(Reading time: 6 - 12 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

முழுக் காரணம் புரியவில்லை... ஆனாலும் தங்கையை பற்றி அவளிடம் சொல்ல விரும்பியவனாய்,

  

"என் தங்கை ரொம்ப சுயமரியாதை பார்க்குறவ ஆர்த்தி. இப்போ அவ படிக்குறது கூட அவளுடைய மார்க்ஸ்ல கிடைச்ச சீட்டில தான்... கவர்ன்மெண்ட் காலேஜ்ல எம்.பி பி.எஸ் சீட் கிடைக்குறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கே தெரியும் தானே? வர்ஷாக்கு டாக்டர் ஆகணும்னு சின்ன வயசுல இருந்தே ஆசை. ஆனாலும் கூட, அவளுடைய மார்க்ஸ்ல சீட் கிடைக்கலைன்னா என்ஜினீயரிங் இல்லன்னா ஆர்ட்ஸ் காலேஜ் போவேன் காசு கொடுத்து எல்லாம் படிக்க மாட்டேன்னு சொன்னவ அவ..." என்றான்!

  

ஆர்த்தி கேஷுவலாக தோள்களை ஏற்றி இறக்கினாள்!

   

"இப்போ கெட் வெல் ஹாஸ்பிட்டல் வேலைக்கு யாரோ ரெகமெண்ட் தான் செய்தாங்கன்னு உங்க அம்மா சொன்னாங்க! நீங்க இபப்டி சொல்றீங்க!?"

  

"ப்ச்... அப்படி இல்லை ஆர்த்தி, வர்ஷாவுடைய டேலன்ட் தெரிஞ்சு வந்த ஆஃபர் இது... அவளுடைய சீனியருக்கு அவ திறமையை பத்தி நல்லா தெரியும்.."

  

"ப்ச்... என்னவோ..."

  

"ஹேய், என்ன விஷயம்? வர்ஷா ஏதாவது உன் கிட்ட சொன்னாளா? அவ அப்படி எல்லாம் ஹர்ட் செய்ற மாதிரி எதுவும் பேச மாட்டாளே? எதுவா இருந்தாலும் என்னன்னு என் கிட்ட சொல்லும்மா..."

  

விக்கிராந்தின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதை உறுத்த,

  

"அப்படி எல்லாம் எதுவுமில்லை விக்கி. என்னவோ கொஞ்சம் குழப்பமா இருந்தது... இப்போ உங்களோட பேசின பிறகு எல்லாம் சரி ஆயிடுச்சு..." என்றாள் ஆர்த்தி சின்ன புன்னகையோடு.

  

விக்கிராந்தின் முகத்திலும் மலர்ச்சி தோன்றியது.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.