(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”வெறும் ஈஸ்வரனா இருந்த உன்னை சங்கமேஸ்வரனா மாத்தினது யாரு”

  

”கீழவீதி மேலவீதின்னு ஊரையே ரெண்டாக்கி அதுல நீ சந்தோஷப்படறியே, இதனால உனக்கு என்ன கிடைச்சது”

  

”அதிகாரம்” என்றார் சங்கமேஸ்வரன் கம்பீரமாக

  

”அதிகாரம் என்ன பெரிய அதிகாரம், கூடிய சீக்கிரத்தில அந்த அதிகாரத்தை உன்கிட்ட இருந்து பறிக்கிறேன்”

  

”அது உன்னால முடியாது, மக்கள் மனசுல ஆழபதிஞ்ச விசயத்தை அவ்ளோ சீக்கிரம் கலைச்சிட முடியாது, அதுக்கு நீ இன்னொரு பிறவி எடுத்துதான் வரனும்”

  

”இன்னொரு பிறவி எதுக்கு அதான் அகத்தியன் இருக்கானே, நாச்சியாவை வைச்சே அவனை என்பக்கம் இழுத்து உன்னை ஒரு வழியாக்கல நான் ஆண்டாள் நாச்சியாவே இல்லை” என கர்ஜித்த மறுநொடி மூடப்பட்ட அனைத்து ஜன்னல்களும் திறந்துக் கொண்டது. அறையில் இருந்த மின்விளக்குகள் ஒளிர்ந்தன, அறைக்கதவு பட்டென திறந்துக் கொண்டது, ஒரு நொடி கனவு போல தோன்றியது சங்கமேஸ்வரனுக்கு, அங்கு நாச்சியா இல்லை. அதற்காகவே எழுந்து அக்கம் பக்கம் பார்வையிட்டார். முடிவில் இது கனவுதான் என நினைத்து மகிழ்ந்து அந்த மகிழ்ச்சியுடனே படுக்கையை விட்டு எழுந்து நின்றார்.

  

தனக்குள் புதுபலம் வந்துவிட்டதாக எண்ணி உற்சாகத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

  

அதே வீடுதான், எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அவரவர்கள் தங்கள் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள் சங்கமேஸ்வரனும் வீட்டைச் சுற்றி பார்த்துவிட்டு திருப்தியானார்

  

”நாச்சியா இங்க இல்லை” என அவருக்கு அவரே சொல்லியபடி நிம்மதி பெருமூச்சுவிட்டு தன் அறைக்கு திரும்ப எத்தனித்த நேரம் அவருக்கு ஏதோ ஒரு நெருடல் உண்டானது. ஏதோ ஒன்று தவறாக இருப்பதாக அவரின் உள் மனது சொல்லவும் அதற்காகவே மறுபடியும் சுற்றி முற்றி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.