(Reading time: 12 - 23 minutes)

தொடர்கதை - மறவேனா நின்னை!?!? - 08 - ஆர்த்தி N

maraveno ninnai

மூன்று வருடங்களுக்கு முன்….

சில்லென்ற காற்று முகத்தில் மோதியும் வேர்த்து விறுவிறுக்க அந்த அதிகாலை பொழுதில் கோயம்புத்தூரின் ரேஸ்கோர்ஸ் ரோடில் ஓடிக் கொண்டிருந்தான் ரிஷி வந்தியத்(சாரி சாரி jog பண்ணிக் கொண்டிருந்தான்). கோவையின் சீதோஷன நிலையை சொல்லவும் வேண்டுமா.. அதுவும் மரங்கள் அதிகம் படர்ந்து இருக்கும் ரேஸ்கோர்ஸ் சாலை பார்பவர் கண்களை ஈர்க்கும்.. எங்கும் மக்கள் கூட்டமாகவோ அல்லது தனி தனியாகவோ நடை மற்றும் உடற் பயிற்சி செய்வதை காணலாம்.

அப்பொழுது அவன் எதிர் வந்த ஒரு முதியவர், “என்னப்பா ரிஷி எப்போ  சென்னைல இருந்து வந்த?”என அவனை நிறுத்திக் கேட்க,

எப்படி இருக்கீங்க தாத்தா? நான் நேத்து நைட் வந்தேன்..நாளைக்கு கிளம்பிருவேன்”.. என அவர் கேட்காததுக்கும் சேர்த்து பதிலளித்தான்..

நீ வறர்தே இல்லைனு உங்க அம்மா சொல்லிட்டு இருக்கா.. நீ பெரிய ஆள் தான்.. ஆனாலும் வரனும்லஅப்படி இப்படினு அவனைப் பிடித்துக் கொண்டார்..

ஒரு வழியாக அவரை பேசி அனுப்பிவிட்டு வீடு திரும்பினான்.. ரேஸ்கோர்ஸில் உள்ள மிகப் பெரிய வில்லா அது.. நேரே உள்ளே சென்றவன், ஹால் சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சாராதாம்மாவின் மடியில் தலையை சாய்த்துக் கொண்டான்..

ஏன் மி என்னப் பத்தி ஊரு ஃபுல்லா கம்ப்லைன்ட் பண்ணி வெச்சு இருக்கீங்களாஎன்று பொய்யாக முறைத்துக் கொண்டுக் கேட்டான்..

அவன் சொன்னதை விடுத்து, “அது என்னடா மி.. அம்மா நு கூப்டு”..

இப்போ அதுவா ரொம்ப முக்கியம்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.. ”

என்னடா என் அக்கா கிட்ட காலைலயே வம்பு பண்ணிட்டு இருக்கே?..” என அவனை அதட்டிக் கொண்டே வீட்டின் உள் நுளைந்தார் அவனின் தாய்மாமனான விஷ்வனாத்.

ரிஷி மற்றும் க்ருஷ் இரண்டு நிமிட இடைவேளையில் சத்தியமூர்த்தி மற்றும் சாரதாவிற்கு பிறந்த இரட்டை சகோதரர்கள். ரிஷி மற்றும் க்ருஷ் உருவத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் குணாதிசயத்தில் இரு வேறு துருவங்கள். ரிஷி அமைதி(அன்னையிடம் மட்டுமே அவனது வாலுத்தனம்) மற்றும் எந்த விஷயத்தை செய்வதற்கு முன் ஆழ்ந்து யோசித்து செய்பவன். க்ருஷ் படபட பட்டாசு, ரிஷி இல்லாமல் அனுவும் நகராது..

 சத்தியமூர்த்தி அவரது பூர்விகமான கோவையில் இரண்டு மிகப் பெரிய பருத்தி ஆலையை நடத்தி வந்தார். இரண்டு தலைமுறையாக அவர்களது குடும்ப தொழில் இதுவே. சாரதாவை மிகவும் விரும்பி இருக்குடும்ப சம்மதத்துடன் திருமணம் செய்தார். சாரதவும் கணவனின் மேல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.