(Reading time: 11 - 21 minutes)

சிறுகதை - விடியலை நோக்கி... - சுஜி பிரபு

Students

யற்கை எழில் நிறைந்த , சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட போடி மாநகரத்தில் அமைந்துள்ள அந்த பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவு உபச்சார விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது....

எங்கும் மாணவர்களின் புன்னகை முகமும்,உற்சாகம் ததும்பும் கூச்சல்களும் தான்....(சரி வாங்க... நம்ம gang ah பார்ப்போம்)

கவின்,கிருஷ்ணா,அமுதா,ராகுல்,சாந்திபிரியா இவங்க ஆறு பேரும் இந்த ஸ்கூல் ல 6 th லருந்து இப்போ 12 வரைக்கும் ஒண்ணாவே படிக்குற இணைபிரியாத நண்பர்கள்.அதுக்காக எல்லாரும் சூப்பரா படிக்குற பசங்க கிடையாது.ஆனா அவங்களுக்கு ஒருத்தருக்கு பாடம் புரியலனா அதை திரும்பவும் சொல்லிக்கொடுத்து நண்பர்களையும் நல்ல மார்க் எடுக்க உதவி செய்யும் வித்தை தெரிஞ்சுருந்தது...எல்லாரும் என்ன group னு சொல்லலேயே.... 1 st குரூப்(bio-maths)... இப்போ அவங்ககிட்ட போகலாம்...ground ல இருக்காங்க.......

"என்னடி, இந்த குரங்குங்க ரெண்டையும் காணோம் " என்று வளவளத்தபடி அவர்கள் இருவரின் அருகில் வந்து அமர்ந்தனர் மற்ற நால்வரும்...

" ஹே லூசு, எத்தன தடவை சொல்லிருக்கேன் அவங்கள குரங்குன்னு சொல்லாதே" என்றாள் பிரியா.

" அவள திட்டாத ரியா, இவனுங்க பண்றதும் அப்படி தான் இருக்கு. இன்னும் 20 நாள் ல public exam வருது. கொஞ்சமாவது பயம் இருக்கானு பாரு " என்றான் கிருஷ்ணா.

அதற்கேற்றாற்போல்"டேய் கவினு, மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் என்னமா தூக்கம் வருது....அப்படியே சொர்க்கமே தெரியுது டா...." என்றான் ராகுல் தன் புத்தக பையை தலைக்கு வைத்து படுத்தபடி

"ஆமா டா... அப்படியே கனவும் வருது டா....." என்று கண்களை மூடிய படியே கூறினான் கவின்

"அப்படியே கொஞ்சம் உத்துபாரு உங்க அம்மா விளக்கமாரோட விரட்டிவரதும் தெரியும்... என நக்கலடித்தாள் அமுதா

"அய்யயோ ! ஆமா டா..." என்று அலறி அடித்து எழுந்த கவின் " எருமை எருமை, நிம்மதியா தூங்கவாவது விடுறியா ? இப்போ எதுக்கு எழுப்பி விட்ட அம்மு என்றான் கடுப்புடன்.

"ஆமா இது சாரோட bedroom... இவரு அனுஷ்கா கூட டூயட் ஆடும்போது நாங்க disturb பண்ணிட்டோம்....கொண்டக்கா மண்டையா இது school டா " என்று அங்கலாய்த்து கொண்டாள் அம்மு

" ஓய் ! என்ன அப்படி கூப்பிடாத, எனக்கு பிடிக்காதுன்னு தெரியும்ல"

"ஆனா ராம் sir மட்டும் கூப்பிடலாமா? நானும் அப்படித்தான் கூப்பிடுவேன்....என்று சிரித்த படி கூறினாள் அம்மு.

"அச்சோ, விடுங்கபா உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல.எப்போ பாத்தாலும் சண்டை போட்டுட்டு , எக்ஸாம் பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லையா டா உங்களுக்கு என்ற சாந்தி "ரியா, அங்க படுத்துருக்கவன கொஞ்சம் எழுப்பி விடு.... விட்டா அஞ்சாறு கனவுலகத்துக்கு போய்டுவான் போல"

அம்மு "சாந்தி செல்லம், இந்த பெரிய வேலையெல்லாம் ஏன் ரியா கிட்ட சொல்ற, நான் செய்ய மாட்டேனா" என கூறிக்கொண்டே ரகுவின் மண்டையில் ஓங்கி கொட்டினாள்.

