(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

நினைத்துக் கொண்டான்

  

24 மணி நேரம் கடந்தும் கோவலன் வீடு திரும்பாமல் போனது கண்ணகிக்கு வருத்தமாக இருந்தது, அதைக்கண்ட ஈஸ்வரமூர்த்தி உடல்நிலைமை மோசமாகி மயங்கி விழ அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தார்கள், மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார் ஈஸ்வரமூர்த்தி, கண்ணகிக்கு யாரை நினைத்து கவலைப்படுவது என்றே தெரியவில்லை, ஆஸ்பிட்டல் வராண்டாவில் பதட்டமாகவும் கவலையுடன் காத்திருந்தாள், மருத்துவரும் ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின் தாத்தாவின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக கூற அவள் அதிர்ந்தாள், இந்நேரம் கோவலன் இருந்தால் தாத்தாவின் உடல்நிலை தேறுமே எங்கே சென்று அவனை தேடுவது என்றுதான் யோசித்தாள்.

  

அதே நேரம் அவ்விடம் யாரும் எதிர்பார்க்காமல் சிலம்பு வந்து இறங்கினான். அவனைக்கண்டதும் உதயமூர்த்தி கோபம் கொண்டார்

  

“டேய் துரோகி, நீ இங்கதான் இருக்கியா உன்னால கல்லூரிக்கு எவ்ளோ பெரிய கெட்ட பேரு பாவம் கண்ணகி ஒரு நாள் முழுக்க போலீஸ் லாக்கப்ல இருந்தா மனுஷனாடா நீ உன்னை என்ன செய்றேன் பாரு இப்பவே உன்னை போலீஸ்ல பிடிச்சி கொடுக்கிறேன்” என மிரட்ட அவனோ பயப்படுவது போல பாவ்லா செய்துவிட்டு பின் கலகலவென சிரித்தான்

  

”நானாச்சும் என்னோட சுயநலத்துக்காக துரோகம் செய்தேன் ஆனா மத்தவங்க தெரிஞ்சே துரோகம் செய்றாங்க, முதல்ல அவங்களை சரியாக்கற வழியைப் பாருங்க“

  

”டேய் நீ யாரைடா சொல்ற”

  

”கோவலனைப் பத்தி”

  

“நிறுத்துடா இனி நீ இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது, உன் வாயில இருந்து பொய்தான் வரும் கிளம்புடா போடா” என விரட்ட கண்ணகி உள்நுழைந்து உதயமூர்த்தியை நிப்பாட்டினாள்

  

”இருங்க சார் பொறுங்க விசயம் இல்லாம இவன் வரமாட்டான், என்ன ஏதுன்னு விசாரிக்கலாம் அமைதியா இருங்க சார்” என சொல்ல அவரும் சற்று அமைதியானார்.

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.