(Reading time: 40 - 80 minutes)

26. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

வனை கண்டுக்கமால் அவள் ஒவ்வொன்றையும் செய்ய அஸ்வினுக்கு  அவள் மீது  கோபம் ஏறிக்கொண்டிருந்தது.அவளது அருகில் சென்றவன் “ஏய் உன்னை இங்கே இருந்து போக சொன்னேன்..” என்றுக் கூற

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “நான் எதுக்கு போகணும்..” என்று கேட்டாள்.

“உனக்கு எதுக்குனு தெரியாதா..,தப்பு பண்ணவங்களுக்கு அவங்க பண்ண தப்பு தெரியாமலா இருக்கும்..”என்று அவன் கூற

“நான்..எங்க..சரி அதை விட்டுடுவோம் நான் தப்பு பண்ணலைன்னு சொன்னா மட்டும்..அஸ்வின் நான் சொல்லி முடிச்சிடுறேன்.

அதனால நான் ஒத்துக்குறேன் நான் தப்பு செஞ்சுறுக்கேன்.தப்பு செஞ்சவங்கள விட தப்பு செய்ய தூண்டுறவங்களுக்கு தான தண்டனை அதிகம்.என்ன நான் சொல்லுறது கரெக்ட் தான என்னோட  அஷு மாமா..”என்று அஸ்வினை பார்த்து கண்ணடித்தாள் கவி.(ஆகா நம்ப பொண்ணு ஒரு முடிவோட தான் இருக்கா போல..)

கவி கண்ணடிப்பதை பார்த்தவனுக்கு கோபம் அதிகமாக தான் வந்தது..,அவன் பழைய அஸ்வினாக  இருந்தால் அவளது இந்த செயலில் சொக்கிபோய் நின்றிருப்பான்.

“உன்ன வீட்ட விட்டு வெளிய போக சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு..,முத தடவை நீ வீட்ட விட்டு போனப்ப எங்களை பிடிச்சது விட்டதுனு இருந்துறுக்கனும் என்னோட தப்பு தான் உன்னை கூட்டிவந்தது என்னோட தப்பு அதுக்கு நல்லா பட்டுட்டேன்.ஒழுங்கா உன்னோட வியாக்கானத்தை எல்லாம் விட்டுட்டு கிளம்புற வழிய பாரு..”என்று கவியை பார்த்துக் கூறினான் அஸ்வின்.

அவனது ஒவ்வொரு சொல்லிலும் பெண்ணவள் மனதோ காயப்பட்டுக் கொண்டிருந்தது. அவனை ஒரு பார்வை பார்த்தவள்,”அஸ்வின் இவ்வளவு நாள் பொறுத்துக் கிட்ட, இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்க முடியாதா..,இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக் கிட்டா உன்னை....

தன்னையும் தாண்டி நெஞ்சை அடைத்த அழுகையை அடக்கியவள் தன்னை சரிபடுத்திக் கொண்டு உங்களை எல்லாம் பிடிச்சது போய்டும்..,கொஞ்ச நேரம் எல்லாரும் இங்க வந்து உட்காருங்க..,உங்க கிட்ட கடைசியா பேசிட்டு  போய்டுறேன்..”என்று அவள் கூற

அவள் சொல்வதை கவனிக்காதது போல் மற்றவர்கள் இருக்க அதை பார்த்தபோது அவள் மனது வலிக்க தான் செய்தது.

அப்பொழுதுதான் உள்ளே வந்த ஆகாஷுக்கும்,நடராஜனுக்கும  அவள் பேசியது புரியதபோதும் அனைவரும் அவள் கூறியதை மதிக்காமல் நிற்பது அவர்களுக்கு புரிந்தது.

“தயவுசெஞ்சு கொஞ்ச நேரம் வந்து நான் சொல்லுறத கேளுங்க..”என்று கவிமலர் கூற

அதற்கு மேல் நிற்காமல போய் அமர்ந்தான் ஆகாஷ்.அவனை தொடர்ந்து நடராஜனும் அமர அவர்களை தொடர்ந்து அனைவரும் வந்து அமர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் அமர்ந்ததை பார்த்தவள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு

 நாராயணன் தாத்தாவிடம் சென்றாள்.

அவரது காலடியில் முட்டிப்போட்டு  அமர்ந்தவள் அவரது மடியில் இருந்த கைகளை பிடித்துக் கொண்டாள்.

அவள் பிடிக்க போகும் போது அவரது கைகள் விலகத்தான் பார்த்தன,ஆனால் அவள் தான் அவரது கையை விலக விடாமல் பிடித்துக் கொண்டாள்.

“தாத்தா அன்னைக்கி என்கிட்ட என்ன சொன்னீங்க என்கிட்ட ...நீ இப்படி செய்வேனு நான் எதிர்பார்க்கல..,நீ என் அரசியோட பிள்ளையே இல்லைனு சொன்னீங்கதானா..,கொஞ்ச நாள்னாலும் என்ன நீங்க வளர்த்திருக்கீங்க..,என்னை பத்தி உங்களுக்கு தெரியலையா..,என்கிட்ட என்ன காரணம்னு கூட கேட்காம நீங்களா முடிவு பண்ணிடுவீங்களா..தாத்தா உங்க பேத்தி மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..”என்று கண்ணில் நீரோடு அவள் கேட்க நாராயணனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தனது மறுகையால் அவளது தலையை தடவிவிட்டார்.

“தாத்தா இவ்வளவு நாள் உங்கக் கிட்ட நான் கேட்க நினைச்சும் கேட்காம இருந்தேன்.இப்ப உங்க அரசியோட பொண்ணா நான் கேக்குறேன்.இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க எங்க அம்மாவோட வாழ்கையில நடந்த சில விஷயங்கள் அவங்க மேல கறையை படியவச்சிடுச்சு.., அதை நான் தான சரி பண்ணனும்.

எங்க அம்மாவின் வாழ்க்கையோட சில பக்கங்கள் இங்க யாருக்கும் தெரியாம இருக்கு அதோட ரகசியங்களும் உங்களுக்கு தெரியும்.. அதை சொல்லுங்க தாத்தா..”என்று அவள் கூற

அனைவரது கண்களும் அவரை தான் பார்த்திருந்தது.ஆனால் அவரோ அமைதியாக இருந்தார்.

அவரை வார்த்தைகளால்  நோகடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தால் கவி. ஆனால்,அவர் அமைதியாக இருப்பதை பார்த்தவள்

“தாத்தா அப்ப நீங்க சொல்ல மாட்டீங்க என்ன இருந்தாலும் எங்க அம்மா என்ன உங்க பொண்ணா..இல்லையே..”என்று அவள் சொல்ல அவள் நினைத்தது போல் அந்த வார்த்தைகள் அவரை பதம்பார்த்தது..

“கவி..”என்று ஆகாஷ் எதுவோ கூற வர அவனை தடுத்தார் நடராஜன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.