(Reading time: 25 - 50 minutes)

ண்டிப்பா முதலாளி.. நானே ரெண்டு மூனு பேருக்கு அப்படி பார்த்திருக்கேன். அதனால பயப்படாம சரின்னு சொல்லுங்க.. இப்பவே கூட ஒரு பொண்ணு இருக்கு.. நம்ம எஸ்டேட்ல முன்ன வேலைப் பார்த்த கனகாவோட சொந்தக்கார பொண்ணு.. அதோட தங்கச்சிக்கு ஏதோ ஆபரேஷன் செய்ய பணம் வேணுமா? நேத்து கூட கனகா அதைப்பத்தி என்கிட்ட பொலம்பிட்டு போச்சு.. இப்படிப்பட்ட பொண்ணுங்க சுலபமா சிக்கிடும் முதலாளி..”

“ஆனா பணம், நான் அதுக்கு எங்கடா போவேன்.. ஏற்கனவே என்னோட வீட்டை அடமானம் வச்ச பணத்துல தான் இப்போ கொஞ்சம் நிலைமையை சரி செஞ்சுருக்கோம்.. இவனுக்கு மருந்து மாத்திரை செலவெல்லாம் பார்க்கிறோம்.. இப்போ எங்க அக்கா வீட்டு சொத்தை விக்கவோ, அடமானம் வைக்கவோ முடியாதேடா..”

“அதெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்.. எந்த சொத்தையும் விக்கவோ, அடமானம் வைக்கவோ வேண்டாம்.. குன்னூர் வரைக்கும் இந்த விஷயம் இன்னும் தெரிய வரல இல்ல.. ஒருவேளை கேஸ்ல ஜெயிச்சாலும், தோத்தாலும் உங்களுக்கு கொஞ்சம் சொத்து வரத்தானே செய்யும், அதை வச்சு பணம் கேப்போம், எனக்கு தெரிஞ்சு  இதுக்கு பணம் கொடுக்க ஆள் இருக்காங்க.. அதனால அதெல்லாம் பிரச்சனையில்ல முதலாளி. என்ன சொல்றீங்க, பொண்ணு விட்ல பேசட்டுமா?”

“எப்படிடா.. இது அக்காவுக்கு தெரிஞ்சா, கண்டிப்பா ஒத்துக்காது.. அப்படியே தெரியாமலும் பாத்துக்க முடியாது.. வாணி ஒரு ஆள் போதும்டா, அக்கா போன் பண்ணா, எல்லாமே சொல்லிடும்டா, அப்புறம் அக்கா என்னைப் பத்தி என்ன நினைக்ககும்?”

“என்ன முதலாளி இதெல்லாம் உங்களால சமாளிக்க முடியாதா? வாணில்லாம் ஒரு ஆளா, நம்ம தம்பிக்காகன்னு சொன்னா அது வாய மூடிக்கிட்டு இருக்கப் போகுது.. இல்ல ஒரு மிரட்டு மிரட்டி வைப்போம்.. உங்களுக்கு நம்ம தம்பி சரியாகனுமா? வேண்டாமா?”

“சரியாதான் ஆகனும்டா.. ஆனா..” என்று தயங்கியவர், பின் ஒரு முடிவுக்கு வந்தவராக, “சரிடா.. ராஜா குணமாவன்னா சரி தான், ஆனா பொண்ணு தொழிலுக்கு புதுசா இருக்கட்டும்”

“என்ன முதலாளி.. அதான் சொன்னேனே, புது பொண்ணு ஒன்னு இருக்குன்னு, இல்லாட்டியும் வேற பொண்ணை தேடிப் பிடிச்சிடுவோம்” என்று சொன்னான். தன் வேதனைக்கு ஒரு தீர்வு கிடைத்த நிம்மதியில் அண்ணாமலை வழக்கத்திற்கு அதிகமாகவே மது அருந்திவிட்டு நிம்மதியாக உறங்கினார்.

