(Reading time: 15 - 30 minutes)

 கார்த்திக் மும்முரமாக அவனது லேப்டாப்பில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களது உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தான். உண்மைகளை பொய்யாக்கி கொண்டிருந்த சந்தியாவின் புத்திசாலித்தனத்தை வியந்து ரசித்தாலும் தனது அத்தை மகள், அதுவும் அவன் எதிரிலேயே முட்டளாக்கப்படுவதை அவன் விரும்பவில்லை.  எனவே சந்தியா அவனை சொன்னவுடன் மதுவைப் பார்த்து "மது என் பிரிண்டர் வொர்க் ஆகல. உன்னோட பிரிண்டர்க்கு கொஞ்சம் டாகுமெண்ட்ஸ் பிரிண்ட் கொடுத்திருக்கேன். உனக்கு ஈமெயில்லும் அனுப்பிருக்கேன்.  நீ அதை கலெக்ட் பண்ணி ப்ரூப் ரீட் பண்ணி சைன் பண்ணி கொண்டு வா " என்று அவளை ஏவினான்.

அத்தனை நேரம் சந்தியாவிடன் பேச்சில் கவனத்தை பதித்திருந்த மது கார்த்திக்கை பார்த்தவுடன் "சரி. நான் போய் பார்க்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி, நீ சொன்னது உண்மை தானா? ஒரு பொண்ணை கை நீட்டி அடிச்சியா? ஐ கான்ட் பிலீவ் திஸ். அந்த தைரியம் உனக்கு எப்படி வந்தது காதி? அப்படி என்ன தான் நடந்தது?"  என்றவாறே சந்தியாவை  என்ன தான் பிடிக்கவில்லை என்றாலும்  அவள் மீது ஒரு இரக்க பார்வை செலுத்தியவாறு. "ஐ வாஸ் டோட்டலி அவுட் ஓப் கண்ட்ரோல்! ஐ டோன்ட் நோ ஒய்" என்றான் கார்த்திக் சோர்ந்த குரலில் பெருமூச்சுடன் .

 

அவன்  கம்பீரமான குரலின்  இயல்பு  இழப்பதை விரும்பாத சந்தியா "பழச பத்தி பேசாம சியர் அப் அண்ட் பி ஹப்பி மேன். டுடே இஸ் மை பர்த்டே" என்று முதல் சந்திப்பில் அவன் அவளுக்கு சொன்னதையே புன்னகையோடு திரும்பச் சொல்ல, அவளின் புன்னகை படிந்த முகத்தை பார்த்ததும், பழைய நிலைக்கு வந்து விட்ட அவனது குரலில் "மை வோர்ட்ஸ்" என்றான். அவளோ "அது அப்போ..  இப்போ ...அவர் வோர்ட்ஸ் " என்றாள்.

 

மது இருவருக்கும் நடுவில் உள்ளது வெறும் நட்புதானா என்பது  இன்னும் தெளியாதவளாய் அவர்களை பார்க்க, கார்த்திக்கோ "மது, ஹரி அப். சீக்கிரம். டைம் ஆகுது" என்று அவளை அனுப்பி விட்டு சந்தியாவை பார்த்து "நீ பெரிய கிரிமினல் லாயர் ஆக வேண்டியது.....என்ன பண்ண ஏமாறுறவுங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவுங்க இருக்கத்தான் செய்வாங்க " என்றவாறே "சந்தியா, மது ரெம்ப ப்ரண்ட்லி. உன்னை அடிச்சேன்ன உடனே எப்படி பதறுனா பாத்தேல. அவளை சந்தேக பேர்வழி அப்படி இப்படின்னு இனி ஒரு தடவ கூட ஹர்ட்  பண்ணாத.. அவளுக்காக இல்லாட்டினாலும்  அட்லீஸ்ட் எனக்காகவாவது" கெஞ்சுவது போல முடித்தான்.

 

"அப்பா.. அத்தை மகள் ரத்தினத்திற்கு எத்தன வக்காலத்து " என்று மனதுக்குள் சந்தியா குமைந்தாளும் அவன் கெஞ்சலில் ஏனோ மறு கேள்வியேதும் கேட்காமல் "ஓகே. " என்றவள் மடக்கிய ஒரு கையை கன்னத்தில் வைத்து, அதன் முட்டியை டேபிளில் அழுத்தியவாறே "அப்புறம்...சாருக்கு இங்க என்ன வேலைன்னு சொல்லவே இல்லையே?" என்றவளை முதல் சந்திப்பின் போது  பார்த்த அதே குறும்பு பார்வையோடும்  ரகசிய சிரிப்புடனும், "நீ தான் என் சிரிப்பிலே எல்லாத்தையும் கண்டிபிடிச்சிடுவியே.. நீயே சொல்லு. இப்பவாவது பல்பு சரியா எரியுதான்னு பாக்கிறேன்" என்றான்.

