(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“என்னது?”

  

“தேன் சார் கிட்ட வந்த கேஸ் தான். சேகரன்னு ஒருத்தன் செத்துப் போயிட்டான். இவ தான் கொலை செஞ்சுட்டான்னு சொல்றாங்க. இவ இங்கே வந்த நாள்ல இருந்து அந்த சேகரன் இவ வீடே கதின்னு தான் இருந்தான்.”

  

“ச்சே... அப்படியா???”

  

சத்யா curiosity பில்ட்-அப் கொடுத்து சவீதாவை அவள் போக்கில் பேச செய்வதை மெச்சுதலுடன் கவனித்தாள் சக்தி.

  

“ஆமாம்... எப்போ பாரு, ஒரே பேச்சு என்ன, சிரிப்பு என்ன! நான் கூட முதல்ல தப்பா யோசிக்கலை.”

  

“அஹல்யாக்கும் சேகரனுக்கும் நடுவில ஒன்னுமில்லைன்னு அஹல்யா சொல்லி இருக்காங்களே. போலீஸ் ரெகார்ட்ல கூட இருக்கு,” எனக் கேட்டாள் சக்தி.

  

சக்தியை இப்போது சந்தேகத்துடன் பார்த்தாள் சவீதா.

   

தோழியின் மனதை புரிந்துக் கொண்டு,

  

“சக்தி போலீஸ் டிபார்ட்மென்ட்ல இருந்தவங்க சவீதா,” என சத்யா சக்தியின் ஆர்வக் கோளாறுக்கான காரணத்தை சொன்னாள்.

  

“அப்படியா? சரி, சரி!” என சவீதாவும் ஏற்றுக் கொண்டாள்.

  

“ஆமா சவீதா, சக்தி சொன்னது மாதிரி அஹல்யா சேகரனை தெரியும் அவ்வளவு தான்னு சொல்லி இருக்காங்க. நீ என்ன வேற என்னமோ சொல்ற?” என சத்யா மீண்டும் சவீதாவை அஹல்யா விஷயத்திற்கு அழைத்து வந்தாள்,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.