(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 04 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

விஜய் சொன்ன அவளின் நிஜப் பெயரை விட, அவன் பதிலில் இருந்த 'தியாகு' யார் என்றக் கேள்வி 'நிலா'வை குடைந்தது!

   

மிருதுளாவிற்கும் அதே கேள்வி எழுந்தது போலும்!

   

தியாகு யாரு??? இந்த போட்டோல இருக்குறவங்க யாராவதா?”

  

மிருதுளா கேட்ட கேள்விக்கு வேகமாக தலையை அசைத்தான் விஜய்!

   

இல்லை இல்லை, தியாகு பிரின்சஸோட ஹஸ்பன்ட்!”

  

என்ன????” வெற்றி, மிருதுளா இருவருமே நம்ப முடியாமல் ஒன்றாக கேட்டார்கள்.

  

நிலா அதிர்ச்சியில் உறைந்து அசையாமல் நின்றாள்! அவளுக்கு திருமணமாகி விட்டதா??? அவளால் நம்பவே முடியவில்லை!!!

   

விஜய் அவர்கள் நான்குப் பேரையும் மாறி மாறி பார்த்தான்... பிறகு தயக்கத்துடன் பேசினான்!

   

ஆமாம், தியாகுக்கும் இவளுக்கும் கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆச்சு. ஆனால், இரண்டு பேருக்கும் நடுவே சின்ன பிரச்சனை...”

  

அவன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனின் செல் ஃபோன் ஓசை எழுப்பியது. ஃபோனை எடுத்துப் பார்த்தான்.

  

என்னோட வைஃப் கூப்பிடுறா... அவக் கிட்ட பேசிட்டு வரேன்...” என்ற விஜய், மிருதுளாவை இப்போதும் கலக்கத்துடன் அணைத்தப் படி நின்றிருந்த நிலாவை பார்த்து, தன் பர்ஸை அவளிடம் கொடுத்தான்.

  

இந்த போட்டோவை பார்த்தால் உனக்கு ஏதாவது ஞாபகம் வருதான்னு பாரு பிரின்சஸ்...” என்று சொல்லி விட்டு நடந்து சென்றான்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.