(Reading time: 37 - 74 minutes)

ஹே.. என்ன விளையாடுறியா??? introduce னா எல்லாமே தான்... சொல்லு ராஜு” என்று அவன் அருகில் சென்று அமர்ந்தாள். இப்போது அவளது கண்களில் வடிந்த நீரினை கைகளால் துடைத்தவன். “நான் உன்ன முதல் முதல்ல பார்த்தது உங்க வீட்டுல இல்ல ரோனி...”

“அப்பறம்...”

“ஊட்டில... நான் என்னோட ப்ரண்ட்ஸ் கூட ட்ரிப் வந்திருந்தேன். அப்போ அதே ஊருக்கு நீயும் வந்திருந்த உன்னோட ப்ரண்ட் வீட்ல தங்கிருந்த...”

“அதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்...”

மெல்ல சிரித்தவன் “அது மட்டுமா தெரியும்... நீ பண்ணாத குறும்பா... நீ எப்படிபட்ட பொண்ணு தெரியுமா அப்போ...”

அவன் கூற கூற ஆர்வம் அதிகமானவள், அவன் கோர்வையாக சொல்ல சொல்ல சிரித்துக்கொண்டே கேட்டாள் “எப்படிப்பட்ட பொண்ணு???”

“ம்ம்ம்ம் ரொம்ப டேரிங் ஆன பொண்ணு.. எந்த அளவுக்குன்னா... 2 வாரம் ட்ரிப்க்காக வந்த என்னை கிண்டல் பண்ணி சேட்டை பண்ணி இம்ப்ரெஸ் பண்ணி லவ் சொல்லிட்டு போன பொண்ணு...”

“என்னது லவ் சொன்னேனா??? ஒரு வாரத்திலேயேவா??? அப்போ நீங்க வேலை பார்த்துட்டு இருந்தீங்களா???”

“ஆமா... நடுல ஒரு மாசம் லீவ் இருந்துச்சு அங்க இருக்க கௌரி ஆன்டி தெரியும்ல... அவங்க வீட்ல தங்கி இருந்தேன். டெய்லி எங்கயாவது வெளில சுத்துறதுக்கு வருவோம்... அவங்க எல்லாரும் பெரியவங்கன்னு தனியா ஒரு இடத்துல இருப்பாங்க நான் கணேஷ் கூட சேர்ந்து சுத்துவேன்.”

“அப்போ கணேஷ்க்கு என்ன முன்னாடியே தெரியுமா???”

“ம்ம்ம்ம்... நம்ம கல்யாணம் அப்போ கூட காதுல பேசிட்டு போனானே... அவனுக்கு மட்டும் தான் ஆதில இருந்து அந்தம் வரைக்கும் தெரியும்...”

“ஆனா எனக்கு இன்னும் நீங்க சொல்லவே ஆரம்பிக்கலை சொல்லுங்க நானா லவ் சொன்னேன்? அதுவும் ரெண்டு வாரத்தில...”

“ம்ம்ம்ம் ரெண்டு வாரம் கூட இல்ல... ஒரு வாரத்துல..” என்று அவளது கண்ணங்களை பிடித்து ஆட்டியவன், “எப்படி ப்ரொபோஸ் பண்ண தெரியுமா????”

“என்ன ஒரு ரோஸ் எடுத்துட்டு வந்து நீட்டி சொன்னேனா...”

“ஹே என்னோட ரோனிய அவ்வளவு கொறச்சு எட போடுறியே... முதல் நாள் ஏதோ கூட்டத்துல தெரியாமல் கணேஷ் உன் ப்ரிண்ட இடுச்சிட்டான்னு செம டோஸ் அவனுக்கு... அன்னைக்கு தான் முதல் சந்திப்பு அப்போ கூட என்ன அண்ணா இந்த பொண்ணு இப்படி சண்டைப் போடுது” என்று பேசிக்கிட்டு வந்தோம். “நான் தான் சமாதானமா பேசி முடிச்சுவிட்டேன்.”

“சண்டையா...???”

“ம்ம்ம்ம்... எப்பவும் பசங்க தான் எடக்கு முடக்கா பேசுவாங்கன்னு நினைச்சா நீ அதுக்கு மேல சண்டை போட்ட.. அப்பறம் ஒரு வழியாய் எப்படியோ எஸ்கேப் ஆகி போயிட்டேன்.”

“ஆனா திரும்பி மாட்டிக்கிட்டீங்களே...” என்று புன்னகையோடு கூறினாள்.

“ஆமா... பிரிக்கவே முடியாத அளவுக்கு... அப்பறம் அங்க வந்து ஒரு 5 நாளைல இருந்து டெய்லி ஒரு பென்சில் ஸ்கெட்சிங் வரும்... என்ன எப்படி எல்லாம் நீ பார்த்து ரசுச்சியோ அப்படியே வரைவ... தத்ரூபமா.... ஒரு வரி கவிதையோட...”

“நானா???” என்று புருவம் உயர, கண்கள் விரித்து ஆச்சரியமாக கேட்டாள்.

“ஆமா நீயே தான். எனக்கு முதல்ல யாருனே தெரியலை... கண்டு பிடிக்கவும் முடியல..”

“இப்போ வச்சிருக்கீங்களா???”

“ம்ம்ம்ம்...” என்று முகம் மலர்ந்து கூறிவிட்டு கையில் இருந்த ரிமோட் மூலம் அவளது அடுத்த புகைப்படங்களை slide போட்டுவிட்டு எங்கோ எழுந்து சென்றான். அந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் பின்புற இடங்களை வைத்தே தெரிந்தது அது ஊட்டி தான் என்று. அதோடு எதில் இருந்தோ அவளை மட்டும் தனியாக பிரித்தெடுத்திருக்கான் என்றும் புரிந்துப் போனது. அவளது கவனம் அவன் வரவும் கழைந்தது, திரும்பி வந்தவனின் கையில் ஒரு அழகிய சிவப்பு நிற பூ செண்டும் வெள்ளை காகித சூருளும் இருந்தது.

“லவ் யூ ரோனி..” என்று முதலில் பூசெண்டை குடுத்தவன்... அவள் ஆசையாய் அதை நெஞ்சோடு அனைத்துக்கொண்டதும் வரைந்த காகிதங்களை தந்தான்.

“ஹே... நிஜமாவே... இவ்வளோ நல்லா வரைவேனா??? ச்சே இத்தனை நாளா.. இது தெரியாம போச்சே... இல்லன்னா.. என்னோட கதைக்கெல்லாம் நானே ஒரு picture போட்டு இருப்பேனே...”

“கவிதை எழுதுறதை வச்சு தான் நான் உன்ன கதைகள் எழுத சொன்னேன். இப்படியே எல்லாத்தையும் சொல்லிட்டா அப்பறம் surprise னு நான் எதை சொல்றது.”

“அது சரி... நீங்க மீதி கதையை சொல்லுங்க...” என்று மெல்ல சிரிப்போடு அடுத்து கதையை கேட்க அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.