" எந்தவொரு மூடிய மின்புலத்தின் மின்னழுத்தம் என்பது " என்று புலம்பிய படி எழுந்து இந்த physics டீச்சர் எங்க என்ற படி முழித்துகொண்டிருந்தான் ரகு.

அதை பார்த்து அனைவரும் உருண்டு,பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தனர். ஆனால் கவின் மட்டும் "துரோகி, இப்பல்லாம் கனவுல கூட படிக்க ஆரம்பிச்சிட்டியா " என்றான்.

" அட நீ வேற டா. எனக்கும் அந்த physics mam கும் வேற ஆகவே ஆகாது. Class ல கூட என்கிட்ட மட்டும் கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க...அதோட effect இப்போ தான் தெரியுது " என்றான் தன்னையே நொந்தபடி.

"ஆனா பாரு ரகு, நீ தூங்குறதுல கூட ஒரு அதிசயம் நடக்குது பாரேன்"என்றாள் அம்மு.

" அப்படி என்ன அதிசயம் அம்மு " என்றான் ரகு ஆவலே உருவாய்......

" சொல்லுவேன். But நீ என்னை அடிக்கக்கூடாது " என்றாள் முன்னெச்செறிக்கையாய்.....

" ச்சே ச்சே, என் செல்ல அம்முவ நான் அடிப்பேனா? நீ சொல்லு டா " என்றான் ரகு.

" அதுவா, அதுவந்து "

" இப்போ சொல்ல போறியா, இல்லையா ? "

"அதில்ல டா. கனவுல மட்டும் தான் டா ஒழுங்கா answer பண்ற... பேசாம நீ தூங்கிட்டே எக்ஸாம் எழுதினா என்ன ? எப்படி என் கண்டுபிடிப்பு" எனக்கூறினாள் அம்மு சிறுப்பிள்ளையின் முகபாவத்துடன்....

ரகுவோ " உன்ன...." எனக் கோபத்துடன் பல்லைக்கடிக்க

கவினோ " உன் கண்டுபிடிப்புல தீய வைக்க " என்றான் கடுப்புடன்.....

" இப்போ எல்லாரும் நான் சொல்றத கேட்க போறீங்களா இல்லையா " என்றாள் ரியா பொய் கோபத்துடன்

"வாங்க நடுவர் அவர்களே,உங்கள தான் இவ்ளோ நேரம் தேடிட்டு இருந்தோம்.." என்றான் கவின்

"அடேய், அவ சொல்றத கேளேண்டா..." என்ற கிருஷிடம்

" விடு மச்சி், இதெல்லாம் நமக்கு ஜகஜம் தானே " என கண்சிமிட்டினான் கவின்.

சிரிப்புடன் "விளையாட்டுலாம் அப்புறம்..... நாளைலருந்து study holidays ஆரம்பமாகுது. சோ எல்லாரும் வீட்டுக்கு போய்டுவோம். இப்போ time table போட்டுக்கலாம் சரியா ? " இது பிரியா

"யாருக்கு எந்த subject கஷ்டம். சொல்லுங்க ... அதுக்கேத்தாப்ல டேபிள் போட்டுக்கலாம்...." என்ற சாந்தியிடம்

அம்மு,ரகு, கவின் மூவரும் "எங்களுக்கு எல்லா சப்ஜெக்ட்டும் கஷ்டம் தான்..." என்றனர் கோரசாக.....

" படுத்தாதீங்க டா , எல்லா subject கும் இரண்டு நாள் தான் இருக்கு . சோ அப்பப்போ doubts குறிச்சு வச்சிக்கோங்க....எக்ஸாம்க்கு முன்னாடி இருக்குற time ல எல்லாத்தையும் once revice பண்ணிட்டு doubts clear பண்ணிக்கலாம் " என்றாள் சாந்தி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.