(Reading time: 37 - 74 minutes)

ம்ம்ம்ம்... இப்படியெல்லாம் என்ன surprise பண்ண என்னோட டார்லிங்... திடிர்னு ஒரு நாள் நேர்லயே வந்துட்டா... நானும் கணேஷும் சும்மா வெளிய போகலாம்னு வீட்டுக்கு வெளில வந்தா அங்க காலிங் பெல் அடிக்கலாமா வேணாமான்னு பார்த்துட்டு நின்னுட்டு இருந்த... நல்ல வேலை ஆன்டி அங்கிள் யாரும் இல்லை...”

“அப்பறம் என்ன பண்ணேன்...”

“இருடி சொல்றேன்.. என்ன பார்த்ததும் அழகா சிரிச்ச...” என்று அன்றைய நினைவில் ஆழ்ந்தவன் அமைதியாக இருக்க.. அவன் முன்னால் சொடுக்குப் போட்டவள்... “போதும் உங்க கனவு.. சீக்கரம் சொல்லுங்க...” என்று பரபரத்தாள்.

“அது சரி இதே மாதிரிதான் அவசர அவசரமா பேசிட்டு போன அன்னைக்கும்.”

“என்னனு???”

“ம்ம்ம்ம் இரு காட்டுறேன்...” என்று கூறிவிட்டு கையில் இருந்த ரிமோட் மூலம் ஒரு வீடியோ போட்டுவிட்டான் அதில் அவளின் சிரித்த முகம் அழகாக தெரிந்தது. தன்னை யாரோ எதிரே நின்று கமெராவில் பதிவு செய்வது போல எடுக்கப்பட்டிருந்தது.

“ஹே அதெப்படி ரெகார்ட் பண்ணீங்க..”

“நான் எங்க பண்ணேன்... எல்லாம் நாங்க புதிசா வாங்கின ரெகார்டிங் பேனா உன்னை படம் பிடுச்சிது... ஷர்ட்ல மாட்டி இருந்தேன், முதல் வீடியோவே உன்னோடது தான். பேசாமல் என்ன சொன்னனு கவனி” என்று அவளது கையை தனது கைக்குள் வைத்துக்கொண்டு அவனும் சேர்ந்து பார்க்க துவங்கினான்.

“ஹாய்... நான்... நியாபகம் இருக்கா?? நான் எதுக்கு வந்தேன்னா... இப்போ நான் ஊருக்கு போறேன்.. நேத்தே பேசணும்னு நினைச்சேன்.. ஆனால் முடியல... என்னடா 2 வாரத்துல இப்படி சொல்றாளேன்னு நினைக்காதீங்க... அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...” என்று கொஞ்சம் பதட்டமாக பேசுவது அவளது அசைவுகளிலேயே தெரிந்தது. இப்போது லேசாக திரும்பி ரோஹிணி என்ன முகபாவனை செய்ய போகிறாள் என்று பார்த்துக்கொண்டிருந்தான் ராஜேஷ்.

“டெக்னாலஜி ரொம்பவே வளந்திருச்சு... ஆனா சில விஷயங்கள் இன்னும் மாறவே இல்ல... என்றுவிட்டு இடைவெளி விட்டவள் சட்டென கேட்டுவிட்டாள் “ஏன் மெலடி இவ்வளவு சாக்லேட்டியா இருக்கு???” என்று... கூறிவிட்டு ரொம்ப பாவம் போல ஒரு சாக்லேட்டை அவன் முன்னால் நீட்டி கேட்டாள். அவன் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று புரியாமல் “வாட்????” என்று அதிர்ந்து போய் கேட்க, அங்கேயே விழுந்து சிரித்தவள் ஒற்றை கண்ணை அடித்து.. ஒரு பூ செண்டையும் ஒரு காகித சுருளையும் அவனிடம் நீட்டிவிட்டு சென்றாள். அங்கே வீடியோ முடியவும் இங்கே இவள் அதை கண்டு சிரிக்கவும் சரியாக இருந்தது... “என்னப்பா இப்படி பேசிருக்கேன்...” என்று சிரித்துக்கொண்டே அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள். “ச்சே உன்னோட முகத்தையும் அந்த நேரத்துல எடுத்திருக்கணும் ராஜு...” என்று அவனது முகத்தை பார்த்து கண் சிமிட்டினாள்.

