வந்து விடுவாள்... மனதில் இருக்கும் வருத்தங்கள், குறைகள் அனைத்தையும் ராஜமிடம் கொட்டி தீர்த்தால் அவளுக்கு மனம் கொஞ்சம் லேசாகும்...
“அடுத்த தடவை வரும் போது ப்ரியா போட்டோ ஓன்னு கொடுங்க அக்கா... நானும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வைப்பேன்...”
“அடுத்த தடவை என்ன, இப்போதே தரேன்... போன தடவை போன போது குணா மொபைலில் எடுத்த போட்டோவை பிரிண்ட் போட்டு அவக் கிட்ட கொடுக்க வச்சிருக்கேன்...”
பையில் இருந்து வைஜெயந்தி எடுத்து கொடுத்த போட்டோவை வாங்கி பார்த்த ராஜமின் மனம் கனிந்தது. எத்தனை சிம்பிளாக இருக்கிறாள்! ஆனால் அதிலும் களையாக இருக்கிறாள்!
“ஏங்க, இது தான் ப்ரியா போட்டோ... பத்திரமா வைங்க, நல்ல பையனா யாரவது இருந்தால் பார்ப்போம்...” என சொல்லி போட்டோவை கணவரிடம் கொடுத்தாள் ராஜம்.
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...