(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“இவன் பார்க்கவும் ராஜா போல தான் இருக்கான். தேங்க்ஸ் பாட்டி.”

  

பாட்டிக்காக பெயருக்கு சொல்லி விட்டு, அறைக்கு வந்த சக்தி, அந்த பதினைந்து வயது ஒல்லிக் குச்சி சிறுவனை zoom செய்துப் பார்த்தாள். ஒரு ஐடியா தோன்றவும், அவளுடைய லேப்டாப்பில் மொபைலை கனக்ட் செய்து அந்த போட்டோவை age progression சாஃப்ட்வேரில் போட்டுப் பார்த்தாள்.

  

பதினைந்து வருடங்களுக்கு பிறகு அவன் எப்படி இருப்பான் என்று சாஃப்ட்வேரில் அவள் கேட்ட கேள்விக்கு திரையில் பதில் வந்தது.

  

ஓட்டடடைக் குச்சி போல வந்த உருவத்தை பார்த்து முகத்தை சுளித்து விட்டு, உயரத்தை குறைத்து, உடல் வாகை கொஞ்சம் மாற்றி, மீசை வைத்து என்று எது எதுவோ சில நிமிடங்கள் செய்தவள் மாறி மாறி வந்த தோற்றங்களை பார்த்து, புது புது மாற்றங்கள் செய்துக் கொண்டே இருந்தாள்.

  

ஓரளவிற்கு மேல் சாஃப்ட்வேரே அலுத்துப் போய் கிராஷ் ஆகி விட, வேறு என்ன செய்வது என்றுப் புரியாமல் தூங்கப் படுத்தாள் சக்தி. விசாரணை, துப்பு துலக்குவது, ஃபோரன்சிக், ரிப்போர்ட், கோர்ட் என்று பழகிப் போயிருந்தவளுக்கு இந்த அமைதியான வாழ்க்கை அதற்குள் அலுப்பைக் கொடுத்தது.

  

எதை எதையோ யோசித்தவளுக்கு, முன் தினம் சத்யா சொன்ன கேஸ் ஞாபகம் வந்தது. துப்பு கிடைக்காமல் 'கோல்ட் கேஸாக' மாறி போயிருக்கும் அந்த வழக்கில் சம்மந்தப் பட்ட அஹல்யாவை எல்லோரும் சந்தேகக் கண்ணுடனே பார்க்கிறார்கள் என்பது சத்யாவின் கவலை.

  

இதை அவள் கணவன் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனிடமே சொல்லலாமே என்பது தான் சக்திக்கு முதலில் வந்த கேள்வி.

  

“அவர் நல்ல ஹஸ்பன்ட் சக்தி. ஆனா, இப்படி வேலை விஷயத்துல நான் மூக்கை நுழைச்சா அவருக்குப் பிடிக்காது. அப்புறம் என் கிட்ட அவர் ஷேர் செய்ற ஒன்னு இரண்டு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.