தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 08 - Chillzee Story
"நான் சத்யா. இவ சக்தி. நாங்க தான் நீங்க பார்க்க வந்த இன்வெஸ்ட்டிகேட்டர்ஸ். சொல்லுங்க உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்?" – சத்யா மென்மையான குரலில் ப்ரியம்வதாவை அமைதிப் படுத்த விரும்புபவளைப் போல கனிவுடன் கேட்டாள்.
ப்ரியம்வதா முகத்தில் திகைப்பு வந்தது. சத்யா சொன்ன பதிலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
"என்ன இவங்க இன்வெஸ்ட்டிகேட்டர்ஸான்னு யோசிக்காம உங்க பிரச்சனையை சொல்லுங்க. நாங்க ஹெல்ப் செய்றோம்" – சத்யா ப்ரியம்வதாவின் திகைப்புக்கான காரணத்தை புரிந்துக் கொண்டவளாக பேசினாள்.
ஆனாலும் ப்ரியம்வதாவின் முகம் தெளிவாகவில்லை.
"இல்லை. இது சரியா இருக்காது
...
This story is now available on Chillzee KiMo.
...
சக்தியை அவள் சொல்வது உண்மையா என்ற கேள்வியுடன் பார்த்தாள். சக்தி சத்யாவே பேசட்டும் என்று அமைதியாக இருந்தாள்.
"இந்தாங்க மொபைல்ல தேடிப் பாருங்க. நான் சொல்றது உண்மைன்னு உங்களுக்கே தெரியும்"