கனகாவிடம் பேசிவிட்டு மறுநாளே வந்து அவர்களது முடிவை சொல்வதாக சொல்லிச் சென்ற மேனேஜருக்காக அண்ணாமலை காத்துக் கொண்டிருந்தார். மேனேஜரும் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்திருந்தான். சிறிது நேரம் எந்த வேலையாட்களும் இந்தப் பக்கம் வரக் கூடாது என்று அவர் வாணிக்கு உத்தரவு போட்டிருந்தார்.

“என்ன முத்து.. அந்த பொண்ணு வீட்ல பேசீனியா?”

“பேசினேன் முதலாளி.. ஆனா கனகாவ சரிக்கட்ட முடியல..”

“என்னடா.. அந்த பொம்பள நிறைய பணம் எதிர்பார்க்குதா?”

“பணம் எதிர்பார்த்தா கூட பரவாயில்ல.. உயிரே போனாலும் இப்படி ஒரு காரியத்துக்கு ஒத்துக்க மாட்டோம்.. எங்களை என்ன நினைச்சன்னு எகிறுது..”

“அப்படிப்பட்ட ஆளுக்கிட்ட போய் ஏண்டா இதைப்பத்தி பேசின? நமக்கு ஒத்து வரப் பொண்ணா பிடிக்க வேண்டியது தானே?”

“கனகா கொஞ்சம் பணத்துக்கு அலையுற ஆளு முதலாளி.. அதான் அதுக்கிட்ட பேசிப் பார்த்தேன்.. ஆனா ஆளு எகிறுச்சே தவிர, உஷாரா இருக்கு..”

“என்னடா சொல்ற?”

“வேணும்னா எங்கப் பொண்ணை உங்கப் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைங்க, எல்லாவிதத்திலேயும் அவ உங்கப் பையனை நல்லா கவனிச்சுப்பா, நாள் பூராவும் கூடவே இருந்து பார்த்துப்பா, என்ன சொல்றன்னு கேக்குது..”

“அடி செருப்பால, அவ இருப்புக்கு இந்த வீட்டு சம்பந்தியாவ பார்க்கிறாளா? சும்மாவாடா அவளை விட்டுட்டு வந்த? நேரா இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்க வேண்டியது தான, அருவாவால ஒரே வெட்டு வெட்டியிருப்பேனே!”

“அய்யோ கோப்ப்படாதீங்க முதலாளி.. எனக்கென்னமோ கனகா சொல்றது சரியா வரும்னு தோனுது.. தம்பிக் கூட அந்த பொண்ணு எப்பவும் இருக்கறது நல்லது தான.. காசுக்குன்னு கூட்டிட்டு வந்தா, இவ்வளவு நேரம் இருப்பன்னு கண்டிஷன் போடுவாங்க.. அதுவே ஒரு மஞ்சக்கயிறை கட்டிக்கிட்டு வந்தா தம்பிக்கு பணிவிடை செஞ்சுக்கிட்டு பொண்ணு இங்கேயே இருக்குமில்ல..”

“அப்போ அந்த பொம்பள பணம் வேண்டாமுன்னு சொல்றாளா? இல்லல்ல”

“முதலாளி.. நான் நேத்தே சொன்னது தான், இந்த மாதிரி நேரத்துல தம்பிக்கு ஒரு கல்யாணத்தை பண்ணா, தம்பிக்கு குணமாக வாய்ப்பு இருக்குல்ல, உங்க அந்தஸ்துக்கு ஒரு பொண்ணை நீங்க தேடலாம்.. ஆனா இப்போ நீங்க இருக்க நிலைமைக்கும், தம்பி இருக்கும் நிலைமைக்கும் எந்த பொண்ணு தம்பியை கல்யாணம் பண்ண பார்க்கும்.. வீடு வசதி இதெல்லாம் எதிர்பார்க்கும், ஆனா இவங்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா போதும், கல்யாணம் செஞ்சு வச்சா கூட இருந்து நம்ம தம்பிய அந்த பொண்ணு எல்லா விதத்திலேயும் பார்த்துக்கும்..”

