(Reading time: 15 - 30 minutes)

நாம் இறந்த பிறகுதான் அவற்றை நம் கண்களால் காண இயலும் என்றும், இப்போது என்னுடையவை என்கால்களின் பக்கத்தில் இருப்பதை காட்டி அவற்றை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்புமாறு அறிவுருத்தினர். அதை கண்டு அதிசயித்தேன். “ஆனால், எப்படி? எடுத்துச்செல்வது” என்னும் கேள்விகொண்டேன். எனவே பக்கத்தில் இருந்த அழுக்கு பக்கெட்டை காட்டி அதில் நிறப்பிக்கொள்ளுமாறு கூறினர் எமதூதர்கள். அவ்வாறாகவே செய்த நானும் அவர்களோடு சேர்ந்து வானத்தில் பறக்க ஆரம்பித்தேன்.

‘நடந்துக் கொண்டிருப்பவை அனைத்தும் முதலில் அதிசயமாக தோன்றியது, தொடர்ந்து அதிசயங்களே நிகழ்வதால் இறந்தபிறகு இப்படியெல்லாம் நிகழ்வது சகஜம் போல’ என்று நானே எனக்கு கூறி என் மனதை அமைதியான நிலைக்கு கொண்டுவந்தேன். செல்லும் வழியில் இனி நிகழவிருப்பவைகளை குறித்து கூறியவாறு வந்தனர் எமதூதர்கள். அதன் அடிபடையில் ஒரு மனிதன் இறந்த பிறகு முதலில் சந்திப்பது எமதூதர்களை, அவர்களோடு அவன் வானுலகில் முதலில் சந்திப்பது எமராஜனை.

அவர் நம் பாவ புண்ணியத்தை பார்த்தபிறகு அவற்றை சுமந்தவாறு த்ரிலோகாதிபதிகளையும் சந்திக்க அனுமதிகின்றார். ‘பாவத்தை அதிகமாக செய்திருந்தால் அதன் சுமையும் மிக கணமாக இருக்கும் அவற்றை சுமந்து செல்வது மிகவும் கடினமானதொன்று’ என்றனர். அதை நாம் சுமக்க இயலாது தவிக்கும் தருணத்தில், நம் எத்தகைய செயலிற்காக நாம் இத்தனை பெரிய பாவத்தை அடைந்தோம் என்பதையும் உணர்கின்றோம் என்றனர். அவற்றின் அளவை கொண்டு ‘நமக்கு தேவர்கள் வரமோ, தண்டனையோ, வழங்குவதாகவும்’ கூறினர்.

இவ்வழக்கத்தின்படி முதலில் “எமலோகம்” வந்தடைந்தோம். என்னைப்போன்ற பலர் எமராஜனின் வருகைக்காக அங்கு வரிசையில் நின்றிருந்தனர், அவர்களை தொடர்ந்தவாறு நின்றுகொள்ள கூறினர் எமதூதர்கள். அவர்களின் கைகளில் பெரிய, பெரிய மூட்டைகளை சுமந்திருந்தனர். அதிக பாரத்தை சுமக்க இயலாது மூட்டையை இழுத்து வருபவர்களையும் கண்டேன். அங்கிருந்த அனைவரும் என்னை அதிசயமாக பார்ப்பதைப்போல் தோன்றியது.

“அவர்களின் மூட்டைகளோடு ஒப்பிட்டு பார்க்கும்போது அங்கு இருந்தவர்களிலேயே மிகச்சிறிய பொருளில், மிகவும் சுலபமாக சுமந்து வந்திருந்தது நானே, என்பதால் அவர்கள் என்னை அப்படி பார்ப்பதாக நினைத்துக் கொண்டேன்”. ஆனால் அது உண்மையல்ல என்பது பிறகுதான் தெரிந்தது எனக்கு. அவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசத்துவங்கினர். அவர்களின் பேச்சு என்னுடைய பக்கெட்டை குறித்தது என்பதை அறிந்த பிறகுதான் அதை கவனித்தேன்.

