(Reading time: 13 - 26 minutes)

 

கிருஷ்ணாவிற்கு மீரா என்றாலே தொந்திரவு தான்.அவள் எங்கே போக வேண்டும் என்றாலும் அவனையும் அழைத்து செல்வாள். இதனாலே ஹாஸ்டலில் நண்பர்கள் பெண்கள் விடுதியின் நிலை, அவன் அவன்  பார்க்கும் பெண்  பற்றி தெரிந்துக்கொள்ள கிருஷ்ணாவை நச்சரிப்பார்கள். அது கிருஷ்ணாவை இன்னும் எரிச்சல் கிளப்பியது. மஹிக்கு படிப்பு தவிர இன்னொரு பெரிய வேலை என்றால் கிருஷ்ணாவை சமாதனம் செய்வது தான்.

 

ஹாஸ்டலில் வாரத்திற்கு நான்கு பிரச்சனைகளை உண்டுப்பண்ணி மாட்டி முழித்து.சமார்த்தியமாக தப்பி, சில சமயம் "டேய்ய் கிருஷ்ணா" என்று அவனையும் சேர்த்து மாட்டிவிட்டு நாட்களை ஒரு விதமான பதற்றுடனே தள்ள வைக்கும் மீரா மீது கோபம் வந்தாலும்.அவளுடனான நாட்களுக்கு சுவாரசியம் குறைவில்லாமல் கழிந்தது தான் உண்மை. 

 

செமெஸ்டருக்கு மூன்று அல்லது நான்கு   லேப் இருக்கும். அந்த லேப்பில் எக்ஸ்பெரிமெண்ட்ஸ் வாரத்திற்கு ஒன்றாக  வரிசை எண்கள் படி மூன்று பேர் சேர்ந்து ஒன்று செய்வார்கள். கவிதா,கீர்த்தனா,கிருஷ்ணா,மகேந்திரன்,மீரா, மோகன், நவிதா  என்று இவர்கள் எல்லாம் வரிசை படி இருந்ததால் மூன்று பேராக சேர்ந்து செய்வார்கள். இதனாலே நட்பு ஆழமாக அனைவரது மனதிலும் வேர் விட்டிருந்தது. கவியும் மீராவும் ரூம்மேட்ஸ் என்றால்,கீர்த்தனா வீட்டிலிருந்து வருபவள் இவர்கள் மூவரும் ஒரே பெஞ்சில் அமர்பவர்கள். அதனால் நட்பு வலுவடைந்தது.

 

அவர்களின் நட்பின் பினைப்ப்பில் பாலின வேறுபாடு மறைந்தது,காரணம் மீரா தான். தமிழ்நாட்டின் வெவ்வேறு பக்க  ஊரிலிருந்து வந்து சேர்ந்த அவர்களுக்குள் புரிதலும் ஏற்றுகொள்ளும் எண்ணமும் அதிகமாக இருந்தலில் பினைப்ப்பு வலுவடைந்துக்கொண்டே போனது.

 

இதற்கிடையில் ஒரு நாள் கிருஷ்ணாவும் மஹியும்  காலேஜ் அருகிலேயே இருக்கும் அவர்கள் நண்பன் ஒருவன் ரூம் மொட்டை மாடியில் அரட்டை அடித்து கொண்டிருக்க. மீராவும் கவியும் கீர்த்தனாவின் ஸ்கூட்டி  வண்டியை வளைத்து வளைத்து வேகமாக ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தனர். மீரா முகத்தில் குறும்பு மின்ன, கவியின் முகத்தில் பயம் தாண்டவம் ஆடியது.பின்னே மெக்கானிகள் துறை சீனியர் ரேஸ் பைக் போல ஒன்றில்  வந்து துறத்தி வந்து கொண்டிருந்தனர். ஏதோ விபரீதம் போல் தோன்ற கீழே ஓடி வந்தனர் நண்பர்கள் இருவரும். கீழே வந்த பார்த்த கிருஷ்ணாவிற்கு ரத்த கொதிப்பு அதிகம் ஆனது 

 

" சீனியர்....., நான் தான் பர்ஸ்ட்,"-மீரா 

 

"பிராடு, ஒழுங்கா நம்பர் சொல்லு "-அந்த ஜிம் பாடி சீனியர் 

 

"அண்ணா அப்போ நீங்களும் பிராடு தான் "-கவி 

 

பார்க்க பார்க்க கிருஷ்ணாவிற்கு பற்றிக்கொண்டது. கிட்டதட்ட அங்கே ஆறு ஏழு சீனியர் பையன்கள் இருந்திருப்பார்கள். அவர்கள் எல்லோர் பார்வையும் அவர்கள் இருவர் மீது தான். அதுவும் அழகோவியம் கவியின் மேல் தான். கிருஷ்ணாவின் எரிச்சல் இது .அதில் நெற்றியில் குங்குமம் வைத்துகொண்டு ஆஜானுபாகுப் போல் ஒருவன் அவன் மட்டும் தான் வேறொரு பக்கம் பார்த்து கொண்டிருந்தான்.

 

"யார் கிட்ட எப்படி பழகனும் என்று இந்த ராங்கிக்கு தான் தெரியாது,  கவிக்கும் ஏன் இப்படி புத்தி போகுது" என்று அழுது வடியும் முகம் வைத்துக்கொண்டு கிருஷ்னா  கேட்க மஹிக்கு சிரிப்பு தான் வந்தது.

