(Reading time: 15 - 30 minutes)

னம் புரியாத பயம் மனதை ஆட்கொண்டதால், “சுந்தரி……. சுந்தரி”……. என்று பதற்றத்தோடு அழைக்கத் துவங்கினேன். எனது தொடர்ந்த அழைப்பின் பலனாக சில நிமிடங்கள் கழித்து அசைந்தாள். அதைக்கண்ட பின்னரே என்ஜீவன் திரும்பியதாய் உணர்ந்தேன். தூக்கத்தில் இருந்து காலை நேரத்தில் எழும்பொழுது நாம் எத்தகைய பாவத்தோடு எழுகின்றோமோ அதுவே நமது அந்த நாள் முழுவதையும் ஆட்கொள்வது சகஜமான ஒன்று. இதை நாம் அனைவரும் உணர்ந்திருக்க கூடும். சில சமயத்தில் நாம் கனவில் கண்ட நிகழ்வுகள்கூட அந்நாள் முழுவதின் பாவத்தை நிர்ணயிக்கும் சக்தி கொண்டவையாக மாறிவிடும்.

நம்மில் சிலருக்கு தூக்கத்திலிருந்து எழுந்த பிறகும் தன்நிலையை அடைய இயலாமல் தான் கண்ட கனவுகளில் சிக்கிக்கொண்டு, விடுபடவும் இயலாது அதன் தொடர்ச்சியை தம்செயலிலும், பேச்சிலும் வெளிபடுத்துவதை நாம் காணலாம். எனவே, எனது கண்ணீர் அவளின் இன்றைய அமைதிக்கும், மகிழ்சிக்கும் தடையாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு கண்களின் கண்ணீரை அவளிடமிருந்து மறைத்தேன். அதற்குள் தனது படுக்கையின் மேலெழுந்து அமர்ந்திருந்தாள் சுந்தரி.

“குட் மார்னிங் செல்லம்”……. “சீக்கரம குளிச்சிட்டு வாடா, நேரமாயிடும்” என்று கூறியவளாய், அவளின் குளியலிற்கு தேவைப்படும் பொருட்களை எடுத்துக்கொண்டிருந்தேன். அசையாது அமர்ந்திருந்தாள் சுந்தரி. “போடா செல்லம், ரெடியாகனுமில்ல? போ”…….. என்றேன். பதிலேதும் பேசாது மௌனமாய் இருந்தவளை கண்டு கோபம் கொண்டேன். அவளின் முகத்தை பார்த்தவளாய் “சொல்லிட்டே இருக்க, என்னாச்சு உனக்கு”? என்று கேட்க அழத்துவங்கினாள். பதற்றம் கொண்டவளாய் “என்னாச்சுமா சுந்தரி? அழாதே” என்று அவளின் தலையின்மேல் கைவைத்தேன்.

அதுவரை ப்ரம்மை பிடித்தவளைபோல், ஏதோ லோகத்தில் இருந்தவள், என் தீண்டலை உணர்ந்து “அம்மா”……… என்று அழைத்தவளாய் என்கையை பற்றினாள். அவளின் கண்ணீரும், அழைப்பும் பலவருட பிரிவின் தவிப்பை வெளிப்படுத்தியது. அறையில் நுழைந்ததுமுதல் சுந்தரியின் மாற்றங்களைகண்ட என்மனம், ஏதோ தவறாக நிகழ்ந்திருப்பதை உணர்ந்தது. எனவே அவளிடம் அமைதியாக பேசி அனைத்தையும் சரிசெய்ய முயன்றேன். “என்னடா ஆச்சு தங்கம்”?............... என்றேன்.

