(Reading time: 16 - 31 minutes)

20. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

வர் அவ்வாறு சொன்ன அடுத்த நொடி தனது இணைப்பை துண்டித்தவன்.தனது தந்தை தியாகராஜை அழைத்தவன்  அவர் வரவைப் பற்றிக் கூற அடுத்த நொடி அந்த விசேஷதிருக்கு சென்றிருந்த மொத்தக் குடும்பமும் அங்கிருந்துக் கிளம்பியிருந்தது.

அடுத்த அரைமணி நேரத்தில் அஸ்வின் வீட்டை அடைந்தான்.அவனை தொடர்ந்து அவனது மொத்தக் குடும்பமும் வீட்டிற்கு வந்து இறங்கியது.

இன்று வர லேட் ஆகும் என்று சொல்லியவன் வந்திறங்கியதுக்கே அதிர்ந்து  நின்றவள்,அடுத்து வந்த மொத்தக்  குடும்பத்தையும் பார்த்து யார் இந்த புதிய மனிதர் என்று பார்க்க ஆரம்பித்தாள் கவி.

உள்ளே வந்த அஸ்வின் மாமா..என்று அழைத்தவாரே அவரைக் கட்டிக் கொள்ள  அடுத்துவந்தவர்களும் மலர் மலர் என்று புதியவரை அழைத்துக் கொஞ்ச ஜனார்த்தனன் தாத்தாக் கூட அந்த புதியவரைப் பார்த்து கண்கலங்க அவர் யார் என்று அறிந்துக் கொள்ளும் ஆர்வம் கவிக்கு வந்தது.அதனால் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

“டேய் மலரு..,அம்மா உசுரோட இருக்கனா..,இல்லையானு பார்க்க வந்தியாடா..”என்று அவரை கட்டிப் பிடித்து அழுதுக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் கவிக்கு புரிந்தது இந்த புதியவர் தான் இருவர் குடும்பத்திற்கான பகையின் அடிப்படை காரணம் என்று ..

ஒரு வழியாக பாச போராட்டம் முடிய அடுத்து அவருடன் வந்தவர்களை அறிமுகப் படுத்த ஆரம்பித்தார் அவர். 

அது அவரது மகனும்,மகளும் என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.மகனது பெயர் சஞ்சீவ் என்றும்,மகளது பெயர் கவி ஸ்ரீ என்றும் அறிமுகபடுத்தி வைத்தார்.

பர்வதம்மாள் அவர்களை உச்சி முகர்ந்தார்.அனைவரும் ஆசையுடன் அவர்களிடம் பேசினர்.ஆனால் ஜனார்த்தனன் தாத்தா மட்டும் அவர்களிடம் அவ்வளவாக ஒண்டவில்லை.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க,”ஏய் மலரு..,இங்க வாடி..”என்று கவியைக் கூப்பிட

எதற்கு கூப்பிடுகிறார் என்று தெரியாமல் அவரது அருகில் சென்றாள் அவள்,”என்னோட பையனுக்கு எதாவது குடிக்க கொடுத்தியா இல்லையா..”என்று கேட்க..

“அவங்க எல்லாரும் வந்தப்பேயே ஜூஸ் கொண்டு வந்துக் கொடுத்துட்டேன்..”என்று அவள் கூற

“ம்..சரி..சாரி..போ”என்று அவர் கூற, விட்டால் போதும் என்று நித்தியின் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.

“எதுக்குமா அந்த பொண்ணுகிட்ட இப்படி பேசுறிங்க...”என்று அவர் கேட்க,அவரிடம் அதைப் பற்றி எதுவும் கூறாமல் வேறொரு பேச்சுக்கு தாவினார் பர்வதம்மாள்.

எல்லாரும் பேசிக் கொண்டிருக்க இரவ உணவை தயாரிக்க ஆரம்பித்தார் ஜானகி அம்மாள். அவருக்கு  கவி உதவிக் கொண்டிருந்தாள்.

இரவு உணவை அனைவரும் உண்டு முடிக்க,அனைத்தையும் எடுத்துவைக்க  ஜானகிக்கு உதவியாக கவி இருக்க எப்பொழுதும் போல அனைவரும் வீட்டின் முன்னாள் இருந்த புல்வெளியில் அமர்ந்து பழைய கதைகளை பேசி திளைக்க ஆரம்பித்தனர்.

ஆனந்தி தனது அண்ணனின் வாரிசுகளை விழுந்து விழுந்து கவனித்தார். சஞ்சுவும்,கவிஸ்ரீயும்..,சதீஷ்,நித்தியுடன் நன்கு பேச ஆரம்பித்தனர்.

அனைவரும் எதுவோ கிண்டல் செய்து பேசிக்கொண்டிருக்க அஸ்வினது கல்யாண பேச்சும் வந்தது..,அஸ்வினது  கல்யாணத்தில்  தான் இல்லை என்று அவர் வேதனைப் பட,

“ஆமாம் ஊரைக் கூப்பிட்டு வெகு விமர்சையா நடந்தது கல்யாணம் நீ இல்லாமப் போக..”என்றுப் பர்வதம்மாள் கூற,”ஏன்மா எதாவது பிரச்சனையா..”’என்று அஸ்வினது மாமா மலர் கேட்க எங்கே அந்த கல்யாண நடந்ததைப் பற்றிக் கூறினாள் அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கூற வருமோ என்று,”ஒன்னும் இல்லப்பா நீ இல்லாமா நடந்ததுல  அதான் நான் அப்படி சொன்னேன்..,நீ முன்னாடியே வந்திருந்தா என்னோட பேத்திய என்னோட பேரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்..”என்று அவர் சொல்ல

“நீங்க வேற அம்மா அஸ்வின் என்னோட பொண்ணயெல்லாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்.,அவன் பெரிய ஆளா வளர்ந்துட்டான் நான் சொல்லியா கேக்கப் போறான்”என்று அவர் கூற,அவர் அருகில் வந்து அமர்ந்த அஸ்வின் “அப்படியெல்லாம் சொல்லாதீங்க மாமா, உங்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்..,அதுவும் நீங்க கேட்ட செய்யாமலா இருப்பேன்..,எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாமா இருந்து உங்க பொண்ண நீங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லிருந்திங்கனா நான் கண்டிப்பா ஒத்திருந்திருப்பேன்...” இந்த வார்த்தைகள் அனைத்தும் தனது வாழ்க்கை தடம் மாற ஒரு காரணமாக அமையப்போகிறது என்று தெரியாமல்  தனது மாமாவிடம் கூறிக்கொண்டிருந்தான்  அஸ்வின்.

ஆனால் அவனது இந்த வார்த்தைகள் அனைவரும் குடிக்கப் பால் எடுத்துகிட்டு வந்த கவியை லேசாக பாதிக்க தான் செய்தது.

அவனிடம் அவள் எந்த பதிலை எதிர்ப்பார்த்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அதற்குப் பிறகு ஜானகியும்,கவியும் அங்கு வர சிறிது நேரம் அமர்ந்து பேசிவிட்டு அனைவரும் அவர் அவர் ரூமிருக்கு சென்றனர் உறங்க...

தனது அறைக்கு சென்ற கவியை பின்னிருந்து அணைத்தான் அஸ்வின்.அவனது அணைப்பில் அடங்கினாள் கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.