(Reading time: 34 - 68 minutes)

சிறுகதை - அவள்! என்னவள்..! - சமீரா

My Love

தித்தியன் ஒரு வருடம் கழித்து இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா செல்ல இருப்பதால் ஆனந்தத்தின் உச்சியில் மனதுக்குள்ளே ஆடி பாடி குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தான். 

மச்சி..! என்ன செம்ம ஹெப்பி போல.. ஆபிஸ்ல இருந்துகொண்டே அந்தரத்துல டான்ஸ் பன்ற..! உயிர் நண்பனை தனியா தவிக்கவிட்டு போவது அவ்வளவு சந்தோசமா??  சொ சேட்! என் மன ஆறுதலுக்காக கூட கொஞ்சமே கொஞ்சம் பீலிங்ஸ் இல்ல..! என ரகு அங்கலாய்க்க ஆதியோ கூலாக என்ன மாப்ள புரியாம பேசுற ஏழரை சனி விட்டா சந்தோசம் தானே படனும் ..! பின்ன எதுக்கு பீலிங்! ஹி ஹி! என தன் நண்பனை கலாய்க்க ரகு ஆதிக்கு முதுகில் அடிக்க ஆதி அலரிக் கொண்டே ரகு விடுடா போதும்! மொத்த ஆபிஸே நம்மல தான் பாக்குறாங்க! நோ பைட்! என சமாதானம் செய்யவே ரகு அமைதியானான்!  

சரி பொழச்சி போ..! உன்ன பார்த்தா ஒரு முடிவோடத்தான் ஊருக்கு போறது போல தெரியுதே!  மறுபடியும் யுஎஸ் வருவியா என்ன? என ரகு கேட்க அட போடா நீ வேற! இனிமே என் ஆள்ல பிரிஞ்சி இருக்கவே முடியாது..! முதல்ல ஊருக்கு போகனும் அப்புறம் என் செல்லத்தை ஆசை தீர என் ஆயுல் பூரா லவ் பண்ணனும்! இது தான் Life time goal! எப்பிடி ?ஆதி கூற அடப்பாவி உன் லொள்ளுக்கு ஒரு எல்லையே இல்லையா?

ஏன்டா நீ டென்சன் ஆகுற..கூல் ஆதி எப்பவுமே ரொமண்டிக் ஹீரோ தான்!என ஆதி தன் பெருமை பேச அப்படியா?  எங்க ஊர்ல உன்னமாதிரி ஆளுங்கல  ஜொள்ளு பார்ட்டினு  சொல்லுவாங்க மச்சி என ரகு காலை வார காலை நேர அட்டை கலைக்கட்டியது .   சற்று நேரத்தில் ஆதியின்  மொபைல் ரிங் ஆக பயபுள்ள ஏகத்துக்கும் குஷி ஆகிவிட்டான்! ( கனவு தேவதை மின்காந்த அலைவழியே காதல் ரசம் சொட்டினால் நம்ம ஹீரோவ பிடிக்கவா முடியும்)

ஹாய் பேபி!  ஹவ் ஆர் யு செல்லம்?

ம்ம் இருக்கேன் இருக்கேன்! நேத்து ஈவினிங் பேசினது இதுவரைக்கும் கால் பண்ணல! அதுவும் நான் கால் பண்ணப்புறம் பேபி, செல்லம் எல்லாம் கொஞ்சுற! ஆகட்டும்!

ஹேய் சுஜி குட்டி என்னாச்சி! இன்னும் கோவமா? நா என்னடா பண்ண! வெர்க் பீரியட் இன்னும் திரி மன்த்ஸ்  Extension பண்ணிட்டாங்க ! இதுல என் தப்பு என்ன இருக்கு பிலிஸ் புரிஞ்சிகோடா..என ஆதி கெஞ்ச