 

"ம்.. MR அனலிஸ்ட் அண்ட் மதுவுக்கு ரைட் ஹண்ட்.." என்றவள் மனதுக்குள் "மதுக்குகூஜா தூக்கிற வேலைய இதை விட டீசன்ட்டா சொல்ல முடியாதப்பா"  என்று சொல்லிகொண்டாள் .

கார்த்திக் அதற்கு "ஹம்....fake ன்னு சொன்னதுக்கு மச் பெட்டர்" என்றான் வாய் விட்டு சிரித்தபடி. அவன் சிரிப்பில் ஒரு நொடி லயித்த அவளிடம் "சந்தியா, உன்  பொக்கே இதோ இருக்கு. நீ நாளைக்கே ஜாயின் பண்றதுனால உனக்குன்னு  ஸ்பேஸ் ரெடி பண்ண கொஞ்சம் டைம் ஆகும். அதுவரைக்கும் அது இங்கே இருக்கட்டும்.  உனக்கு ஒரு லேப்டாப் ரெடி பண்ணிட்டா டெம்ப்ரரியா கான்ப்ரன்ஸ் ரூம்ல ஒர்க் பண்ணலாம். கான்ப்ரன்ஸ் ரூம் மீட்டிங்க்கு தேவப்படுறப்போ இங்க வந்து வொர்க் பண்ணு. ஒரு 2 டு 3 டேஸ் இந்த கஷ்டம் இருக்கும். " என்றவனை இடைமறித்த சந்தியா

 

 "ஆமா....என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே...   நீங்க தமிழ்ல தான் பேசுறீங்களா? எனக்கு எதுவுமே புரியலயே" என்று அவள் சொன்ன நேரத்தில் ஒலித்த  இண்டர்காமை எடுத்த கார்த்திக்

 

"காதி, எனக்கு எதுவுமே புரியல. இப்போ எதுக்கு சந்தியாவுக்கு ஆபர் லெட்டரும், கான்ட்ராக்ட் பேப்பரும் ப்ரூப்  பாத்து சைன் பண்ண சொல்ற. ஐ டோன்ட் தின்க் ஷி  டிசர்வ் எ ஜாப் ஹியர் " என்றாள் மது.

 

கார்த்திக், "நீ தேவ இல்லாம பிஸ்னஸ்ஸயும், பெர்சனல் விஷயத்தையும் மிக்ஸ் பண்ற. ஜஸ்ட் டு இட் இப் யு பிலீவ் மீ" என்றான்.

 

"கூஜா தூக்குறவனுக்கு என்ன சாணக்கியத்தனம்...." என்று மானசீகமாக கிண்டலடித்தாள்.

மது "அவ திறமையானவள்ன்னு எனக்கு தெரியும் காதி. ஆனா அடிப்படையில அவ அட்டிட்யூட் சரியில்ல" என்றாள். "ம்... இந்த அட்டிட்யூட்ன்ற வார்த்தை பொண்ணுங்களுக்கு யார் தான் சொல்லிக்கொடுத்தான்னு தெரியல. விட மாட்டேன்றாங்க" என்றான் சந்தியாவை அளவெடுத்த படியே. அவளும் அவனை அப்படி சொன்னவள் தானே.  

 

சந்தியாவிற்கும் அவன் குத்தலின் அர்த்தம் புரிந்தது. "இப்போவும் உன் அட்டிட்யூட்ல என்ன மாற்றம்?.. என் கன்னம் என்ன உன் ப்ளே க்ரொளண்ட்டா ... பளார்னு அடிக்கிற பின்ன பீலிங்க்ஸ் விட்டு தடவுற...ஆனா எதுக்கும் சாரி மட்டும் கேக்க மாட்ட.  ப்ரண்ட் ஆன பிறகு சாரி, தேங்க்ஸ் எல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணகூடாது ஓகே. ஆனாலும் தொட்டு பேசலாமா? வாழைப் பழத்தில்  ஊசிய நுழைக்கிற மாதிரி வார்ன் பண்ண வேண்டியது தான் "

 

கார்த்திக் மதுவிடம் "நீ பேப்பர்ஸ் கொண்டு வா. அவகிட்ட பேசலாம்" என சொல்லி அழைப்பை துண்டித்தான்.

