(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 02 - மீரா ராம்

thaaba poovum naan thaane... poovin thagam nee thaane

தாயின் கையினால் உணவருந்திவிட்டு, அவன் எழுந்த வேளை, அவன் செல்போன் அதிர்ந்தது… வைப்ரேஷன் மோடில் இருந்த அவன் போன் மெதுவாக அதிர, அவன் அதனை எடுத்து பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தான்…

“ஹலோ கௌஷிக் ஹியர்…”

“கௌஷிக்… நான் சுரேஷ் பேசுறேன்… ஏகே க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் எம்டி…”

“யெஸ் சுரேஷ் சார்… சொல்லுங்க…”

“உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்… அதான் கால் பண்ணினேன்…”

அவர் அப்படி சொன்னதும், சற்று நேரம் யோசித்தவன்,

பின், “உங்க பேமெண்ட் எல்லாம் செட்டில் செய்ய சொல்லிட்டேன்…. நாளைக்கே உங்க கைக்கு பணம் வந்துடும்...” என தன்மையாக கூற

“சே.. சே… அதுக்காக நான் கால் பண்ணலை... உங்களை பற்றி எனக்கு தெரியாதா?...” என்றார் அவரும் உடனேயே…

“சரி சார் சொல்லுங்க… என்ன விஷயம்?...”

அவன் கேட்க, அவரும் பதில் சொல்ல நினைத்த வேளை, அவருக்கு ஒரு அவசர வேலை வந்துவிட,

“கௌஷிக்… தப்பா நினைக்க வேண்டாம்… நான் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்…” என்றார் அவர் தயக்கத்துடன்…

“இட்ஸ்.. ஓகே… சார்…” என அவனும் சொல்லிவிட்டு போனை வைத்திட,

கல்யாணி மகனின் அருகே வந்து, “சுரேஷ் சார் என்னப்பா சொன்னார்?...” என வினவிட,

“ஏதோ சொல்ல வந்தாரும்மா… அதுக்குள்ள வேலை இருக்குன்னு சொல்லி வச்சிட்டார்…” என்றான் அவனும்…

“சரிப்பா… நீ போய் ரெஸ்ட் எடு… அம்மா மதியம் சமையல் பண்ணிட்டு உன்னை எழுப்புறேன்…”

மகனின் முகம் பார்த்து வருடி சொல்லிவிட்டு, அவர் அகல, அவனும் தனதறைக்குச் சென்று ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி விட்டு ஜன்னல் வழி தெரிந்த அதிகாலைப் பொழுதினை ரசித்திட்டான்…

எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ, சங்கரன் வந்து அழைத்ததும் சுயநினைவிற்கு வந்தான்…

“தம்பி உங்களைப் பார்க்க, சுரேஷ் சார் வந்திருக்காங்க…”

“இதோ வரேண்ணா…” என்றவன், தாமதிக்காது கீழே செல்ல,

“சாரி கௌஷிக்… முக்கியமான வேலை வந்துட்டு… அதான் பேச முடியலை…” என்றார் அவர் அவன் பேசும் முன்னே…

“வாங்க சார்… இட்ஸ் ஓகே… உட்காருங்க…” என அவன் வரவேற்றதும்,

சங்கரன் வந்து காபியினை கொடுக்க, அதனை வாங்கிக் கொண்டார் அவரும்…

“அப்புறம் கல்யாணிம்மா எப்படி இருக்குறீங்க?...”

“என் மகன் எங்கூட இருக்கும்போது எனக்கென்ன சார்… நான் நல்லாவே இருக்குறேன்… நீங்க?...” என அவரும் வந்தவரிடம் விசாரிக்க,

“கௌஷிக் கூட பிசினஸ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்புறம் ரொம்பவே நல்லாயிருக்குறேன் கல்யாணிம்மா… இப்போ கூட அதுவிஷயமா பேசிட்டு போகதான் வந்தேன்…” என்றவர், தயங்கியபடி கௌஷிக்கினைப் பார்த்திட,

கல்யாணியும், கௌஷிக்கும் அவரை புரியாமல் பார்த்திட்டனர்…

“தயங்காம சொல்லுங்க சார்…”

கௌஷிக் புன்னகையுடன் கூற, அந்த புன்னகை அவர் சொன்ன பதிலில் சட்டென காணாமல் போனது அந்த கணமே…

“கௌஷிக்… நான் சொல்லி உங்களுக்கு எதுவும் தெரியவேண்டியதில்லை… விளம்பரம் தான் இப்போ எல்லாமே… நம்ம பிசினஸ்க்கும் அது ரொம்ப அவசியமும் கூட… அதனால அடுத்த வாரமே அட் ஷூட்டிங்க் இருக்கு… அதுல ஒரு கர்நாட்டிக் சாங்க் வைக்கலாம்னு…”

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சட்டென புன்னகையை விடுத்து எழுந்து கொண்டான் அவன்…

கால்களை இருமுறை நகர்த்தி, கைகளை மடக்கி தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன்,

“என் பிசினஸ் எனக்கு எவ்வளவு இம்பார்ட்டண்ட்டோ, அதை விட, இம்பார்ட்டண்ட் நான் ஃபாலோ பண்ணுற சில விஷயங்கள்… எதுக்காகவும் யாருக்காகவும் அதை நான் இழக்க முடியாது…” என்றவனது பார்வை கல்யாணியை சற்றே உரசிவிட்டு செல்ல, அவரோ மகனின் பார்வையினை உணர்ந்தவராய் கண்களினை மூடி இமைத்தார் மெல்ல…

“இல்ல கௌஷிக்… நான் எதுக்கு சொல்லுறேன்னா… இது ஒரு டீ அட்… நம்ம பிசினஸே தேயிலை தான்… இப்போ போட்டிக்கு நிறைய ப்ரண்ட்ஸ் வேற மார்க்கெட்ல போட்டிக்கு காத்திட்டிருக்கு… இப்போ நம்ம எதாவது புதுசா செஞ்சா தான் நம்ம ப்ரண்ட் மார்க்கெட்ல ரீச் ஆகும்… சோ அதுக்கு ஒரு சாங்க் அவசியம்…. அதும் கர்நாட்டிக்கா இருந்தா இட்ஸ் அமேசிங்க் கௌஷிக்…”

அவர் பொறுமையாய் எடுத்துக்கூற, அவனோ சட்டென கொளுத்தி போட்டிட்ட பட்டாசாய் வெடித்தான் உடனேயே…

“இட்ஸ் இனாஃப் சார்… இனாஃப்… சாங்கே வேண்டான்னு சொல்லுறேன்… இதுல டைப், வெரைட்டின்னு சொல்லிட்டிருக்கீங்க… என்னோட பிசினஸ்க்கு சாங்க் இருந்தா தான் சக்ஸஸ் கிடைக்கும்னா அப்படி ஒரு பிசினஸே எனக்கு வேண்டாம்…”

அவன் உதிர்த்த வார்த்தைகளின் தாக்கத்தினை உணர சுரேஷிற்கு சில மணித்துளிகள் பிடித்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.