், வீட்டில் இருந்த அழுக்கு பக்கெட்டிற்கும் என்ன சம்மந்தம் என்றுதானே யோசிக்கின்றீர்கள்”? சம்மந்தம் உள்ளது……... திருமணத்தை அவள் விரும்பிய கோவிலில் நிகழ்த்த முடிவுசெய்த காரணத்தால் நேற்றிரவே அவ்விடத்தை வந்தடைந்தோம். கோவிலிற்கு உட்பட்ட அறைகளை ஆக்கிரமித்திருந்தோம். இன்று காலை 3 மணியளவில் எழுந்த நான், இயன்ற அளவு வேகமாக வேலைகளை முடித்து சுந்தரியின் அறையில் நுழைந்தேன்.

அவளின் மொபைலின் அலாரம் அடித்துக் கொண்டிருப்பதை கூட அறியாதவளாய் தூங்கிக்கொண்டிருந்தாள். எங்களின் ஆசை மகள் என்பதால் செல்லம் அதிகம், தினமும் நான் சென்று எழுப்பிய பின்னரே எழுவது வழக்கமாக இருந்தது. அலாரத்தை நிறுத்தி சுந்தரியின் காலின்மேல் கைவைத்தவளாய், “எழுந்திருமா சுந்தரி” என்றேன். மறுமுறை அழைத்தவளாய் அவளின் காலை அசைத்தேன். வழக்கத்திற்கு மாறாக எந்தவித அசைவுமின்றி அமைதியாக இருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.