(Reading time: 22 - 44 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”சே என்ன இப்படி ஆயிடுச்சி ஆமா எங்கப்பாவை பார்க்க போனீங்களா”

  

”என்னால எப்படி இந்த கோலத்தில அவரை பார்க்க முடியும் சொல்லு”

  

”இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம்”

  

”சே சே அப்படியில்லை சரியான புரிதல் இல்லாததுதான் காரணம் ஆண்டாள், எனக்கு ரொம்ப வலிக்குது காயத்துக்கு மருந்து தருவியா”

  

”ஓ கண்டிப்பா இதோ” என்றவள் அங்கு இங்கு என ஓடி மருந்து கொண்டு வந்து அவனிடம் தர அவனும் அதை வாங்கி காயப்பட்ட இடத்தில் வைத்துக் கொண்டான், எரிச்சல் மிகுதியால் ஆஆ என அலறவும் செய்ய ஆண்டாளின் கண்கள் கலங்கிவிட்டது

  

”ஆண்டாள் நீ எதுக்காக கண்கலங்கற எனக்கு ஒண்ணுமில்லை”

  

”சரி இப்ப நீங்க கிளம்பறீங்களா”

  

”கிளம்பறதா சரியா போச்சி விசயத்தை சொன்னதுக்கே என்னை வெட்டிட்டாங்க, இப்படியே நான் ஊருக்குள்ள போனேன் விடியறதுக்குள்ள என்னை கொன்னு சடலமாக்கிடுவாங்க”

  

”அய்யோ வேணாம் வேணாம் நீங்க எங்கயும் போக வேணாம்“

  

”வேற நான் எங்கதான் தங்கறது, ஒரே அசதியா இருக்கு, பசி வேற மயக்கமே வரும்போல இருக்கு ஆண்டாள்”

  

”நான் உங்களுக்கு தங்க இடம் காட்டறேன் வாங்க” என அவனை அழைத்துக் கொண்டு ஒரு அறையில் தங்க வைத்து அவனுக்கு சாப்பாடும் தந்தாள்.

  

”ஆண்டாள் உண்மையிலயே உனக்கு நல்ல மனசுதான், ஆவுடையப்பன் பொண்ணா நீ,

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.