(Reading time: 6 - 11 minutes)

25. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

வர்களுக்குள் பனி போர் தொடங்கி இருக்க அதை மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான் அஸ்வின்.அவர்களது அறையில் மட்டுமே அவன் அவளிடம் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை வெறுப்பது போல நடித்துக் கொண்டிருந்தனர்.

நாட்கள் செல்ல நிச்சயம் முடிந்து இரண்டு மாதங்களை கடந்திருந்தது...

இன்னும் நாற்பது நாட்களில் திருமண நடக்க இருந்தது.

அன்று அனைவரும் வீட்டில் இருந்தனர்.மலர்கண்ணனிற்கு வயிற்றுவலி வந்து அவர் துடிக்க ஆரம்பித்தார்.

அவரை வீட்டில் இருந்த அனைவரும் ஹாஸ்பிட்டலில்  சேர்க்க அவருக்கு கிட்னி பெயிலியர் என்று கூற அவருக்கு  ஒரு கிட்னி தேவைப்பட்டது.அதனால் வீட்டில் இருந்த அனைவரது இரத்த மாதிரிகளும் டெஸ்டிற்கு கொடுக்கப்பட்டது.குடும்பமே சோகத்தில் இருந்தது.

அதில் கவியினதும்,கவிஸ்ரீயினதும் ஒத்துபோக குடும்பத்தில் அனைவருக்கும் மனநிம்மதி கிடைத்தது.

கவிமலர்  ஒத்துக் கொள்ளவில்லை என்று நர்ஸ் கூற அதன் பிறகு கவிஸ்ரீ ஒத்துக் கொள்ள அடுத்த கட்ட வேலைகள் நடக்க தொடங்கின.

மலர்கன்ணனுக்கு  வெற்றிகரமாக மாற்று அறுவைசிகிச்சை நடந்தது.அவர் அபாயகரமான கட்டத்தை தாண்டி விட்டார் என்று கூற அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

ஆனால் அனைவரது கோபமும் ஒருவர் மேல் மட்டுமே இருந்தது அது நம்ப கவிமலர்  மேலதான்.

ஆனால் அஸ்வின் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அவன் அவள் ஒருவள் வீட்டில்  இருப்பதாய் கூட கருதவில்லை.அனைவரும் அவளிடம் வெளிப்படையாக தங்களது கோபத்தை கட்டினார்.

ஜனார்த்தனன் தாத்தாவும் அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை.தன் மகன் தவறு செய்து இருந்தாலும் அவனிடம் அவர் பேசாமல் இருந்தாலும் அவருக்கும் பிள்ளை பாசம் இருக்கும் அல்லவா..

அனைவரும் அவளை நன்கு  திட்டி விட்டு சென்றனர்.யாரும் அவளை ஏன் இவ்வாறு செய்தாய் என்று கேட்கவில்லை.

அனைவரும் அவள் இரக்கம் இல்லாதவள்,சுயநலம் பிடித்தவள் என்று எல்லாம் பேசி ஏசிக் கொண்டிருந்தனர்.

ஏற்கனவே உடல் அளவில் சோர்ந்து போய் இருந்தவள்..,மனதளவிளும் சோர்ந்து போனாள்.

அவளது நண்பர்கள் கூட அவளை நன்றாகவே ஒதுக்க ஆரம்பித்தனர்.

கவிஸ்ரீ யையும்,மலர்கண்ணன் இருவரையும் குடும்பமே தாங்கிக் கொண்டிருந்தது.

முப்பதுநாட்கள் மருத்துவ மனை வாசத்திற்கு பிறகு அனைவரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் வந்ததும் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து விட்டு வந்த அஸ்வின் நேராக தனது அறைக்கு சென்றவன் ஏங்கோ வெறித்தப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளை பார்த்தவன் அவளது அருகில் சென்று அவளது கையை பிடித்து இழக்க அவனது திடிர் தாக்குதலில் தன் கனவுலகில் இருந்து வெளியில் வந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பார்வையில் எதிர்பார்பு ஏக்கம் என அனைத்தும் இருந்தது.(அய்யயோ திரும்ப ஆரம்பிச்சிட்டாங்க ஐயா...ஆரம்பிச்சிட்டாங்க...)

ஆனால் அவனோ ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் அவளைப் பார்த்தான்.

அவளது  ஏக்கம் அவனுக்கு புரிந்தாலும் அதை அவன் கன்சிடர் பண்ணவில்லை.

அவளது கைகளை பிடித்து விறுவிறு வென இழுத்தவன் அவளை கீழே அழைத்து சென்றவன் நடுஹாலில் விட்டு விட்டு அவளது பையையும் அவள் முன் தூக்கி வீசினான்.

அவன் அவளை இழுத்துவரும் பொழுதே அவள் இதை எதிர்பார்த்திருந்தாள்.

வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் நடு ஹாலிற்கு வந்திருந்தனர்.

இரண்டு குடும்பம் மட்டும் இல்லாமல் மித்ரா குடும்பம்,அனன்யா குடும்பம் என அனைவரும்  அவர்களை பார்பதற்காக வந்திருந்தனர்.

ஆகாஷும்,அவளது நடராஜன் மாமாவும் ஏங்கோ சென்றிருந்தார்கள்.மற்ற அனைவரும் அங்கு இருந்தனர்.

அவன் தூக்கி வீசிய பை அவள் காலில் வந்து விழ அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

தனது ஜானகி அத்தையை பார்த்தவன் “அத்தை அவளை இங்கேருந்து போக சொல்லுங்க..,அவளுக்கும் இந்த குடும்பத்துக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்ல..., அவளுக்கும் எனக்கும் கூட..,கூடிய சீக்கிரம் அவளுக்கு டிவர்ஸ் நோட்டீஸ் அனுப்புறேன்..,அவளை இங்கிருந்து போக சொல்லுங்க...”என்று அவன் கூற

அந்த ஹால்  முழுவதாக அமைதி மட்டுமே நிலவி இருந்தது ஐந்து நிமிடங்களுக்கு மேலாக... அவள் செல்வதை தடுக்க அங்கு நிற்கும் யாருக்கும்  மனம் வரவில்லை.

அது அவளுக்கே புரிந்தது. அவள் அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு அவனையே திரும்பவும் பார்த்துக் கொண்டிருக்க அவளது தோள்கள்   மீது ஒரு கை விழுந்தது.

அது அவன் நண்பன் அர்னவ்.அவன் அவனது  வேலைகளை முடித்து விட்டு ஒரு வாரத்திற்கு முன்பே சென்னை வந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.