(Reading time: 19 - 37 minutes)

ப்படியே நேரம் ஓடி இனியா வீட்டிற்கு கிளம்புவதற்குள் அபி உறங்கி இருந்தாள். இனியா அனைவரிடமும் கிளம்புவதாக கூறினாள்.

குழந்தை வேற தூங்கிட்டாலே. இவளை வச்சிட்டு எப்படிம்மா போவ. உன் ஸ்கூடிலயா வந்த என்று வினவினார் இளவரசனின் தாய்,

இல்லம்மா. நான் ஆட்டோல தான் வந்தேன். அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்லை.

அதற்குள் இளவரசன், இல்லை இனிய நான் உன்னை ட்ராப் பண்றேன் வா என்று அழைத்தான்.

இளவரசனின் தாயும் அதுவே சரி என்று கூறி அனுப்பி வைத்தார்.

இளவரசன் இனியாவை தன் காரில் அழைத்துக் கொண்டு செல்லும் போது “சந்துருவின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்று எண்ணுகிறீர்கள்” என்று கேட்டான்.

இதற்காக தான் என்னை அழைத்துக் கொண்டு வந்தாயா என்று இனியா கேட்டுக் கொண்டாள். (அட மனதில் தான்.)

“இப்போது அவர் நன்றாக தான் உள்ளார். ஆனால் அவர் மனது அப்பப்ப குழம்பி விடுகிறது என்று நினைக்கிறேன். இது தற்கொலை அளவுக்கு போன எல்லோருக்கும் ஏற்படும் நிலை தான். அதை சரி செய்து விடலாம். ஒன்றும் ப்ராப்ளம் இல்லை.”

அதன் பின் அதை பற்றி பேசாமல் இருவரும் வேறு ஏதேதோ பேசினார்கள்.

இளவரசன் “என்ன இனியா என்ன வாங்க போங்கனு பேசறீங்க. பேர் சொல்லியே கூப்பிடலாம். எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லை” என்றான்.

“இல்ல எனக்கு உங்க பேர் சொல்லி கூப்ட வரல.”

“ஏன் சந்துருவை மட்டும் பேர் சொல்லி கூப்பிடுற. என்ன மட்டும் ஏன் கூப்பிடறதில்ல. எனக்கு இன்னைக்கு ரீசன் தெரிஞ்சாகனும்.”

“இல்ல நீங்க என்ன விட பெரியவர். அதான்.”

அப்ப சந்துரு மட்டும் உன்ன விட பெரியவன் இல்லையா. என்ன ஏதோ வயசானவன் ரேஞ்சுக்கு சொல்ற.”

“இல்ல உங்க நேம் ரொம்ப பெரிசா வேற இருக்குல்ல. அதான்”

“ஏன் நீயே தான் என் நாமே ஷார்ட் ஆக்கி இல்லனா வேற ஏதும் நேம் சொல்லி கூப்பிடு என்றான்.”

இனியா சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

“என்ன இனியா நமக்கு ச்லோசே ஆணவங்கள தான் அப்படி கூப்பிட முடியும். இவன எப்படி அப்படி கூப்பிடுறதுனு யோசிக்கிறியா.”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. உங்கள பேர் சொல்லி கூப்பிட்டா மரியாதையா இருக்காதுன்னு தான் யோசிச்சேன்” என்றாள்.

“அத பத்தி யோசிக்க வேண்டியவன் நான். எனக்கு அப்படி எல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.”

“ம்ம்ம். “இளா” ன்னு கூப்பிடட்டுமா” என்று மெல்லிய குரலில் சொன்னாள் இனியா.

இளவரசன் காரை திடிரென்று நிறுத்தி விட்டான்.

இனியா பயந்து விட்டாள். “என்ன என்று கேட்டாள்”

“ஏய் என் நேம் யாருமே இப்படி அழகா ஷார்ட் பண்ணதில்ல தெரியுமா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

இனியா அமைதியாக வந்தாள்.

“என்னை ஒரு முறை இளானு கூப்பிடு. என் நேம் கேட்டு நானே சந்தோஷ படுறேன்” என்று சொல்லி அவள் வாயால் தான் பெயர் சொல்லக் கேட்டு சந்தோசப் பட்டான் இளவரசன்

இனியாவின் வீடு வந்து சேர்ந்தது.

“வாங்க. வீடுக்குள்ள வந்துட்டு போங்க” என்றாள் இனியா.

“இல்ல நான் இன்னொரு நாள் வரேன். எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நீங்க வரேன்னு சொன்னதால தான் நான் வீட்டுக்கு வந்துட்டேன். சோ இன்னொரு நாள் வரேன்.”

“இல்ல சும்மா ஒரு 5 நிமிஷம் வந்துட்டு போங்க என்று இனியா எவ்வளவோ வற்புறுத்தியும் வரவேண்டிய நாள் வரும் அன்னைக்கு கண்டிப்பா வரேன்” என்று சொல்லி விட்டு  கண் சிமிட்டு விட்டு சென்றான் இளவரசன்.

இனியா சில நிமிடங்கள் சிலை போல் அபியை வைத்துக்கொண்டு நின்றாள்.

