(Reading time: 28 - 56 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 14 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

அதிகாலை நேரம், பறவைகள் எல்லாம் உற்சாகமாக கீச்சிக்கொண்டிருந்தது. அந்த பால்கனியில் தலைமுடியில் தண்ணீர் சொட்ட, அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே அந்த அதிகாலை இருட்டில் வானில் தெரிந்த விடிவெள்ளியை பார்த்தபடி நின்றிருந்தாள் தமிழ்செல்வி. ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நாளின் ஏற்பட்ட நினைவுகளில் இரவெல்லாம் உறங்காமல் அலைபாய்ந்த மனதை அதன் போக்கில் விட்டிருந்தாள். அவளின் மனபாரம் கண்களின் வழியே கண்ணீராக வழிந்து கொண்டிருந்தது. எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று அவளின் அருகே அமர்ந்த கீச்சிட தன்னிலை உணர்ந்தவள் கண்களை துடைத்து கொண்டு நேரம் பார்த்தாள். எத்தனை நேரமாக அந்த ஈர முடியுடன் அங்கே நின்றிருந்தாளோ!!! நேரம் ஐந்தறை என காட்டியது.

முகத்தை அழுந்த துடைத்தவள் எப்போதும் போல தன்னுடைய வேதனைகளை மனதின் ஒரு ஓரத்திற்கு தள்ளிவிட்டு கீழே சென்றாள். சமயலறைக்கு சென்றவள் பாலை எடுத்து காய்ச்சினாள்.

அந்த சமையலறையின் திண்டில் சாய்ந்து நின்றிருந்தவளை கலைத்தது அலைபேசியின் ஓசை. கலைவாணி தான் அழைத்திருந்தார். செல்பேசியை எடுத்து காதில் வைத்தவள் "அம்மா..." எனவும், அவளின் அழைப்பிலேயே அவள் அழுதிருப்பதை உணர்ந்தவர் "தமிழ்..." என்றார் குரலில் ஏற்பட்ட தழுதழுப்பை மறைத்தபடி.

அவரின் உணர்வுகள் புரியாமல் இருக்குமா தமிழுக்கு??? அது இன்னும் அவளை வேதனை படுத்தியது. சில நொடிகள் அமைதியில் கழிய, "தமிழ், எப்பவும் போல இன்னைக்கும் பட்டினி கிடைக்காதடா. அதை சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன். நீ பட்டினியா இருக்கறதால நடந்ததை மாத்த முடியாது. நம்மளை விட்டு போனவர்களை திரும்ப கொண்டு வரவும் முடியாது" கலைவாணி சொல்லவும் "முயற்சி பணறேன்மா" என்றவள் பதிலிலேயே அவள் கேட்கப்போவதில்லை என புரிந்தது.

ஒரு பெருமூச்சுடன் அழைப்பை துண்டித்தவர் தன் முன்னே இருந்த தன்னுடைய மகனின் புகைப்படத்தை பார்த்தார். புதிய மலர் மாலை அணிவிக்கப்பட்டு விளகேற்றப்பட்டிருந்தது. ஐந்து ஆண்டுகள் கழிந்து விட்டது. ஆனால் அந்த வலியும் வேதனையும் இன்னும் அப்படியே இருந்தது. கண்களில் கண்ணீர் வழிய நின்றிருந்தவருக்கு இறந்த மகனை நினைத்து அழுவதா இல்லை அதற்க்கு தன்னை தானே குற்றம் சுமத்தி கொண்டு தண்டனையை அனுபவிப்பவளை நினைத்து வேதனை கொள்வதா என புரியவில்லை.

"என்ன பாப்பா சீக்கிரம் எழுந்துட்டியா" என்றபடி பாக்கியம் உள்ளே வரவும் டக்கென அந்த புறம் திரும்பி முகத்தை துடைத்தவள், "ஆமாம்மா. காபி போட்டுட்டேன். இதோ டிபனுக்கு காய் எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.