மதியூர் மிஸ்டரீஸ் : 2 : தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 02 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
மெல்ல தன்னை சமாளித்துக் கொண்ட ப்ரியம்வதா, வினாயக்கின் பேச்சை நினைவுக்கு கொண்டு வந்து, “மீதினா?” என புரியாமல் வினவினாள்.
அலுப்புடன் தலை முடியை கோதிக் கொண்ட வினாயக், “என்னோட சைபோர்க் டிசைனை எடுக்க விடலை ப்ரியம்வதா. லேப்டாப், usb டிரைவ்ன்னு எல்லாத்தையும் செக்யூரிட்டி என் கிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க. இப்போ கம்பெனி ரகசியத்தை திருட முயற்சி செய்தேன்னு கம்ப்ளெயின்ட் வேற கொடுத்திருக்காங்க,” என்றான்.
“நீ என்ன செய்ய போற வினாயக்?”
“கேஸை ஃபேஸ் செய்யப் போறேன். அதுல ஜெயிக்க போறேன். என் சைபோர்க்கை திரும்ப வாங்கப் போறேன்!”
“இதெல்லாம் தேவையா வினாயக்? அவங்க பணம் படைச்சவங்க. சும்மாவே கூட கேஸை இழுத்து உன் டைம், பணத்தை எல்லாம் வேஸ்ட் செய்வாங்க!”
“என்ன தான் நடக்குதுன்னு பார்ப்போமே. இறங்கனும்னு முடிவு செய்தாச்சு. இறங்க தான் போறேன்.”
“சரி, ஆல் தி பெஸ்ட். நான் ஏதாவது உதவி செய்யனுமா?”
“இல்லை இல்லை அப்படி எதுவும் வேண்டாம். அன்னைக்கு மீட்டிங்க்ல உன் கிட்ட சொல்லாமலே வந்துட்டேன். அதான் நேரா பார்த்து பை சொல்ல வந்தேன்!”
ப்ரியம்வதா அதிசயத்துடன் வினாயக்கை பார்த்தாள்.
“இப்படி வந்ததும் நல்லதா போச்சு. உன்னை முதல் டைம் சுரிதார்ல பார்க்குறேன். இதுவும் உனக்கு நல்லா இருக்கு."
பேசிக் கொண்டே போன வினாயக், ப்ரியம்வதாவின் முக மாற்றத்தை கவனித்து, "ஹேய்,