(Reading time: 17 - 34 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

தொடர்கதை - விடுகதையாய் இந்த வாழ்க்கை - 11 - சசிரேகா

   

வீட்டிற்கு திரும்பிய ஹரிணிக்கு என்னென்னவோ யோசனைகள், மனது ஒரு நிலையில் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்தது. தருணின் மீது கொலை வெறியுடன் இருந்தாள், இப்போது அவன் மட்டும் சிக்கினால் சிறிதும் யோசிக்காமல் அவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு கூட போய் வருவாள், அந்தளவுக்கு கோபத்தின் உச்சியில் இருந்தாள். 

   

”எவ்ளோ திமிரு அவனுக்கு, எல்லாரையும் போல என்னையும் தப்பா எடை போட்டு வைச்சிருக்கான், கொஞ்சம் இறங்கிப் போனா தலைக்கு மேல ஏறி நின்னு ஆடறானே வரட்டும், இன்னிக்கு அவனா நானான்னு பார்க்கிறேன், இளங்கோவுக்காகவும் பவானிக்காகவும் தான் நான் பொறுத்துப் போறேன், இனியும் பொறுமையா இருந்தா வேலைக்கு ஆகாது வரட்டும்” என காத்திருந்தாள்.

   

தருணும் வீட்டிற்கு வந்தான், வரும்போதே மல்லிகைப் பூ, அல்வா என வாங்கி வந்தான். அவனைக் கண்டதும் கோபத்தில் பொங்க வர அவனோ சட்டென பூவைத் தந்தான்

   

”இந்தா ஹரிணி பூ வாசமா இருக்கு, பாரு தலையில வைச்சிக்க அப்புறம் உனக்காக அல்வா வாங்கிட்டு வந்திருக்கேன், அதையும் சாப்பிடு டேஸ்ட் சூப்பரா இருக்கும்” என சொல்ல அவளோ அதற்கெல்லாம் மசியவில்லை அவனை விரோதியை போல பார்த்து வைக்க

   

”சாரி ஹரிணி நான் உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது தப்புதான், அதுக்கான சரியான தண்டனை நீ எனக்கு அப்பவே கொடுத்துட்ட, இனி காலத்துக்கும் உன்கிட்ட கடுமையா நடந்துக்க மாட்டேன் இது சத்தியம்” என சொல்ல அவளோ வியப்பாக அவனைப் பார்த்தாள்

   

”என்ன அப்படி பார்க்கற குழந்தை வேணும்னு ஆசைப்பட்டல்ல, வா நான் உனக்கு குழந்தை தரேன் வா” என அழைக்க அவளோ குழம்பினாள்

   

”என்ன குழப்பமா இருக்கா ஏதோ நமக்கு வசதி வாய்ப்பு இருக்கே, நம்மால ஒருத்தருக்கு நல்லது நடந்தா புண்ணியம் சேருமேன்னு குழந்தையை தத்து எடுக்கலாம்னு நினைச்சேன் ஆனா, நீ யாருக்கோ பிறந்த குழந்தையை வளர்க்க தயங்கற, சரி பரவாயில்லை என்னைப் போல பரந்த மனசு உனக்கு இல்லை, இட்ஸ் ஓகே நானும் பலமா யோசிச்சிட்டேன் இப்ப என்ன உனக்கு குழந்தை வேணும், அதானே நான் ரெடி வா ஆரம்பிக்கலாம்” என அழைக்க 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.