நான்கைந்து நாட்கள் இனியாவிற்கு சுவர்க்கமாக சென்றது. தினமும் காலையும் மாலையும் இளவரசனிடம் இருந்து குட் மார்னிங், குட் நைட், சாப்டாச்சா இது போன்ற மெசேஜ் வந்துவிடும். இவளும் திரும்ப ரிப்ளை செய்வாள். ஆனால் இருவருமே போன் செய்து கொள்ளவில்லை. இது போன்ற சம்பிறதாய வார்த்தைகளை தவிர வேறு ஏதும் பேசிக் கொள்ளவுமில்லை. ஆனால் இதெல்லாமே இனியாவை சந்தோசமாக வைத்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.

அந்த வெள்ளிக்கிழமை மாலை இனியா வீட்டில் அனைவரும் அமர்ந்து பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஸ்வேதாவும் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் கல்லூரியில் ஏதோ போட்டிக்காக இனியாவின் உதவியை நாடி வந்திருந்தாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இனியாவின் செல் போன் அலறியது. இளவரசன் தான் பேசினான்.

இனியா, “சொல்லுங்க இளா என்றாள் சந்தோசத்தில்”

அவன் குரலோ அதற்கு சற்றும் மாறாக “சந்துரு ஏதோ சரியில்லை என்றும் ஏதோ மிகவும் மனசொடிஞ்ச மாதிரி பேசுகிறான், நீ வந்தால் நன்றாக இருக்குமென” இனியாவிடம் கூறினான்.

இனியாவும் சரி என்று சொல்லிவிட்டு வீட்டில் சொல்லி விட்டு கிளம்ப தயாரானாள்.

அவள் கிளம்ப எத்தனிக்கையில் ஸ்வேதா வந்து “அக்கா நானும் உங்களுடன் வரவா. என்னையும் வீட்டில் விட்டு விடுகிறீர்களா, இல்லையெனில் மாமா எனக்காக வீணாக கிளம்பி வர வேண்டும்” எனக் கேட்டாள்.

இனியாவிற்கும் இவளை தன் அத்தான் அழைத்துக் கொண்டு சென்றால் தன் அக்கா தன் மாமாவிடம் தான் பாய்வாள் என்று தெரிந்ததால் சரி என்று அழைத்துக் கொண்டு சென்றாள்.

இந்த முறை இனியவை வரவேற்க இளவரசன் வெளியில் வந்திருக்கவில்லை. இனியா நேராக உள்ளே சென்று ஸ்வேதாவை கெஸ்ட் ரூமில் வெயிட் பண்ண சொல்லிவிட்டு நேராக உள்ளே சென்றாள்.

அதற்குள் இளவரசனின் தாயை சந்தித்து விவரம் கேட்டுக் கொண்டிருந்தாள். 5 நிமிடத்திற்குள் ஏதோ சத்தம் கேட்கவே இனியாவும் இளவரசனின் தாய் ராஜலட்சுமியும் வெளியில் விரைந்தனர்.

வெளியே வந்து கண்ட காட்சியை இனியாவால் நம்பவே முடியவில்லை.

இளவரசன் ஸ்வேதாவை பிடித்து வெளியே தள்ளிக்கொண்டிருந்தான்.

இனியா ஒரு நிமிடம் திகைத்து அதில் இருந்து வெளியே வந்து “என்ன செய்கிறீர்கள் மிஸ்டர் இளவரசன்” என்றாள்.

“இளா மிஸ்டர் இளவரசனாக மாறியிருப்பதை அவன் கவனித்தான். ஆனால் அதை கவனித்ததாக கண்பிதுக்கவில்லை.”

ஸ்வேதாவை பிடித்திருந்த இளவரசனின் கையை பிடித்து தள்ளினாள் இனியா.

“இவள் எப்படி இங்கு வந்தாள். இவள் ஒரு நிமிடம் கூட இங்கு இருக்க கூடாது” என்றான் இளவரசன்.

“இவளை நான் தான் அழைத்து வந்தேன்.”

“நீயா இவளை அழைத்து வந்தாய். இவள் ஒரு கொடியவள். இவள் இந்த வீட்டில் இருப்பதை நான் அனுமதிக்க மாட்டேன்.”

“அவள் என் தங்கையை போன்றவள். அவளை அவ்வாறு கூறினால் எந்நாளும் இருக்க இயலாது.”

“உன் தங்கை இல்லை தானே. இவளை போன்றவள் உன் தங்கையாக கூட இருக்க இயலாது” என்றான்.

“இப்போது என்ன தான் கூறுகிறீர்கள்.”

இளவரசனுக்கு என்ன செய்வதென்று ஒரு நிமிடம் புரியவில்லை. ஸ்வேதாவை உற்றுப் பார்த்தான். பின் அவனின் கோபம் தலைக்கேறியது.

“இவள் இங்கு இருக்க கூடாது” என்று அவன் குரல் கர்ஜித்தது.

இனியாவின் உடல் ஒரு நிமிடம் அதிர்ந்தது. பின் “அவள் இருக்க கூடாது என்றாள் எந்நாளும் இருக்க இயலாது” என்று விட்டு கிளம்பினாள். இது வரை அழுதுக் கொண்டிருந்த ஸ்வேதா இனியாவுடன் கிளம்பினாள்.

இளவரசன் திரும்பி நின்றுக் கொண்டான்.

இனியாவும் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். இருவரும் ஆளுக்கொரு திசையாக பிரிந்தனர். 

தொடரும்

En Iniyavale - 04

En Iniyavale - 06

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.