(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - எல்லாம் வசந்தமே... பாலா K

Spring

வானதி தான் விரும்பி தேர்ந்தெடுத்த முதுகலை கணித பாட புத்தகத்தை வைத்து கொண்டு அவனையே நினைத்து கொண்டு இருந்தாள்.

எவ்வளவு எளிதாக கூறி விட்டான். இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரை அவளது நண்பன் இல்லை அவள் நண்பனாக நினைத்து கொண்டு இருந்த அவளது சரவணன் இப்பொழுது  காதலன்? கடந்த இரண்டரை வருடமாக அவர்களது நட்பு வேரூன்றி பெரிய கிளைகளுடன் கூடி மரமாக வளர்திருத்தது. இப்பொழுது அது நடப்பையும் தாண்டி காதலாக மாறி இருக்கிறது என்று அவன் கூறியது அவளுக்கு ஆச்சரியமாக இருந்ததது.

இதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா?

எங்கோ குயில் கூவுவது போல் கேட்டது. அவளுக்கு அவனிடம் பிடிக்க வில்லை என்று சொல்ல எந்த காரணமும் இல்லை.

எங்கோ குயில் கூவுவது போல் மீண்டும் கேட்டது. இது என்ன ஒரு புது தடுமாற்றம். முடிவு எடுப்பது மிகவும் கடினமோ? ஒரு வாரத்திற்குள் அவனுக்கு பதில் வேண்டுமாம். என்ன கூறுவது.

குக்க்கூ..... குக்க்கூ...... அக்கா.... இம்முறை குயிலுடன் சேர்த்து கேட்டது. அதற்குள் மணி 6 ஆகி விட்டதா.

சுயநினைவுக்கு வந்தவள் வேகமாக சென்று வீட்டின் கதவை திறந்தாள். லதா மற்றும் உமேஷ் இருவரும் அன்றைய டியூஷன் காக நின்று கொண்டிருந்தனர்.

வீட்டினுள் அழைத்தவள் அன்றைய வீடு பாடம் பற்றி விசாரித்து கற்பிக்கலானாள். சிறிது நேரத்தில் மற்ற அனைவரும் டியூஷன் காக வந்துவிடவே நேரம் வேகமாக சென்றது.

வானதி ஒரு தனியார் கல்லூரியில் கணித ஆசிரியையாக வேலை செய்கிறாள். மேலும் வீட்டினில் டியூஷன் எடுப்பது, தாயாருக்கு உதவுவது போன்று சில வீடு வேலைகளிலும் பங்கு எடுத்து கொள்வாள். வார இறுதியில் சரவணனோடு வெளியில் சென்று வீட்டுக்கு தேவையான காய், மளிகை பொருட்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் செய்வாள்.

வானதியின் அம்மா தையல் தைத்து கொடுத்து அதில் வரும் பணம் கொண்டு வானதியை படிக்க வைத்தாள். வானதியும்  நன்று படிப்பாள் எனவே பள்ளி கல்லூரிகளில் அவளுக்கு ஸ்சோலர்ஷிப் கொடுத்தார்கள்.

அவளது அப்பா சினிமா துறையில் சிறிய வேலை செய்து கொண்டிருந்தார். தினமும் மது அருந்துவார். பாதி நாள் வேலை இருக்காது மீதி நாள் அவரது சம்பாத்தியம் அவருடைய மதுவுக்கவே பத்தாது.

சரவணனுடைய அப்பாவும் வானதியின் அப்பாவும் க்ளாஸ்ட்மேட்(glassmate). தினமும் இரவு குடிப்பது இவர்களது வேலை. இதில் ஒருவருக்கு ஒருவர் பணம் கொடுத்து செலவு செய்வது வேறு. இவ்வாறு தான் வானத்திற்கு சரவணன் பற்றி அவர்கள் குடும்பத்தை பற்றி தெரிய வந்தது.

அதன் பின் அவர்களுக்குள்  வேகமாக நட்பு வளர தொடங்கியது. இப்போது காதல் என்று சரவணன் கூறினான். ஆமா இல்லை என்று எதுவும் சொல்ல முடியவில்லை வானதிக்கு.

மணி எட்டு ஆகி விட்டது. டியூஷன் வந்த அனைவரும் சென்று விட வானதி தனக்கும் தன் தாய்க்கும் இரவு உணவு செய்ய ஆரம்பித்தாள்.

மீண்டும் அவன் தன் நினைவுகளுக்குள் தோன்றியதை எண்ணி குழம்பினாள். அதற்குள் வானதியின் அம்மா வந்துவிட்டாள். மகளின் கவனம் சமைப்பதில் இல்லை என்று உணர்ந்தவள் --- வானதி என்ன யோசிச்சிட்டு இருக்க?

அம்மா என்று பேந்த விழித்தாள் வானதி.

என்னாயிற்று வானதி ஏன் ஒரு மாதிரி இருக்க.

என்ன கூறுவது என்று வானதி யோசிக்கும் முன்பே அவள் தாய் தொடர்ந்தாள்.

இரண்டு விஷயங்கள் மட்டும் நினைவில் கொள் வானதி, எந்த ஒரு விஷயமானாலும் சரி ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு எத்தனை தடவை வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் முடிவு எடுத்த பிறகு அதில் இருந்து தடம் மாறுவது என்பது கூடாது. அதனால் எடுக்கும் முடிவுகளில் தெளிவாக இரு.

மறறொன்று, நீ எடுக்கும் முடிவு சரியா தவறா என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்ததா?

தன் மனதில் இருப்பதை தாய் தெரிந்து கொண்டாலோ என்று வானத்திற்கு சந்தேகம் வந்தது. எவ்வளவு தெளிவாக கூறுகிறாள். எனது முகம் நான் நினைப்பதை அப்படியே காட்டுகிறதா இல்லை அம்மா என்ன நன்றாக புரிந்து வைத்திருக்கிறாளா?

இது என்ன புதிய கேள்வி வானதி தாய் அறியா சூழ் உண்டா? பெற்ற பிள்ளைகளை பற்றி தாய்க்கு தெரியாத என்ன என்று தன்னையே கடிந்து கொண்டாள் வானதி.

தன்னையயே தாய் பார்த்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்து தன் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தால் வானதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.