மேலும் என்கையை இறுக பற்றியவளாய், “என்னை மன்னிச்சிடுமா, ப்லீஸ்……… ப்லீஸ்”……… என்று கதரினாள். என்மகளின் கெஞ்சல் நிறைந்த வார்த்தையும், கண்ணீர் நிறைந்த பார்வையும் என் நெஞ்சை உடைத்தது. “எதுக்குடா நான் உன்னை மன்னிக்கனும்? நீதா எந்த தப்பும் செய்யலியே” என்று கேட்க, “இல்லமா நான் உன்னை ஏமாதிட்ட, என்னை மன்னிச்சிடு”………… என்றாள். அவளிடம் நான் இதுவரை காணாத வார்த்தைகள், செயல்கள் என அனைத்தும், அவள் எதையோ என்னிடம் மறைத்திருப்பதையும், அது அவளின் மனதை இறுக்குவதின் விளைவாக இப்படி புலம்புவதையும் உணர்த்தியது.

எனவே, “என்ன நடந்ததுனு மொதல்ல சொல்லுடா செல்லம்”? என்றேன். “சொல்றமா”………. என்றவள் இவ்வாறாக கூறினாள்.

நேற்று மாலை 4 மணியளவில் நான் தோழிகளோடு பேசிக்கொண்டிருந்தபோது, நீ ஒரு சோப்பு கறை படிந்த பக்கெட்டை கொடுத்து சுத்தம் செய்ய கூறினாய் அல்லவா? அப்போது அதை சுத்தம் செய்ய மனம் இல்லாததால், நீ அதை கவனிக்கமாட்டாய் என்று நினைத்து சுத்தபடுத்தாது அப்படியே அதை என் அறையின் கட்டிலின் அடியில் தள்ளிவிட்டேன். தோழிகள் சென்ற பிறகு அசதியாக தோன்றியதால் சிறிது நேரம் உறங்கலாம் என்று நினைத்து கட்டிலின் மேல் படுத்தேன்.

அத்தருணம் யாரோ இருவர் எனதறையில் நுழைந்தனர். அவர்களின் மிகவிசித்திரமான தோற்றமும், உடையும், அவர்களை யார் என்று என்னை ப்ரம்மிக்க வைத்தது.

எனவே “யார் நீங்கள்”? என்று வினவினேன்.

“நாங்கள் எமதூதர்கள்” என்றனர்.

அப்பதில் அவர்களின் விசித்திரமான தோற்றத்திற்கு தெளிவான விளக்கத்தை தந்தது.

இருப்பினும் “தம்வருகையின் காரணம்”? என்றேன். “உன்னை அழைத்து செல்வது” என்றனர். அவர்களின் பதில் எனக்கு அதிர்ச்சியை தந்தது, “எனக்கு நாளை காலை திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது, நான் எப்படி வருவது”? என்று பதறினேன்.

“உனது புவிவாழ்வின் காலம் முடிந்தது. இனி உன் வாழ்வின் பாதையை நிர்ணயிக்கும் பொறுப்பு, எமது எமராஜனையே சேரும், அதை உன் பாவ, புண்ணிய கணக்கை கொண்டே நிர்ணயிக்க கூடும் ஆதலால் அவற்றை எடுத்து கிளம்புவாயாக எங்களோடு” என்றனர். அவர்களை கண்ட கணம் முதல் ‘இனி நான் அவர்களின் சொல்கேட்டு நடக்க வேண்டும்’ என்ற எண்ணம் என்மனதை வியாபிக்க தொடங்கியிருந்தது. எனவே, மறுப்பேதும் கூறாது அவர்களோடு கிளம்பும் முடிவோடு கட்டிலைவிட்டு இறங்கினேன்.

“சீக்கிரம் ஆகட்டும்” என்று கூறினர். “போகலாம்” என்று பதில் அளித்தேன். முதலில் உன் பாவ, புண்ணியங்களை எடுத்துக்கொள், அதோடு அவற்றை நீ மட்டும்தான் சுமந்துவர வேண்டும் என்றனர்.

“பாவம் புண்ணியமா”?

“அது எங்கே உள்ளது”? என்றேன்.

ஒருவன் பூமியின் மீது தான் வாழ்ந்த காலகட்டத்தில் செய்யும் அனைத்து செயல்களையும், அவன் இறந்த பிறகு அவற்றின் பலன்களின் அடிபடையில் பாவம், புண்ணியம் என்று பிரிக்க படுவதாகவும்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.