(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 17 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ந்த அறையின் வாசலில் துப்பாக்கி ஏந்திய அயல்நாட்டு மனிதன் நின்றிருந்தான். அதில் ஒரு மேஜையும் எதிர்எதிராக இரண்டு இருக்கைகளும் போடப்படிருந்தது. ஓரமாக ஒருவர் மட்டும் படுக்க கூடிய கட்டில் போடப்பட்டிருந்தது .

அதில் படுத்திருந்த மிதுனனுக்கு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அதனாலோ என்னவோ கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுக்கு அவன் வந்துகொண்டிருப்பதன் அடையாளமாக அவனின் கண்மணிகள் மூடிகிடந்த அவனின் இமைகளுக்குள் உருண்டுகொண்டும் புருவம் சுழித்தும், கை விரல்கள் அசையவும் ஆரம்பித்தது. அதனை தனது அறையில் இருந்த திரையில் அங்கே பொருத்தப்பட்டிருந்த கேமராவின் உதவியால் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் தீரன்,

சுயஉணர்விற்கு திரும்பிகொண்டிருந்த மிதுனனின் நினைவில் அன்று காலேஜில் ரங்கராஜனின் ஆட்கள் தன்னை காலேஜில் கடத்துவதற்கு முன்  சி.என்.சிக்கு எதிரான தனது களப்பணிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேலையில் யாழிசையை கண்டவன் கண்கள் அதுவும் தனியாக இருவரும் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை நோக்கி சென்றதை கண்டவன் நெஞ்சினில் தான் இன்று எப்படியாவது யாழிசையிடம் தன் மனதில் உள்ளதை சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணியிருந்ததை செயல் படுத்திவிடவேண்டும் என்ற உத்வேகம் பிறந்து.

எனவே தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் அறியாமல் நழுவி அவர்களை நோக்கி விரைந்தான்.

ஆனால் தான் அவர்களை நோக்கி செல்வதை தூரத்தில் இருந்தே சந்தியா கண்டுகொண்டாள். அவளுடன் இருந்த யாழிசை அதனை உணர்ந்ததுபோல் தெரியவில்லை.

அவ்வாறு கண்டுகொண்ட சந்தியாவின் பார்வை தன்னை பார்த்து ஏக்கமாக தழுவுவதை தொலைவில் இருந்தே மிதுனனால் உணர்ந்துகொள்ள முடிந்தது .

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஏனோ அவளுக்கு தன் மீது உள்ள ஈடுபாட்டை அவளின் தந்தையை கொண்டு தான் தவிர்க்க முயன்றாலும் அவளின் பார்வையில் இருந்த தனக்கான தேடல் அபூர்வமானதாக அந்த நேரம் அவனுக்கு தோன்றியது .

இவ்வாறு பலயோசனகளுடன் அவர்களின் அருகில் நெருங்கிவிட்ட மிதுனனின் வாய் ஆட்டோமெட்டிக்காக  கேர்ள்ஸ் என்று அழைத்துவிட்டது

தனது அழைப்பினில் திரும்பிய  யாழிசையிடம் கூறவந்த காதலை யாழிசையின் தன்மேல் இலாத ஆர்வமில்லாத பார்வையிலும் ஆனால் அவளின் அருகில் இருந்த சந்தியாவின் தவிப்பான பார்வையிலும் தடுமாறிவிட்டான்.

யாழிசையிடம் தான் கொண்ட ஒருதலை காதலைவிட தன்மேல் சந்தியா கொண்டுள்ள காதல் தீவிரமானதாக மிதுனனுக்கு அந்நேரம் தோன்றியது மேலும் அப்படி பட்ட சந்தியாவின் அருகில் யாழிசை இருக்கும் போது தன்னால் தான் முடிவெடுத்ததுபோல் யாழிசையிடம் தன் காதலை கூறி சந்தியாவை காயப்படுத்த அவனால்  ஏனோ முடியவில்லை.

எனவே டக்கென்று பேச்சை மாற்றி தன் கையில் இருந்த நோட்டிசை அவர்களிடம் கொடுத்துவிட்டு மீட்டிங் பற்றி படபடவென கூறியவன் அவர்களின் பதிலை கூட பெறாமல் வேகமாக எதுவோ துரத்துவது போல் அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட்டான்.

வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் யாழிசையும் சந்தியாவையும் சந்தித்துவிட்டு, சே.... இப்படி சொதப்பிட்டேனே தன்னையே நொந்துகொண்டு சுற்றி உள்ளதை கவனிக்காமல் வாகனங்களின் வழியாக சென்றுகொண்டிருந்ததும் அதனை தொடர்ந்து நடந்து நிகழ்வுகளும் மனக்கண் முன்னே படமாக ஓடியது.

மினிஸ்டர் ரெங்கராஜனின் ஆட்கள் நின்றுகொண்டிருந்த  வாகனங்களுக்குள் இருந்த பொலிரோவில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அதை அறியாமல் மிதுனன் அந்த காரை சந்தியாவையும் யாழிசையும் சந்தித்துவிட்டு  கடக்க முயன்ற நேரம் அதிரடியாக அந்த பொலிரோவின் கதவை  திறந்து  அவன் முகத்தில் துண்டைபோட்டு ஒருவன் இழுத்தான்.

தனது முகத்தில் படர்ந்த துண்டை கொண்டு தன்னை பின்னால் யாரோ இழுக்க முயலவும் அத்துண்டை தனது முகத்தில் இருந்து அப்புறப்படுத்த மிதுனனின் கைகள் உயர்ந்தது.

அப்போது அவனின் பின் மண்டையில் ஒருவன் கட்டையால் தாக்க அம்மா... என்று மிதுணன்  கத்தியதை  அந்த துண்டு அவன் வாயினில் அழுத்தி இழுபட்டதால் வெளியில் பலமாக கேட்பதை தடுத்தது.

மேலும் இருவர் அந்த எதிர்பாராது  அடியில் மிதுனன் நிலை தடுமாரியதை பயன்படுத்தி தங்களின் காருக்குள் இழுத்து போட்டுகொண்டு அந்த பொலிரோ கார் பயணப்பட ஆரம்பித்தது.

மிதுனனின் இருபக்கமும் அமர்ந்துகொண்டிருந்த தடியன்கள் அவனை இறுக்கி பிடிக்க முயன்றனர் .

ஆனால் காங்கேயன் காளையாக திமிறியபடி யாரடா நீங்க?...என்னை விடுங்கடா என்று கர்ஜித்தான்.

அவன் திமிரி தன்னை பிடித்திருந்தவர்களை உதர முயன்றதில் காரே ஆட்டம் கண்டது.

எனவே இரண்டுபேர் அவனை பிடித்தது மட்டுமல்லாமல் மற்றும் இரண்டுபேர்  கையில் வைத்திருந்த கட்டையால் அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினர் அத்துடன் டேய் அடங்கி உக்காருகிறாயா? அல்லது அடிவாங்கியே சாகப்போகிறாயா? என்று கேள்வி கேட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.