(Reading time: 12 - 23 minutes)

சாரு பாப்பா… தீபன் தம்பி… இரண்டு பேரும் வாங்க சாப்பிடலாம்…”

மஞ்சுளாவின் குரல் கேட்டு தீபன் டைனிங்க் டேபிள் நோக்கி செல்ல, அவர் சாருவை எங்கே என வினவ,

“மணி பார்த்தீங்களா?..” என்றான் தீபன்…

அவன் சொன்னதும், மணி பார்த்தவர், “அட ஆமா…” என்றவர், சாருவைத் தேடி செல்ல, அதற்குள் குளித்து முடித்து, பாவாடை தாவணியில் பூஜையறையில் அமர்ந்து இறைவனை பூஜித்துக்கொண்டிருந்தாள் சாரு தன் இனிய குரலினால்…

“அலைபாயுதே கண்ணா…” என மனமுருக அவள் பாடிட, சிலையாய் இருந்திட்ட கண்ணனும் கூட அவள் முன் தோன்றிடுவானோ என்றிருந்தது மஞ்சுளாவிற்கு…

அவளின் குரலா… பாடலா… அல்லது இரண்டுமேவா?.... எது மயங்கச் செய்தது என்றறியாமலே நின்று கொண்டிருந்தார் மஞ்சுளா கண்களை மூடியபடி…

தே நேரம்,

“ஐ செட் ஸ்டாப் இட் சார்….”

என கௌஷிக் உச்சக்கட்ட கோபத்தில் கத்த, சுரேஷ் மிரண்டு போய் நின்றிருந்தார்…

தனது பிசினஸே போனாலும் பரவாயில்லை… ஆனாலும் ஒரு பாடல் இடம்பெற்று அதன் மூலம் தனது வெற்றியை தான் நிலைநாட்ட விரும்பவில்லை என தீர்மானமாய் கூறிட, சுரேஷிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…

அதனால் அவர் அவன் மனதை மாற்ற எண்ணி, இசையை பற்றி எடுத்துரைக்க, அவன் சீறி உதிர்த்திட்ட வார்த்தைகளே அவை…

“ஐ செட் ஸ்டாப் இட் சார்…”

கௌஷிக்கின் வார்த்தைகளில், தன்னை மறந்து அவர் சில நொடிகள் நின்றிட, பின் சுதாரித்து, அவனை சமாதானம் செய்யும் முயற்சியில் அவர், “கௌஷிக் நான் என்ன சொல்ல வரேன்னா…”

“ப்ளீஸ் ஸ்டாப் இட் சார்… ஐ டோன்ட் நீட் எனி எக்ஸ்ப்ளனேஷன்ஸ் அட் ஆல்… டோன்ட் ட்ரை டூ கம்பல் மீ…”

கோபத்தில் ஆரம்பித்து அவன் ஆதங்கத்தில் முடித்திட, அவரால் அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று ஒரு முடிவுக்கு வர இயலவில்லை…

நிலைமையை சீராக்க, கல்யாணியிடம் சுரேஷ் பேச ஆரம்பித்தார்…

“கல்யாணிம்மா நீங்களாவது கௌஷிக்குக்கு எடுத்து சொல்லுங்க… அந்த அட் மட்டும் எடுத்துட்டோம்னா, அடுத்து நம்ம ப்ரண்ட் தான் நம்பர் 1…”

“பிசினஸ் டெவலப் பண்ண அட் எடுக்கணும்னு சொல்லுறீங்க… ஒகே… அதை நான் வேண்டான்னு சொல்ல்லை… ஆனா பாட்டு மட்டும் வேணாம்னு தான் சொல்லுறேன்… அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்குறீங்க?..”

கௌஷிக் தன் பக்கமிருந்து யோசித்து கூற, சுரேஷிற்கோ அப்படி என்ன பாட்டு மீது இவனுக்கு கோபம் என்றிருந்தது…

“கல்யாணிம்மா உங்களை தான் நம்பியிருக்கிறேன்… நீங்க மனசு வச்சா தான் எல்லாமே நடக்கும்… நீங்க சொன்னா கண்டிப்பா கௌஷிக் மறுக்க மாட்டார்… அதனால…”

என அவர் பேசி முடிக்கும் முன்பே, கௌஷிக்கின் கண்கள் தாயிடம் வந்து நிற்க,

“கௌஷிக் கண்ணா… நீ உள்ள போ… நான் சார்கிட்ட பேசிக்கிறேன்…” என கல்யாணி சொன்னதும்,

அடுத்த கணமே, “சரிம்மா…” என்ற தலையசைப்போடு அவன் உள்ளே செல்ல,

ஆச்சரியமாய் பார்த்திட்ட சுரேஷிடம், “சார் நீங்க சொல்லுறதெல்லாமே சரிதான்… ஆனா, அவனுக்கு பிடிக்காத விஷயத்தை உள்ள நுழைக்கிறதும் சரி இல்லையே…” என்றார் கல்யாணி தன்மையாக…

“நீங்க ஒரு வார்த்தை சொன்னா, கௌஷிக் கேட்பார் கல்யாணிம்மா… உங்க பேச்சுக்கு மறுபேச்சு அவர் பேசினதில்லை… அதுக்கு இப்ப நடந்ததை விட ஒரு உதாரணம் தர முடியாது…”

“இந்த விளம்பரம் மட்டும் மார்க்கெட்ல வந்துச்சுன்னா, அப்புறம் இதனால வர்ற லாபம் கௌஷிக்கை இந்த பிசினஸ் உலகத்துல எங்கயோ கொண்டு போய் விட்டுடும்… நம்மளோட ப்ரண்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கு… அதை நாம இன்னும் இம்ப்ரூவ் பண்ணினோம்னா அப்புறம் டீ பிரண்ட்ல நம்ம ப்ரண்ட் தான் நம்பர் 1…. அதை யாராலும் மாற்றவே முடியாது…”

சுரேஷ் அந்த விளம்பரத்தை எடுத்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் கூறிட, கல்யாணியோ மகனின் வைராக்கியமா, அவனின் வளமான வாழ்வா என்ற நிர்பந்தத்தில் சிக்கினார்…

“எதனால கௌஷிக்கிற்கு பாட்டு மேல இப்படி ஒரு வெறுப்புன்னு எனக்கு தெரியலை… ஆனா அது உங்களுக்கு கண்டிப்பா தெரியாம இருக்க வாய்ப்பில்லைன்னு தான் எனக்கு தோணுது… இந்த அட் எடுக்க கௌஷிக் சம்மதிச்சா, அதனால என்னோட பிசினஸும் டெவலப் ஆகும்… இப்போதான் நான் மேல வந்துட்டிருக்கேன்… கௌஷிக் கூட சேர்ந்து பிசினஸ் ஆரம்பிச்சப்பிறகு தான் எனக்கு இவ்வளவு முன்னேற்றமும் வந்துச்சு… அது வரைக்கும் ரொம்பவே டல்லா தான் என்னோட பிசினஸ் இருந்துச்சு… இதெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லம்மா… இப்போ முழுசா உங்களை தான் கல்யாணிம்மா நான் நம்பிட்டிருக்கேன்…” என அவர் கையெடுத்து கும்பிட்டு சென்றிட, கல்யாணியோ பலத்த யோசனையில் ஆழ்ந்தார் தீவிரமாய்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.