(Reading time: 15 - 30 minutes)

ங்களின் பயணம் “ப்ரம்ம லோகத்தில்” முடிந்தது. எமலோகத்தை போலவே இங்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என் பக்கெட். ஈர்க்க பட்டவர்களில் ப்ரம்மாவும் ஒருவராக இருந்ததால், என் புண்ணிய அளவின் காரணமாக

“என்ன வரம்வேண்டும் கேள் சுந்தரி”?

என்று அவர் கேட்டபோது ‘அவ்விடம் விட்டு செல்வதே மிகவும் முக்கியமானதென்று என்மனம் கூறியதால்’ “ஏதுமில்லை” என்று பதிலளித்து அவசரமாக அவ்விடம் விட்டு விலகினேன்.

பெரிய பெரிய பாவ மூட்டைகளை சுமந்து வந்தவர்களை காட்டிலும் எனது பக்கெட்டும் அதன் மீது படிந்திருந்த அழுக்கும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததால் அடுத்த லோகத்திற்கு செல்லும் போது மற்றவர் காணாதவாறு பக்கெட்டை மறைத்து எடுத்து செல்லும் முடிவிற்கு வந்தேன். எங்களின் அடுத்த பயணம் வைகுண்டத்தில் முடிவுறும் முன்னரே என்னுடைய பக்கெட் என்னை அங்கும் விளம்பரப்படுத்திவிட்டதை எங்களை கடந்து சென்ற சிலர் இவ்வாறாக பேசியதில் அறிந்தேன்.

“யாரோ பக்கெட் சுந்தரியாமாபா, அவளோட சுத்தமான பக்கெட்டை இதுவரையில் யாருமே பார்த்திருக்க முடியாதாம். இப்பதான் ப்ரம்ம லோகத்திலிருந்து வந்தவன் சொன்னான். அதான் அவர்களை காண அவசரமாக சென்றுகொண்டுள்ளோம்…. பிறகு பேசலாம் நண்பா”! என்று கூறிய இருவர், ப்ரம்ம லோகத்திற்கு விரைந்ததை கண்டு மனமுடைந்தேன்.

“போதும்……… இதோடு இந்த பயணங்களை முடித்துக்கொள்ளலாம்” என்றேன். “இல்லை சுந்தரி, அது சாத்தியமில்லை…. வேண்டுமானால் வைகுண்டத்தை மட்டும் புறக்கணிக்கலாம் ஆனால் கைலாயத்தையும், ஈசனையுமல்ல. ஏனென்றால் இஷ்ட தெய்வ தரிசனம் மிகவும் கட்டாயமானதொன்று” என்றனர் எமதூதர்கள்.

தவிற்க இயலாததால் கைலாயத்தை வந்தடைந்தவுடன் எனது பக்கெட்டை ‘என்கால்களின் பின்மறைத்தவாறு எடுத்து செல்லும் முடிவிற்கு வந்தேன்’. அவ்வாறாகவே ஈசனின் முன்வந்தும் நின்றேன். எனக்கு பின்னிருந்தவர்களின் சலசலப்பு எனது முயற்சி தோற்றதை உறுதிசெய்தனர். இருப்பினும் “என்னுடைய இந்த முயற்சியால் ஈசனிடமிருந்து என் தவறின் சான்றை மறைத்துவிட்டேன்” என்று எண்ணும் அதேதருணம் என் பின் மறைந்திருக்கும் பக்கெட்டை எட்டிப்பார்க்க முற்பட்டான் ஈசன்.

சிறுபிள்ளை தனத்தை வெளிகாட்டும் அவனின் இச்செயல் என்னை வெட்கப்படவைத்தது. என் அம்மாவின் இத்தனைவருட முயற்சிக்கு என்னுடைய அலட்சிய செயலால் நான் இன்று திரோகம் செய்திருப்பதை உணர்ந்தேன். எனவே என்னவரம் வேண்டும் என்று ஈசன் கேட்கும் முன்னரே

“எனக்கு இந்த அழுக்கு பக்கெட்டை சுத்தப்படுத்திப்பார்க்கும் வாய்ப்பொன்று வேண்டும்”..…

“என் அம்மாவிடம் உண்மையைக்கூறி மன்னிப்பு கேட்க வேண்டும்”..…

“நானும், என்னை சுற்றியிருக்கும் பொருட்களும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்”…….. என்ற வரம் தாருங்கள் என்று கேட்டு அவரின் தாள்பணிந்தேன்.

“இவற்றை செய்ய எனக்கு மறுவாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லையே”? என்று இருந்தேன். ஆனால் “எப்படியோ உன்னை பார்த்துவிட்டேன்”……

நான் செய்த தவறையும் சொல்லிவிட்டேன்”…… “இப்பொவாவது என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுமா”!………… என்றாள்.

தான் செய்த தவறை தன்மனம் ஏற்காததும், அதை மறைக்க இயலாத சுந்தரியின் இளகிய மனமும், அதனால் ஏற்ப்பட்ட அழுத்தத்தின் வெளிப்பாடே அவளின் இத்தனை நேர பேச்சும், செயலும்.

அதன் பரிசே அவளின் இத்தகைய கனவு என்று புரிந்ததது. இத்தருணம் சுந்தரிக்கு தேவையாக இருப்பது கனிவான பேச்சு என்னும் முடிவிற்கு வந்ததால்

“சரிடா உன்னை மன்னிச்சிட்டேன்… இனி நீ அழாதேடா செல்லம்” என்று கூறி அவளை சமாதானம் செய்ய முயன்றேன்.

அவளின் பேச்சில் மூழ்கியிருந்த எனக்கு நேரம் சென்றதை அறியாமல் போனேன். உறவினர்களில் சிலர் கதவை தட்டியதில் உணர்ந்தேன் இன்னும் ஒரு மணிநேரம்தான் உள்ளது முகூர்த்தத்திற்கு என்று.

அவசரமாக அவளை அலங்கரித்து மணமேடைக்கு அழைத்துவந்து அமர்த்தினேன். தாலி அணிவிக்க இன்னும் சிலநிமிடங்களே இருக்கும் இத்தருணத்தில், பக்கெட்டை எண்ணி அவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் எட்டிப்பார்த்தால்… நான் முன்பே கூறியதைபோல் அவளை பைத்தியம் என்று கூறாது என்செய்வது?.......... ‘வேறு என்னசெய்வது’? எங்களின் ஆசை மகள் என்பதால், அந்த பக்கெட்டை சுத்தம் செய்து முகூர்த்த நேரத்திற்கு முன்னராகவே எடுத்துவருமாறு என் கணவரை அனுப்பியுள்ளேன்.

வாசலை வந்தடைந்தது அவரின் கார். மணமகனின் கைகளில் தாலியைக்கொடுத்தார் ஐயர் அழுதவாறு என்னைப் பார்த்தாள் சுந்தரி. அனைத்தும் சுபமாக முடியும் தருணம் வந்ததால் சிரித்தவாறு சுத்தம் செய்த பக்கெட்டை காட்டினேன், மணமகனும் தாலிகட்டினான், மஞ்சள் அரிசிகள் தலையில் விழ அனைவரின் ஆசியோடும் தன் காதலனை கணவனாக ஏற்று அவனோடு தனது திருமணவாழ்வை சிரித்துக்கொண்டே துவங்கினாள் “பக்கெட் சுந்தரி”.

இந்த கதையிலோ, கருத்திலோ, வாக்கியத்திலோ, வார்த்தையிலோ, எழுத்துப்பிழையோ இருந்தால் என்னை மன்னியுங்கள்.

This is entry #121 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - ஷிவானி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.