“டேய் அந்த பொம்பளைக்கு வேனும்னா என்னைப்பத்தி தெரியாம இருக்கலாம், ஆனா உனக்கு தெரியுமில்ல, எனக்கு அந்தஸ்து ஜாதியெல்லாம் ரொம்ப முக்கியம்.. எங்க ராஜாக்கு பார்த்த பொண்ணு, அதான் சாரு, அது எங்க சொந்தக்கார பொண்ணு தான், இருந்தும் எங்க அளவுக்கு வசதியில்ல, அதனால அந்த பொண்ணு வேண்டாம்னு எங்க அக்காக்கிட்ட சொன்னேன், ஆனா என்னோட அக்கா கேக்கல, கடைசியில அந்த பொண்ணு அதோட புத்தியை காட்டுச்சுல்ல, ஒரே ஜாதிக்கே வசதியைப் பார்த்து நான் வேண்டான்னு சொன்னேன், இதுல இந்த பொண்ணை எங்க ராஜாவுக்கு கல்யாணம் செஞ்சு வைப்பேனா?

கேவலம் எங்க எஸ்டேட்ல வேலைப் பார்க்கிறவளோட சொந்தக்கார பொண்ணு, ஆமா அந்த பொண்ணோட அம்மா, அப்பா யாரு?”

“அந்த பொண்ணு அப்பா புழப்பை தேடி இங்க வந்தவன், சின்ன வயசுலயே  வீட்டை விட்டு ஓடி வந்தவனாம், புழப்பு தேடி போன இடத்துல தான் அந்த பொண்ணோட அம்மாவையே கல்யாணம் பண்ணியிருக்கான். இப்போ ரெண்டுப்பேரும் உயிரோட இல்ல, படிச்சு முடிச்சதும் அந்த பொண்ணுக்கு நம்ம எஸ்டேட்ல ஒரு வேலை போட்டு தரனும்னு முன்னாடியே கனகா சொல்லியிருந்துச்சு, அப்போ தான் இந்த தகவலெல்லாம் சொல்லுச்சு”

“எப்படியும் அந்த பொண்ணு அம்மா, அப்பா கலப்பு கல்யாணமா தான் இருக்கனும், அந்த குடும்பத்துல இருந்து ராஜாவுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கனுமா? இங்கப்பாரு நான் கட்சி விட்டு கட்சி தாவியிருந்தா, எப்பவோ பெரிய ஆளா ஆயிருக்கலாம், ஆனா என்னோட ஜாதிக் கட்சியை விட்டு போகக் கூடாதுன்னு தான், ஒன்னும் பெருசா இல்லன்னாலும், இப்பவும் நான் இந்தக் கட்சிக்காக உழைச்சிக்கிட்டு இருக்கேன். இப்பவும் என் ஜாதிக்காரனுக்கு ஏதாச்சும் பிரச்சனைன்னா, என்னை தான் முதலில் கூப்பிடுவானுங்க,

இங்க வந்து எத்தனை பஞ்சாயத்தை முடிச்சு வச்சிருக்கேன், அது தெரிஞ்சும் நீ என்கிட்டேயே இந்த விஷயமா பேசலாமா? இங்கப்பாரு முத்து நான் எத்தனையோ தப்பு பண்ணியிருக்கேன், தண்ணி அடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், ரேஸ்க்கு போவேன், அடிதடி வேலையில இறங்கியிருக்கேன், ஏன் கட்சிக்காக கொலை செய்யக் கூட ஆள் ஏற்பாடு செஞ்சுருக்கேன். ஆனா பொம்பள விஷயம் மட்டும் தான் இதுவரை நான் செய்யாத தப்பு, ஏன்னா வேற ஜாதி, மதம்னு நான் கலக்க விரும்பல, இதுக்கும் எனக்கு பிள்ளை கூட இல்ல, அப்பவும் நான் இப்படில்லாம் நினைச்சு பார்த்ததில்ல, அப்படிப்பட்ட நான் எங்க ராஜாவுக்கு சரியாகனும்னு தான் இதுக்கு ஒத்துக்கிட்டேன். ஆனா நீ கல்யாணம் பத்தியெல்லாம் பேசுன, அப்புறம் நீ தொடர்ந்து இங்க வேலை செய்ய முடியாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.