அப்போதுதான் அதில் சாரை சாரையாக படிந்திருக்கும் சோப்புகறைகளை கண்டு என்தாயின் ஞாபமெழுந்தது எனக்கு. “சுத்தத்தை குறித்த அவரின் கருத்துகள் அனைத்தும் என்னை ஈர்த்திருந்த காரணத்தால், என்னால் இயன்றளவு, அவரின் கருத்துக்களை என்செயல்களாக்கி வாழ்ந்து வந்தேன்”. ஆனால் என்வாழ்வில் முதன்முதறையாக சுத்தத்தின் விஷயத்தில் அவரின் சொல்லை இன்றுதான் நிராகரித்தேன். “அவரை ஏமாற்றியதாலோ என்னவோ, மிகவும் அழுக்காக இருக்கும் அந்த அழுக்கு பக்கெட்டிலேயே என் பாவ புண்ணியங்களை எடுத்துவரும் நிலைவந்தது எனக்கு” என்று நினைத்துக்கொண்டிருந்த அதேதருனம் எமராஜனின் வருகை நிகழ்ந்தேறியது.

இத்தனை நேரமும் அவரின் வருகைக்காகக் காத்திருந்த அனைவரின் கவனத்தையும் என் அழுக்கு பக்கெட் இழுத்திருந்தது. அவரின் வருகையை ஒருவரும் கவனிக்காது போனதால், அனைவரின் பார்வையும் பதிந்திருப்பது எங்கே என்னும் கண்ணோட்டம் கொண்டார் எமராஜன். எனது அழுக்கு பக்கெட்டை கவனித்தவர், என்னை அழைத்து வந்தவர்களை பார்த்தவராக

“என்ன இது”? என்று வினவினார்.

“சுந்தரியின் கர்ம பலன்கள் மிகவும் குறைவாக இருந்தது, அதோடு அவளின் அறையில் வேறெந்த பொருளும் இல்லாத காரணத்தால் கட்டிலின் அடியில் இருந்த ஒரே பக்கெட்டை கண்டதும் அதில் எடுத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டோம்… மன்னியுங்கள்”! என்று இருவரும் ஒருங்கேறிய குரலில் கூறினர்.

“ஏம்மா, உங்க வீட்டுல பக்கெட்டெல்லாம் இவ்வளோ சுத்தமாவா இருக்கும்”? என்று ஒருவர் கேட்க அனைவரும் சிரிக்கத்துவங்கினர். ஒரு மனிதனின் வாழ்வில் சுத்தம் என்பது எத்தனை முக்கியம் என்பதை இன்றுதான் முதன்முறையாக என் அலட்சியத்தால் உணர்ந்தேன். எல்லோரின் பார்வையும், பேச்சும் என் பக்கெட்டை குறித்ததாகவே இருந்ததால் வரிசையின் மத்தியில் இருந்த என்னை முதலில் வந்து கணக்கை முடித்து அடுத்த லோகத்திற்கு செல்லுமாறு அழைத்தார் எமராஜன்.

“ஓ…………. அழுக்கு பக்கெட்டோட வந்த வரிசைல கூட காத்திருக்க வேண்டாம் போலிருக்கே” என்றும் சிலர் சலசலத்தனர். அவர்களை பொருட்படுத்தாது என் பாவ, புண்ணியக் கணக்கை காட்டினேன். அனைத்தையும் கண்ட எமராஜன்,

“இத்தனை குறைவான பாவங்களை செய்திருக்கும் நீ நல்ல மனமும், குணமும் கொண்டவள் என்பதில் ஐயமில்லை சுந்தரி. ஆனால் இந்த பக்கெட்டை சுத்தம் செய்துவிட்டிருக்கலாம்”………. என்று பேச்சை இழுத்தவர் தூதர்களை அழைத்து அடுத்த லோகத்திற்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.