மன்னா..! (அடப்பாவி  அதுக்குள்ள Modulation change ஆ அப்போ என்ன Punishment என ஆதியின் மூளை அலர) அதெல்லாம் இனி முடியாத காரியம் ..  திருமணம் முடிந்து ஒரு மாதத்திலே தங்கள் யுவராணியை தனியாக தவிக்கவிட்டு வந்தீர் அதற்கான தண்டனையோடு இன்னும் காலம் தாழ்த்துவதற்கும் சேர்த்து தண்டனை உண்டு! அதன் முன்னோட்டமாக இந்த வாரம் முழுவதும் தங்கள் அழைப்புகள் யாவும் ஏற்கப்படமாட்டாது! தற்சமயத்திலிருந்தே ஆரம்பம் எனக்கூற ஏய் சுஜி இதெல்லாம் ரொம்ப அநியாயம் டினு சொல்ல சுஜியோ எல்லாம்  நியாயம் தான்  பாய் அத்தான் என அழைப்பை துண்டிக்க வேறுழியின்றி ஆதி போனை முறைத்தான்( பாவம் காதல் ரசம் சொட்டும்னு பார்த்தா கார ரசமாகி கொட்டிடுச்சே..! ) 

என்னடா போனை முறைச்சிட்டு இருக்க! ஏன்டா சிஸ்டர் கிட்ட பொய் சொல்லி வாங்கி கட்டிகுற?  என ரகு கேட்க டேய்  டூ டேஸ்ல சுஜியோட பர்த் டே! அன்னைக்கு அவ முன்னாடி கிப்ட்டோட போய் நிற்கனும்! என்ன பார்த்தால் அவ எவ்வளவு சந்தோசபடுவா தெரியுமா? அது செம்ம பீலிங்டா? என்னால முன்ன ரொம்ப வேதனை பட்டுட்டா!  என் ஆயுல் பூராக அவளை தாங்கனும். என் சுஜிய பத்தி நல்லா தெரியும் நைட்டுக்கு அவளா கால் பண்ணுவா!ஆதி உணர்ச்சி வசப்பட்டு பேச மச்சான் அரன்ஜ் மேரேஜ்னாலும் செம்ம Understanding. டா!என ரகு கூறினான்.

டேய்! அரன்ஜ் மேரேஜ் ஆ !நீ வேற அலம்பல்ல நடந்த மேரேஜ் அதான் ரொம்ப கரைக்ட்டா இருக்கும்..!என ஆதி சொல்ல என்னடா இது புதுக்கதை நீ சொல்வே இல்லை! அப்போ லவ்வா?   ஆமாம் மச்சான்! நம்ம பாடி கன்டீசனுக்கு வெளில லவ் பண்ணி அடிவாங்க முடியுமா? அதான் சொந்த மாமா பொண்ண லவ் பண்ணா அது எல்லாத்துக்கும் மேல சிக்கல் ஆகி ஒருவழியா மேரேஜ் நடந்தது. என அந்த ஞாபத்தில் ஆதி கூறினான்.

இதை கேட்ட ரகு மாப்பு உன் லவ் ஸ்டோரிய எந்தவித இடைச்சொருகல் இல்லாம நடந்தபடியே சொல்லு என ஆதியை ஊக்கபடுத்த தன் பிளஸ்பேர்க் யை ஆதி சொல்லத்  தொடங்கினான்!

மூன்று வருடங்களுக்கு முன்னாடி அப்பாவுடைய பிஸ்னஸ் விஷயமாக மதுரை போன போது நான் என் சின்ன மாமா வீட்ல தான் ஸ்டே பண்ணேன். சின்ன மாமா வீட்டுக்கு அப்பப்போ போறதுண்டு.அப்போ எல்லாம் அவர் பொண்ணு ஆர்த்தி சுஜி அக்கானு எப்போ பாரு எந்த பேச்சு வந்தாலும் பெரிய மாமா பொண்ணு பத்தியே பேசுவா. அப்போவே அவள பார்க்க ஓர் ஆர்வம்! சுஜி அவ அண்ணண் விஷ்வா, தம்பி சுரேஷ்,அத்தை, மாமா எல்லோரையும் சின்ன வயசுல பார்த்தது.முகம் கூட சரியா நியாபத்துல இல்லை! அப்பாவோட பிஸ்னஸ் பாட்னரா மாமா இருந்தார் .சித்தப்பா செஞ்ச கையாடலை  மாமா பேர்ல திருப்பி விட்டது தெரியாம அம்மா திட்டிருக்காங்க மாமா நம்பிக்கை இல்லாத இடத்துல இருக்குறது அவமானம் !

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.