“ஹ்ம்ம்... மாமனுக்கு மூடை மாத்தாத...” என்று அவளை கொஞ்சம் நிமிர வைத்துவிட்டு “அப்போ உனக்கு மீதி கதை வேணாமா...??”

“இன்னும் என்ன இருக்கு? நான் ப்ரொபோஸ் பண்ணே.. நீங்களும் ஒத்துக்கிடீங்க தானே??”

“யார் சொன்னது ஒத்துக்கிட்டேனு... உன்னைய அலைய விட்டேனாக்கும்...”

“யாரு நீங்களா...” என்று நக்கலாக கேட்டவள் சரியாக தான் யூகித்திருந்தாள்.

“சரி சரி இரு சொல்றேன்.. நீ பாட்டுக்கு வந்த... குடுத்த... கிளம்பிட்ட எதுவும் விவரம் சொல்லவே இல்லையேன்னு ஒரே குழப்பம்... சரி நிஜமாவே இந்த பொண்ணுக்கு நம்மளை பிடுச்சிருக்கு போலவேன்னு ஒரு சந்தேகம். இதெல்லாம் யோசிச்சு முடுச்சு உன்ன தேடுறதுக்குள்ள நீ காணாம போயிட்ட...”

“பின்ன அங்கேயேவா இருப்பாங்க...”

“ஹ்ம்ம் அப்பறம் பார்த்தா.. அந்த ஸ்கெட்சிங் கூட ஒரு பென்டிரைவ் இருந்துச்சு... என்னனு ஆர்வமாய் எடுத்துட்டு போய் பார்த்தேனா...” என்று ஒரு இழுவையோடு நிறுத்தினான். ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு அந்த இழுவை கடுப்பாக இருந்தது. “என்ன நிறுத்திட்டீங்க முழுசா சொல்லுங்க...”

“கொட்டாவி விடுவது போல செய்துவிட்டு எனக்கு தூக்கம் வருது ரோனி நம்ம காலைல பேசுவோமா...” என்று எழுந்துவிட்டான்..

“ஹே என்னப்பா...” என்று சிறுகுழந்தை போல கெஞ்சினாள்.

“சரி சரி.. சொல்றேன் சொல்றேன்.. குழந்தை மாதிரி அழுதுடாத...” என்று சிரித்துக்கொண்டே  சொல்லவும் தான் மீண்டும் முகத்தில் சிரிப்பு வந்தது அவளுக்கு.

மீண்டும் கையில் இருந்த ரிமோட் வைத்து ஒரு வீடியோவை போட்டுவிட்டான். முதலில் திரையில் யாருமே இல்லை, ஏதோ அலைபேசியின் ஒலி மட்டும் தான் திரையில் கேட்டது, யாருமே இல்லாததுப் போல காட்டிவிட்டு திடிரென்று வந்து விளையாட்டு காட்டினாள் ரோனி...

நன்றாக சிரித்துவிட்டு, “ஹாய்... என்ன பயந்துட்டீங்களா??? என்னடா இவள்... ஒரு தடவ தான் பார்த்தோம், அதுக்குள்ள வீடியோ, பென்சில் ஸ்கெட்சிங், பூ எல்லாம் தராள்ன்னு யோசிக்குறீங்களா??? தெரியும் தெரியும் நீங்க நினைக்குறது இங்க வரைக்கும் கேட்குதே... என்ன பண்றது உங்கள எனக்கு அவ்வளவு பிடுச்சிருக்கே. ஏன்னு தெரியலை... பார்த்ததும் காதல்ன்னு வச்சுக்கோங்களேன்... ஹே.. உங்களுக்கு முன்னாடியே ஆளு இல்லை தானே...??? இருந்தா சொல்லிடுங்க... ஆளு வேற பார்க்க நல்லா இருக்கீங்க...” என்று ஒரு வாக்கியதிற்குள் ஆயிரம் முக பாவனை தந்து பேசி இருந்தாள். ரோஹிணிக்கே இது தான் தானா என்பது போல சந்தேகம் அந்த வீடியோவை பார்த்தாள். “எனக்கு என்ன தோணுதுன்னு சொல்லிட்டேன், உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ என்ன வந்து பாருங்க.. எனக்கு இந்த போன்ல பேசுரதுலாம் புடிக்காது... கோயம்பத்தூர்ல MNM காலேஜ்ல தான் படிக்குறேன்...” என்று பேசிவிட்டு முடித்துவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.