 

அவன் வைத்த பிறகு "கார்த்திக் உங்ககிட்ட முக்கியமா ஒன்னு சொல்லணும்" என்றாள் சந்தியா. அவன் சொல்லுமாறு சைகை செய்தவுடன் தொடர்ந்தாள், "கார்த்திக், எங்க அப்பா ரெம்ப ஸ்ட்ரிக்ட். பசங்க கூட பழக கூடாதுன்னு சொல்லுவாங்க. அப்பா பயப்படுற ஒரே விஷயம் பாய்ஸ் கூட பழகி லவ் அப்படி இப்படின்னு ஏதாவது பிரச்சன வந்துட கூடாதுன்னு தான். ஆனா, டு பி ஹானெஸ்ட், எனக்கு ப்ரண்ட்ஸ்ல  90% பாய்ஸ் தான்.  என் ப்ரண்ட்ஸ்க்காக உயிரை கூட கொடுப்பேன். அதே சமயம், என்னோட லிமிட் தாண்டி யார்கிட்டையும் பழக மாட்டேன். யார்கிட்டயும் தொட்டு பேச மாட்டேன். அவங்களையும்  என்னை தொட்டு பேசவிட மாட்டேன்.  அவுங்களும் அதை புரிஞ்சு நடந்துப்பாங்க. ஆபத்துக்கு பாவம் இல்லன்னு தான் உங்கள வைச்சு பைக்க ஓட்டினேன். நீங்க என்னை பத்தி தப்பா நினைக்க கூடாது பாருங்க....அதுக்கு தான் சொல்றேன்"

 

கார்த்திக் அவள் சொல்லி முடிக்கும் வரை அவளையே  பார்த்த படி இருந்தான். "உன் கன்னத்தை தொட்டது தப்பு தான். இனிமே அது நடக்காது. நீ நேரடியாவே சொல்லிருக்கலாம் " என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

 

"என்னோட ப்ரண்ட்ன்னா இட்ஸ் எ பேசிக் ரூல் ஓப் தம்ப். அதான் சொன்னேன். கார்த்திக், தப்பா நினைச்சுக்காதீங்க. " என்றாள் சந்தியா.

 

"நீ என்னை பத்தி தப்பா யோசிக்கிறது...புதுசா..... என்ன?" என்றான் கார்த்திக் கிண்டலாக.

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க பழுத்த பழம்ன்னு பைக்ல வந்தப்பவே தெரிஞ்சதே..." என்றாள் சந்தியா மழுப்பலாக.

 

"அப்புறம் என்ன?" என்று  அமர்ந்திருந்த நாற்காலியை மேஜையின் அருகில் இழுத்து, அவள் அருகில் வந்து நேருக்கு நேர் பார்த்தவாறே புருவத்தை உயர்த்தி சற்று மெல்லிய குரலில் "உங்க அப்பா பயப்படுறது நடந்துடுமோன்னு பயமா இருக்கா?" என்றான் குறும்பாக.

"இவன் ஒருத்தன்  எப்ப பாத்தாலும் ஏடா கூடமாவே பேசுவான். எல்லாம் கொஞ்ச நேரம் தான். ஆப்பு உனக்கு கிடைக்கும் போது தெரியும் சந்தியா யாருன்னு " என்று அவனை கருவியவாறு பதில் சொல்ல எத்தனித்தாள். அப்போது மது அறைக்குள் நுழையவே அவன் பார்வை அவள் பக்கம் திரும்ப, "பார்ரா.. அங்கிட்டு பணக்கார தெய்வானை, இங்கிட்டு நான் வள்ளியா? அட் எ டைம் ரெண்டு பிகுருக்கு ரூட் விடுறியே  கார்த்திக்கேயா... நீ சரியே இல்லை" என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போது இண்டர்காம் ஒலித்தது.

 

இவ்வாறாக இந்த சந்திப்பில், வெண்ணெய் திரண்டு வரும் போது மது பானையை உடைத்து விட...இருவரின் குழம்பிய மனதில் இருப்பது காதலா, நட்பா இல்லை வெறும் ஈர்ப்பா ? . இந்த சந்திப்பு இன்னும் முடியவில்லையே... பார்க்கலாம்.

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 5 

Go to Episode 7

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.