 

கிட்டே போகும் போது காதில் "அவங்க போன் நம்பர்ல  மூன்று ஒன்பது வரும் இப்போதைக்கு அவளோ தான் " என்று கண்டிஷன் போடுவதுப்போல் மீரா சொல்லிக்கொண்டிருந்தாள் 

 

கிட்டே வந்த இருவரையும் பார்த்தவர்கள் இவர்களை பிடித்துகொண்டனர் 

 

'எந்த டிபார்ட்மெண்ட் டா நீங்க " கவியை உற்று பர்துகொண்டிருந்தவன் சீன் போட அதிகாரமாக கேட்க 

 

"ஹலோ அவன் என் நண்பன்," மீரா கர்வமாக கூறினாள் 

 

"தோபாரு டா!' கலாய்க்க ஆரம்பித்தனர் 

 

பின் பல விசாரிப்புகள் பின் அங்கே தோழமை வளர்ந்தது. அந்த கும்பலின் தலைவன் போல் இருந்த சீனியர் வில்லியம்ஸ் இவர்கள் டிபார்ட்மெண்ட் சீனியர் அக்கா உத்ரா மேனன் என்னும் அக்காவிற்கு நூல் விடுகிறானாம் அதற்க்கு மீரா உதவனுமாம். கேட்டு கடுப்பாகி   ஹாஸ்டல் வந்தால்… இவர்கள் சீனியர் பையன்கள் வந்து ரூமில் வைத்து கதற கதற அடித்து அவர்களுடன் பேச கூடாது என்று விதிமுறை விதித்து போனார்கள்.

 

நினைத்து படியே சோபாவில் தலை சாய்த்து படிதிருந்தவனுக்கு தானாக புன்னகை மலர்ந்தது.

 

ஸ்கூல் படிக்கும் காலத்தில் டீச்சர் கூட அடித்ததில்லை மஹியை.அப்படி பட்டவனை பொளந்து கட்டினார்கள் ஏன் என்று காராணம் கூட சொல்லாது.கிருஷ்ணா அழுதுகொண்டிருந்தான் அவன் கைவிரல் நகத்தை ஒருவன் ஓடிதிருந்தான். பொலபொல வென்று இரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. கிளம்புகையில் ஒருவன் 

 

"உத்ரா என் ஆளு, அந்த வில்லியம்ஸ் கிட்ட போய் சொல்லுங்கடா" மிரட்டும் தொனியில் கண்களை உருட்டி தூது விட்டு போனான்.

 

போட்டிருந்த பனியன் கிழிந்து போயிருந்தது மஹிக்கு.கிருஷ்ணாவிற்கு அவன் பெரும்பாடா பான்ட் இடுப்பிலே இல்லை. வலியில் புரண்டுகொண்டு இருந்த போதும் கிருஷ்ணா மீராவை திட்டிகொண்டிருந்தான். மஹியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தால் கண்ணம் வலித்தது. இவர்களே சண்டை போட்டுகொண்டதாக பொய் சொல்லி காலேஜ் டிஸ்பென்சரியில் வைத்தியம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

      

இரண்டு நாட்கள் விடுப்பெடுத்து ரூமிலே இருந்தார்கள்.இரண்டாம் நாள் ராத்திரி நடு இரவில் மீரா மஹியை உலுக்குவதுப்போல் இருந்தது. கண் விழித்தவன் மிரண்டுபோனான் மீரா எதிரில் இருந்தாள். கூட அந்த வில்லியம்ஸ்,மற்ற இரு பையன்கள். கிருஷ்ணா மீராவை வசைபாடி கொண்டிருந்தான். கவியும் வந்திருந்தாள்.ஓரமாக நின்றுக்கொண்டு பாவமாக பார்த்துக்கொண்டிருந்தாள். இது  ஆண்கள் விடுதி. இப்படி இந்த நேரத்தில் பெண்ணை பார்த்தால் மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று மூளை யோசிக்க. மீரா சாதரணமாக 

 

"எப்படி டா கிருஷ்ணா இருக்க.."

 

"சனியனே உன்னால தான் இதெல்லாம் என் கிட்ட பேசாதே போடி"

 

"அப்படியெல்லாம் சொல்லாத கிருஷ்ணா உனக்காக தான் நாங்க இப்படி ரிஸ்க் எடுத்து வந்திருக்கிறோம்"-கவி 

 

கிருஷ்ணா அடங்கிவிட்டான்.

 

"என்னடா நாங்க ஏதாவது பன்னட்டும்மா"-வில்லியம்ஸ் 

 

"அயோ அண்ணா போதும் எங்களை விட்ருங்க, ஒரு தடவை சும்மா பேசுனதற்கே இப்படியா??? போதும் வலி தாங்கல"- மஹி

 

அதற்க்கு பின் நாட்கள் இனிதாக பறந்தது சீனியர்களை சமாளித்து.

 

அந்த உத்ரா மேனன் நிஜமாகவே அழகாய் இருந்தாள். மீரா அவளை "பார்ன் இன் கேலிகேட் பிராட்அப்  இன் கல்கட்டா" என்பாள். நிஜமாகவே கேரள,பெங்கால  இரண்டு மாநில கலவையாக அழகுன் மிளிறினாள். சுருள் முடி, கொழுகொழுவென கன்னம்,சந்தன மேனி,ஒளிரும் கண்கள் .அவள் நிறத்திற்கு ஏற்ப உடை எடுப்பாக  என்று பார்போரை ஈர்பவளாக தான் இருந்தாள். 

 

அந்த நாள் வலியும் கிருஷ்ணாவின் வசவும் மீராவின் அக்கறையும் எல்லாம் நினைவில் வர  குலுங்கி குலுங்கி சிரத்தான் மஹி. மலரும் நினைவுகள் என்றுமே மாறாத வாசம் கொண்டது.  பலமாக வீசிக்கொண்டிருந்தது மகேந்திரனுக்குள்.  

 

தொடரும்

Go to Ninaikkatha naal illai rathiye 05

Go to Ninaikkatha naal illai rathiye 07

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.